TamilSaaga

இந்த மனசு தாங்க கடவுள்… இந்திய பணிப்பெண்ணிற்கு 25 லட்சத்தில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர் தம்பதியினர்!

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்கள் இன்னல்களை அனுபவிக்கும் செய்திகளை நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். மேலும் பாதிக்கப்படும் பெண்களை இந்திய தூதரங்கள் வெற்றிகரமாக மீட்டு இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் வகையில் இந்தியாவிலிருந்து தன் வீட்டிற்கு வேலைக்கு வந்த பெண்ணிற்கு சொந்த ஊரில் வீடு வாங்கி தந்து மனிதாபிமானத்திற்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றனர் சிங்கப்பூரை சேர்ந்த தம்பதியினர்.

தங்களுடைய வீட்டை நிர்வாகம் செய்வதே எங்களது பணிப்பெண் தான் என்று பெருமையுடன் கூறுகின்றனர். மேலும் அவரை குடும்பத்தின் ஒரு உறுப்பினராக கருதி வாரந்தோறும் சர்ச்சுக்கு அழைத்துச் செல்வது, பணிப்பெண்ணின் வீட்டு விசேஷத்திற்கு இவர்கள் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வது என தங்கள் குடும்பத்தின் நபரைப் போலவே அவரை நடத்துகின்றனர்.

2014 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கை சேர்ந்த ராணா மம்தா என்னும் பெண்மணி சிங்கப்பூரில் உள்ள ஹாரிசன் என்பவர் வீட்டிற்கு பணிப்பெண்ணாக சென்றார். இதுகுறித்து வீட்டின் முதலாளி கூறும்பொழுது மம்தா எங்க வீட்டிற்கு வருவதற்கு முன்னர் எங்கள் வீட்டில் பல பிரச்சனைகள் இருந்தன. ஆனால் அவர் வேலைக்கு வந்ததற்கு பின்பு எங்களுக்கு வீட்டின் நிர்வாகிப்பதில் இருந்த பெரும் சிரமம் குறைந்ததாக கூறினார். சிங்கப்பூரில் அரசாங்க வேலையில் இருக்கும் வீட்டின் உரிமையாளர் கூறும் பொழுது அவர் எங்களுக்கு பணிப்பெனாக கிடைத்தது நாங்கள் செய்த பாக்கியம் என்று கூறினார்.

இந்தியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் யாரும் இல்லாத சமயத்தில் அவருக்கு இந்தியாவில் சொந்த வீட்டினை வாங்கி கொடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் அந்த வீட்டின் புதுமனை புகுவிழாவிற்கும் அவர்கள் நேரில் சென்று வாழ்த்தி அவரது மகிழ்ச்சியில் பங்கேற்று உள்ளனர். இவர்களது உன்னதமான உறவை பாராட்டி சிங்கப்பூரில் சிறந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் பணிப்பெண் விருதினை இவர்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இது ஒன்று அனைவரும் வீட்டிற்கு வரும் பணிப்பெண்ணை மதித்து நடந்து கொண்டால் இருவரின் வாழ்க்கையும் சிறப்பாக அமையும்.

Related posts