TamilSaaga

மார்னிங் Breakfast + லன்ச் + சம்பளம்”.. பிரபல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! ஒரு ரூபா செலவில்லாமல் Apply பண்ணலாம்!

இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் கனவும் நல்ல கம்பெனியில் சேர வேண்டும் நல்ல சம்பளத்தை பெற வேண்டும் சீக்கிரம் வீடு கார்னு எல்லோரையும் போல சராசரியான ஆசைகளோடு செட்டில் ஆக வேண்டும் என்பது தான். ஆனால் இதெல்லாம் அவ்வளவு ஈஸியா நடந்து விடாது. இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த இந்த காலகட்டத்தில் திறமை இருந்தாலும், படிப்பு இருந்தாலும் நல்ல வேலை கிடைப்பது என்பது ” குதிரை கொம்பு” தான். இதெல்லாம் கஷ்டம் அப்படின்னு அமர்ந்து விட்டால் எதுவும் தானாக நடக்காது, ஆனால் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தா நம்ம இலக்க ஒரு நாள் அடைய முடியும்.

அதற்கான ஒரு வாய்ப்பாக தற்போது ஒரு MNC நிறுவனம் இரண்டு வேளை உணவோடு சேர்த்து சம்பளமும் தருவதாக அறிவித்துள்ளது.
அப்படிப்பட்ட அந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் நமது உணவு செலவு குறைவதோடு நம்முடைய வருமானமும் அதிகரிக்கும். இப்படிப்பட்ட ஒரு நல்ல வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள அந்த நிறுவனத்தில் எப்படி வேலைக்கு அப்ளை செய்யலாம் என்பதை விரிவாக பார்ப்போம்.

அனக்கின் (Anakin) என்ற ஐடி நிறுவனம் தான் இந்த வாய்ப்பை அறிவித்துள்ளது. சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் என்ற ரோலுக்கு தேர்வாகும் நபர்களுக்கு ‛‛பிரேக்பாஸ்ட் + லஞ்ச் + சம்பளம்” வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமில்லாம மேலும் நிறைய காலியிடங்கள் இந்த நிறுவனத்தில் உள்ளதாக தனது LinkedIn பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனம் இ-காமர்ஸ் கடைகள் மற்றும் பிராண்டுகள் தங்கள் போட்டியாளர்களின் விலை, தயாரிப்புகள் மற்றும் போக்குகளின் தரவை அனுப்புவதன் மூலம் அவற்றின் வருவாயை அதிகரிக்க உதவுகிறது. அனகின் இன்ஸ்டாகார்ட், வால்மார்ட் மற்றும் நைக் போன்ற கடைகள் தங்கள் வருவாயை அதிகரிக்க உதவுகிறது.

அனகின் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 28% வளர்ந்து வருகிறது, மேலும் 10+ நாடுகளில் 4 பில்லியன் டாலர் இணையவழி நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

இந்தியாவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் பெங்களூரில் தான் இயங்கி வருகின்றன. அவற்றில் அனக்கின் (Anakin) எனும் ஐடி நிறுவனமும் பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

தற்போதைய அறிவிப்பின்படி அனக்கின் நிறுவனத்தின் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்ஜினியர் பணிக்கு ஆட்கள் எடுக்க உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பேச்சிலர் டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம். குறிப்பாக பிடெக், எம்டெக், பிரிவில் என்ஜினீயரிங் படித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பை முடித்திருந்தால் தாரளமாக விண்ணப்பிக்கலாம்.

இந்த பணிக்கு அனுபவம் உள்ளவர்களும், Fresh candidates மற்றும் ஒரு ஆண்டு Internship முடித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வோர் Backend Programming Languages அல்லது Full Stack உள்ளிட்டவற்றில் நல்ல அனுபவம் கொண்டிருக்க வேண்டும். அதோடு Beautiful Soup, Selenium, Scarpt தெரிந்திருக்க வேண்டும். எச்டிஎம்எல், சிஎஸ்எஸ் உள்ளிட்டவற்றை புரிந்து வைத்திருக்க வேண்டும்.

மேலும் Web crawling, Scraping Knowledge, Reverse Engineering, Rdis, Kubernotes, Django/Flask அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனக்கின் நிறுவனம் நேரடியாக தனது இணையதளத்தில் வேலை வாய்ப்புகளை அறிவித்திருப்பதால் ஒரு ரூபாய் செலவில்லாமல் இந்த பணிக்கு நாம் அப்ளை செய்ய முடியும்.

இந்த அனக்கின் நிறுவனம் இந்தியா, அமெரிக்க மற்றும் சிங்கப்பூரிலும் இயங்கி வருகிறது ஐடி துறையில் இருப்பவர்கள் அனக்கின் சிங்கப்பூர் இணையதளத்தில் சென்று தங்களது திறமைக்கேற்ற வேலைக்கு அப்ளை செய்யலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts