TamilSaaga

சிங்கப்பூரில் SPass வேலைக்கு போறீங்களா? இந்த டாப் 10 துறைகளில் தான் அதிக வேலைவாய்ப்புகள் இருக்காம்… பிடிங்க லிஸ்ட்… கியாரண்டியா வாழ்க்கை இருக்கு!

சிங்கப்பூர் வேலைக்கு என ஏகப்பட்ட நாடுகளில் இருந்து இளைஞர் தினமும் விமான நிலையம் வந்து இறங்குவது என்பது தொடர்கதையாகி இருக்கிறது. அதிலும் இந்தியர்கள் எக்கசக்கமாக வீட்டின் பொருளாதார தேவையை சரி செய்து விடலாம் என்ற ஆசையில் சிங்கப்பூருக்கு வந்து விடுகின்றனர். இவர்களின் வேலை பார்க்க வேண்டிய துறை கல்வி தகுதியை சார்ந்து இருந்தால் பிரச்னை இல்லை. ஆனால் தெரியாதவர்கள் எப்படி துறையை தேர்ந்தெடுக்கலாம்.

சரியான சம்பளமும், அதிக வேலைவாய்ப்புகளை தரும் சிங்கப்பூரில் இருக்கும் டாப் 10 துறைகள் குறித்த முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். கீழ்கண்ட துறைகளில் வேலை தேடுங்கள். கண்டிப்பாக சூப்பர் வேலைகள் கிடைக்கும். எப்போதுமே அதிக வேலைவாய்ப்புகளை கொண்டு இருக்கிறது.

*Business Management

சிங்கப்பூரில் அதிக ஸ்கோப் இருக்கும் இந்த துறைகளில் தொடர்ந்து வேலைவாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. விரைவில் உங்களால் நல்ல வேலையை வாங்க முடியும். சம்பளமும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு வேலை கேட்டு அலுத்து போயிட்டீங்களா? Chill பண்ணுங்க.. நீங்களே வேலைக்கு Apply பண்ணலாம்… பிடிச்ச வேலையும் தட்டி தூக்குலாம்

*Digital Marketing

Digital marketingல் அதிக வேலைவாய்ப்புடன் நல்ல சம்பளமும் கிடைக்கும். இதில் எளிதாக வேலையை உங்களால் தட்டி தூக்க முடியும்.

*Construction

சிங்கப்பூரில் வேலைக்கு வரும் அதிக இந்தியர்களின் முதல் சாய்ஸாக இருப்பது Construction. அதிக கட்டட வேலைகள் தொடர்ந்து நடைபெறுவதால் கட்டிட வேலைக்கு அதிக வாய்ப்புகள் தொடர்ந்து இருக்கிறது.

*Social Media Marketing

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளில் முக்கியமாக இருப்பது social media marketing. சமூக வலைத்தள வளர்ச்சியால் இதற்கும் தற்போது அதிக வாய்ப்புகளுடன், சம்பளமும் கிடைப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழகத்தில் இனி Skilled Test கிடையாதா? சிங்கப்பூரில் வேலைக்கு வர நினைப்பவர்களுக்கு இனிப்பான செய்தி! இந்த நியூஸை படிச்சிட்டு இன்ஸ்டிட்யூட்டில் பணத்தை கட்டுங்க!

*logistics

சிங்கப்பூரில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் வளர்ச்சியே அதீதமாக இருப்பதால் அதற்கு வேலைவாய்ப்புகள் தற்போது அதிகமாக இருக்கிறது. சம்பளமே அதிகமாக கிடைக்கும் மிக சில துறைகளில் இதுவும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் தொடர்ச்சியாக வேலைவாய்ப்புகளும் இருக்கும்.

*Manufacturing and production

தயாரிப்பு துறையில் எப்போதுமே அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும். சிங்கப்பூர் மாதிரியான நாடுகளும் இதில் விதிவிலக்கல்ல என்பதற்கு சான்றாக நிறைய வாய்ப்புகள் இங்கு இருக்கிறது.

*CyberSecurity

பெரிய அளவில் வளர்ச்சி பெற்றும் இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கும் துறைகளில் முக்கியமானதாக இருப்பது Cybersecurity. ஆனால் இங்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் குவிந்து இருக்கிறது. சம்பளமும் செமையா இருக்கும்.

*Sales and Marketing

மார்க்கெட்டிங் துறைகளில் எப்போதுமே எல்லா நாடுகளிலுமே அதிக வேலைவாய்ப்புகள் இருக்கிறது. அதைப்போன்றே சிங்கப்பூரில் கூட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த துறைகளில் சம்பளமும் அதிகம் என்று கூறப்படுகிறது.

*Marine shipyard

pcm பெர்மிட் மற்றும் ஸ்கில் அடித்து வரும் ஊழியர்கள் இந்த துறையில் அதிகம் என்பதால் சிங்கப்பூரில் இதில் நிறைய வேலைவாய்ப்புகள் இருக்கிறது. தொடர்ச்சியாக கூடுதல் சம்பளம் மட்டுமல்லாமல் வேலை உறுதியாகவும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

*IT

information technology துறைக்கு எப்போதுமே மவுஸ் அதிகம் தான். இங்கு மட்டும் விதிவிலக்கா என்ன. இந்த துறையில் கூட தொடர் வேலைவாய்ப்புடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்து வருகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts