TamilSaaga

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான CDC வவுச்சர்கள்.. நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவிப்பு.. எப்படி பெறுவது? – லிங்க் உள்ளே

சிங்கப்பூரில் 1.22 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்கள் இன்று புதன்கிழமை (மே 11) முதல் மற்றொரு S$100 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு கவுன்சில் (CDC) வவுச்சர்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாபாரிகள் மற்றும் வணிகர்களுக்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் தினசரி செலவினங்களுக்கு குடும்பங்களுக்கு உதவுவதற்காக இந்த வவுச்சர்களின் சமீபத்திய தவணையானது, நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் 2022 பட்ஜெட்டில் அறிவித்த S$560 மில்லியன் வீட்டு உதவித் தொகுப்பின் ஒரு பகுதியாகும்.

சிங்கப்பூரில் வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ள உலகளாவிய விலை உயர்வுக்கு மத்தியில், இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த வவுச்சர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதி வரை தகுதியுள்ள சிங்கப்பூர் குடும்பங்கள் இந்த வவுச்சரைப் பெறவும், செலவு செய்யவும் முடியும்.

எப்படி பெறுவது ?

வவுச்சர்களைப் பெறுவதற்கான செயல்முறை முந்தைய தவணையைப் போலவே தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்களது குடும்பத்தின் சார்பாக வவுச்சர்களைப் பெற, ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே அவர்களின் சிங்பாஸ் கணக்கில் உள்நுழைய வேண்டும்.

இந்த லிங்கை பயன்படுத்தி அவர்கள் வவுச்சர்களை பெற்றுக்கொள்ளலாம்.

வவுச்சர்கள் பெறுவதற்கான லிங்க், உரிமைகோருபவரின் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும், பின்னர் அவர் அதை வீட்டு உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த CDC வவுச்சர்களை 16,000 க்கும் மேற்பட்ட வணிகர்களிடம் குடியிருப்பாளர்கள் செலவிடலாம்.

சிங்கப்பூரில் முதியவர் மீது மோதிய “Lorry ஓட்டுநர் பாலகிருஷ்ணன்”.. அபராதம் விதித்து வாகனம் ஓட்ட தடையும் விதித்தது சிங்கை அரசு

இணைய வழியில் மட்டுமல்லாமல் “தேவைப்பட்டால், சமூக மையங்களில் ஹார்ட்காப்பி வவுச்சர்களை அச்சிடுவதற்கான சேவையும் இருக்கும்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “CDC வவுச்சர்கள் சிறியவை என்றாலும், விலைவாசி அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் ஒரு அர்த்தமுள்ள ஆதரவாக இது இருக்கும் என்று நம்புகிறேன்” என்று நிதி அமைச்சர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts