TamilSaaga

விமான நிலையத்தில் பணிபுரிவது உங்கள் கனவா? சிங்கப்பூரின் SATS நிறுவனத்தில் இதோ உங்களுக்கான வேலை வாய்ப்புகள்!

SATS, சாங்கி விமான நிலையத்துல உணவு, கார்கோ மற்றும் விமான நிலைய ஊழியர்கள் போன்ற பணிகளுக்கு பொறுப்பான நிறுவனம். சிங்கப்பூர் விமான நிலையம் சென்று வரும் எந்த பயணிகளும் இந்த நிறுவன ஊழியர்களை காணாமல் இருக்க முடியாது. 1947 சிங்கப்பூர் கல்லாங் விமான நிலையத்துல பொது விமான போக்குவரத்து தொடங்கிய நாள்ல இருந்து இந்த நிறுவனம் இயங்கி வருது. 1981-ல சாங்கி விமான நிலையத்துக்கு மாற்றம் பெற்றதுல இருந்து இன்று வரை அங்க இயங்கி வருது. பல திறமையான ஊழியர்கள் மற்றும் சிறப்பான சேவைகளை வழங்குவதில் இந்த நிறுவனத்திற்கு 77 வருட அனுபவம் இருக்குனே சொல்லலாம். இது தவிர பல நிறுவங்களுக்கு உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட உணவுகள் என விமான நிலையத்துக்கு வெளியிலும் இதன் சேவை தொடர்ந்து வருது.

இந்த நிறுவனத்துல வேலை செய்பவர்களுக்கு பல சலுகைகள் உண்டு. காப்பீடு, விடுப்பு போன்ற பொது சலுகைகள் தவிர தங்கள் ஊழியர்களின் ஆரோக்கியம், பயணம் மற்றும் அன்றாட செலவுகள் என அனைத்திலும் சலுகைகளை வாரி வழங்குகிறது இந்த நிறுவனம். தங்கள் ஊழியர்களின் நலனுக்காக ஜிம், அவர்களின் தினசரி செலவுகளைக் குறைக்க சாங்கி விமான நிலையதில் உள்ள பெரும்பான்மையான உணவு விடுதிகளில் உணவுகளின் மீது தள்ளுபடி, குறிப்பிட்ட உணவு விடுதிகளில் தங்கள் ஊழியர்களுக்காகவே சிறப்பு தள்ளுபடி மேலும் அவர்களின் பயணங்களுக்காக அனைத்து விமானங்களிலும் புக்கிங் இல்லாமல் உடனடி பயணம் என பல விதமான சலுகைகள் SATS நிறுவன ஊழியர்களுக்கு உண்டு.

அது மட்டுமல்ல இந்த நிறுவனத்தில் ஊழியர்களின் வாழ்க்கை மேலும் உயர பணி ரீதியான அனைத்து வசதிகளும் உள்ளன. இப்படிப்பட்ட சிறந்த நிறுவனத்தில் பணிபுரிய உங்களுக்கும் விருப்பமா? விமான நிலையத்தில் பணிபுரிய அதுசார்ந்த பயிற்சிகளை முடித்துள்ளீர்களா? அப்படியென்றால் இது உங்களுக்கான தகவல் தான்!

SATS நிறுவனம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் பணிபுரிய பல வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்க்கு நேர்காணலில் கலந்துகொள்வது அவசியம். அதில் எப்படி கலந்துகொள்வது? எங்கு நடைபெறுகிறது? என்பதைக் குறித்த விவரங்கள் கீழே உள்ளன!

SATS நிறுவனத்தில் விமானம், உணவு பேக்கிங் செய்வது, கார்கோ, லக்கேஜ்களை கையாள்வது போன்ற பல விதமான பணிகளுக்கு ஆட்கள் தேவை! இது குறித்த முழுமையான தகவல்களை https://www.sats.com.sg/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் காணலாம்!

முதலில் https://www.sats.com.sg/ என்ற லிங்க்-கை க்ளிக் செய்யவும்.
அதில் Career என்ற தேர்வை க்ளிக் செய்யவும்.
உள்ளே “Career Opportunities” என்ற பக்கத்தில் அனைத்து வேலைகளும் பட்டியலிடப்பட்டுள்ளான.
இது தொடர்பான மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து வலைத்தளத்தை பார்வையிடவும்.

தற்பொழுது உள்ள அறிவிப்பின்படி Baggage Associate, Passenger Service Associate, Ramp Associate போன்ற வேலைகளுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது.

Baggage Associate – விமானத்தில் வந்து செல்லும் பயணிகளின் லக்கேஜ் மற்றும் பிற பார்சல்களை கண்டறிந்து லேபிள்கள் ஒட்டி அதனை தரம் பிரித்து வழங்கும் வரை அனைத்தையும் கையாளும் பொறுப்பே இந்த பணியாகும்.

Passenger Service Associate – பயணிகளுக்கு அவர்களின் பயண ஆவணங்களை குறித்த தகவல்களை வழங்குவது, பிற தனிப்பட்ட உதவிகள் தேவைப்படின் அதனை செய்து கொடுப்பது மற்றும் பிற வாடிக்கையாளர் சேவைகள் போன்றவை இந்த வேலையின் பொறுப்புகளாகும்.

Ramp Associate – விமானம் அதன் ஓடுபாதையிலிருந்து வெளியேறிய பின் CAG-க்கு தகுந்தாற்போல் அதனைக் கையாள உதவுவதே இந்த வேலையின் பிரதான கடமையாகும். பார்சல்கள், லக்கேஜ், கார்கோ போன்றவற்றை பிரிக்க உதவுவதும் மேலும் ஒரு முக்கிய கடமையாகும்.

மேற்கண்ட வேலைகளுக்கான நேர்காணல் மே 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

நேரம் காலை – 11 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : Punggol Community Club, 3 Haugang Avenue 6, Multi-Purpose Hall – S538808

இதற்கான நுழைவுப் படிவத்தை பார்வையிட கீழே உள்ள லிங்க்-கை கிளிக் செய்யவும்.

நுழைவுப் படிவம்!

இது தவிர மே 17-ஆம் தேதி மேலும் ஒரு நேர்காணல் நடைபெறவுள்ளது.

நேரம் காலை – மாலை 2:30 மணி முதல் 5:30 மணி வரை
இடம் : SATS Inflight Catering Centre 1, 20 Airport Blvd Singapore, 819659
Multipurpose hall, Level 4

இந்த நேர்காணலுக்கான வேலைவாய்ப்புகள்;

Aviation Catering – விமான பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளை சமைப்பது பேக் செய்வது, அதனை கவனமாக லோடு செய்து விமானத்தில் கொண்டு சேர்ப்பது, உணவுகளின் தரத்தை சோதித்து வழங்குவது போன்ற கேட்டரிங் வேலைகள் இந்த பிரிவின் கீழ் அடங்கும்.

Cargo Services – லோடிங் செய்ய பயன்படும் உபகரணங்களை கையாளும் பணி, லாஜிஸ்டிக் மேலாண்மை மற்றும் லாஜிஸ்டிக் ஸ்பெசலிஸ்ட்

Passenger Services – வாடிக்கையாளர் சேவை அதிகாரி( Agent ), வாடிக்கையாளர் சேவை அலுவலர் (Officer) மற்றும் போக்குவரத்து உதவியாளர்

Apron Services – விமானத்தை பராமரிக்கும் பணியாளர் (Aircraft Aesthetic Specialist), டெக்னீசியன் (ஏப்ரான்), டிரெய்னி ஏர் ஹப் லீட் (AIC, ராம்ப், பேக்கேஜ், லோட் கன்ட்ரோல், ஃப்ளைட் ஆப்ஸ் ஏர் ஹப் ஸ்பெஷலிஸ்ட் (AIC, ராம்ப், பேக்கேஜ், டெக் ராம்ப்), வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Care Specialist)

இந்த வேலைகளைக் குறித்த முழு தகவல்களுக்கு இந்த இணையத்தை பார்வையிடவும்! https://www.sats.com.sg/careers-and-training/career-opportunities/recruitment-fairs

முக்கியக் குறிப்பு: மேற்கண்ட அனைத்து வேலை வாய்ப்புகளும் சிங்கப்பூர் குடியுரிமை/ நிரந்தர இருப்பிட உரிமை ( Permanent Residence ) பெற்றவர்களுக்கு மட்டுமே.

 

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

 

Related posts