TamilSaaga

நீங்க சிங்கப்பூருக்கு முதன் முதலில் வரும் போதே 2000 டாலர் சம்பளம் கிடைக்கணுமா? அப்போ இந்த method-ல் தட்டித் தூக்குங்க!

சொந்த ஊருல கூலி வேலை செஞ்சு கஷ்டப்படுற ஒவ்வொருவரும் வெளிநாட்டுக்கு போனா நல்ல சம்பளம் கிடைக்கும்னு யோசிப்பாங்க.
பல பேரோட கனவு இது தான்! குடும்பத்துக்கு பணம் அனுப்பனும் அவங்களை நல்லபடியா பாத்துக்கணும்னு தான் தினம் தினம் ஒரு புது வாய்ப்புகளை தேடி அலையுறாங்க!

அப்படி வாய்ப்புத் தேடுபவரா நீங்க! சிங்கப்பூர்ல ஆரம்பத்துலயே 2000 SGD சம்பளம் வாங்கணுமா அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான் முழுமையா படிங்க!

முதல்ல என்னென்ன வேலைகளுக்கு 2000 SGD சம்பளம் கிடைக்கும்னு பாக்கலாம்!

NTS Permit பெறும் அனைத்து வேலைகளுக்கும் அவர்களது வேலை முறை மற்றும் அனுபவம் பொறுத்து 2000SGD அல்லது அதற்க்கு மேல் ஊதியம் கிடைக்கும்.

• Executive
• Admin
• Construction
• Machine Handling
• Kitchen Crew
• Assistant
• Production Companies
• Supervisor
• Electrician
• Diploma Holders

மேற்கண்ட வேலைகளுக்கு அவர்களின் அனுபவம் பொறுத்து 2000 அல்லது அதற்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுகிறது. நீங்க நினைக்கலாம் நான்லாம் சாதாரண Electrician அல்லது Diploma Holder 2000 SGD என்ன அவ்வளவு பெரிய பணமா? அப்படியே இருந்தாலும் இந்த வேலைகள் எனக்கு கிடைக்குமா? எப்படி கிடைக்கும்?

2000 SGD என்பது நம்ம இந்திய மதிப்பின் படி 1,23,949 ரூபாய்! இப்ப சொல்லுங்க அந்த வேலை வேணுமா? வேணாமா?

அதே போல வேலைக்கு எடுக்கும் நிறுவனம் வெளிநாட்டவர்களை பணியமர்த்த விரும்பினால் எந்த நாட்டவரும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும். பல ஆன்லைன் தளங்கள் இதற்காக உள்ளது. அது தவிர ஏஜெண்ட்டுகள் மூலமும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை நீங்க சிங்கபூரைச் சேர்ந்தவரா இருந்தீங்கன்னா நேரடியா ஆன்லைன் வேலைத் தளங்களில் விண்ணப்பித்து வேலைக்கு சேரலாம்!

உங்க வசதிக்காக சில வேலை வாய்ப்புகள் கீழ கொடுக்கப்பட்டிருக்கு.

1. CNC Milling Machinist – தொழிற்சாலைகள்ல இயங்கி வரும் CNC இயந்திரங்களைக் கையாள்வதே இந்த பணியாகும். இதற்கான கல்வித்தகுதி இயந்திரம் தொடர்பான பாடங்களில் Diploma முடித்திருக்க வேண்டும். இது போன்ற வேளைகளில் 5 வருடம் முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த வேலைக்கான அறிவிப்பை Techskill எனப்படும் வேலைவாய்ப்பு ஏஜென்சி வெளியிட்டுள்ளது. இதற்கான ஊதியம் 2000 SGD.

https://www.gulfwalkin.com/jobdetails.php?job=140322

2. Mechanic – கார், டிரக், பேருந்து போன்ற பலவிதமான வாகனகள்ள ஏற்படும் பழுதுகளைக் கண்டறிந்து அதனை நீக்குவதே மெக்கானிக் வேலையின் கடமை. இதுல Automotive Technician, Diagnosis Technician, Specialized Technician, Service Advisor போன்ற பல பிரிவுகள்ல வேலை வாய்ப்புகள் இருக்கு. இதற்கான அறிவிப்புகள் https://www.jobstreet.com.sg/mechanic-jobs என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம் 2000 SGD முதல் 3000 SGD வரை.

3. Kitchen Assistant (Indian Restaurant) – தலைமை சமையல் கலைஞர்க்கு தேவையான உதவி வேலைகளைச் செய்வதே இந்த பணியாகும். மேலும் சமயலறையில் உள்ள பொருட்கள் சரிவர சுத்தம் செய்யப்படுவதையும், சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் உள்ளதா என தொடர்ந்து சரிபார்த்து வருவதும் இந்த பனியின் முக்கிய பொறுப்பாகும். இதற்கான முன்அனுபவம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள். ஊதியம் 2400 – 2700 SGD.

இந்த பணியைக் குறித்த அறிவிப்பு Indeed என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. https://sg.indeed.com/q-singapore-indian-jobs.html?vjk=15af7d3457fe7b02

4. Retail Sales Officer in jewelry – நகைக் கடை விற்பனை தொடர்பான இந்த பணியில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான நகைகளை காண்பிப்பதும் அதனைப்பற்றிய முறையான தகவல்களைக் கொடுத்து இறுதி வரை அவர்களுக்கு உதவி செய்வதுமே இந்த பனியின் பிரதான கடமையாகும். இதற்கான அறிவிப்பு indeed பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நிறுவனமான TATA வின் Tanishq-ல் மேற்கண்ட வேலைவாய்ப்பு உள்ளது. ஊதியம் 2800 முதல் 4000 SGD வரை. https://sg.indeed.com/jobs?q=singapore+indian&vjk=b6e4e0025ed49937

5. Electrician – DC பேட்டரி போன்ற மின் சாதனங்களை தொடர்ந்து பரிசோதித்து பராமரிப்பதும், நிறுவுவதும் அவற்றைக் கையாள்வதும் இந்த பணியின் முக்கிய பொறுப்பாகும். இது தொடர்பான ITE தொழிற்பயிற்சி முடித்தவர்கள் முன் அணுவும் இருந்தாலும் இல்லையென்றாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஊதியம் 1800 – 2000 SGD. இதற்கான அறிவிப்பு Jobstreet என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
https://www.jobstreet.com.sg/electrecian-jobs?jobId=75802970&type=standout

மேலே குறிப்பிட்ட அனைத்து வேலைகளுக்கும் வெளிநாட்டவராக இருந்தால் Work Permit விசா மூலம் சிங்கப்பூர்-ல் பணிபுரியலாம். இந்த வேலைகள் குறைந்தபட்சம் 2000 SGD ஊதியம் பெறக்கூடியது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-கை கிளிக் செய்து அந்த வேலையைக் குறித்த மேலும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை அது உங்களுக்கு பொருத்தமான பணியாக இருந்தால் ஆன்லைனிலேயே நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

Apply Now என்ற பொத்தானை அழுத்தி அடுத்தடுத்து கேட்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை சமர்ப்பித்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தால் அழைக்கப்படுவர்.

சிங்கப்பூரில் 2000 டாலர் ஊதியம் கொண்ட மேலும் பல வேலைகள் மேலே கொடுக்கப்பட்டுள்ள தளங்களில் உள்ளது. அனைத்து தகவல்களையும் படித்து உறுதி செய்து கொண்டு விண்ணப்பிக்கவும்.

யோசிக்காதீங்க விரைவிலேயே உங்களுக்கான வாய்ப்பை தேடி வேலைக்கு சேருங்க!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts