TamilSaaga

7000 கிலோ மீட்டர் தாண்டி வந்து 41 இந்தியர்களை மீட்ட தாடிக்காரர்… இன்று ஒட்டு மொத்த இந்தியாவிலும் இவர்தான் ட்ரெண்டு!

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் 41 நாட்களாக சுரங்க வேலையில் ஈடுபட்ட ஊழியர்கள் சிக்கி தவித்த காட்சியை நாம் அனைவரும் சமூக ஊடகங்களில் கேள்விப்பட்டு வந்தோம். இவர்களை காப்பதற்காக ஒட்டு மொத்த இந்தியாவும் வேண்டிக் கொண்டிருந்தன. இந்நிலையில் 11 நாட்களுக்கு முன்னால் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு தொழிலாளர்களை மீட்பதற்காக கொண்டுவரப்பட்டவர் தான் அர்னால்ட் டிக்ஸ்.

இவர் ஏற்கனவே சுரங்கப்பாதையில் நீண்ட நாட்கள் வேலை பார்த்தவர் என்பதால் அவரின் அனுபவத்தின் அடிப்படையில் இங்கு கொண்டுவரப்பட்டார். கிட்டத்தட்ட 11 நாட்களாக மழை, வெயில், குளிர் என எதையும் பார்க்காமல் சரியான உணவு இல்லாமல் 24 மணி நேரமும் சுரங்க பாதைக்கு அருகிலேயே தொழிலாளர்களை காப்பாற்றும் நோக்கில் பணிபுரிந்தார் என அவரைச் சுற்றி வேலை பார்த்தவர்கள் அவரை புகழ்ந்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் உயிரோடு திரும்ப வேண்டும் என மக்களோடு சேர்ந்து பிரார்த்தனையும் செய்துள்ளார். இவ்வாறு இரவு பகலாக இவர் அயராது உழைத்ததன் காரணமாக 41 வீரர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியாவில் உள்ளவர்கள் ஒரு ஹீரோவாகவே கொண்டாடுகின்றனர். அவர் சுரங்க பாதையை மீட்பதற்காக இந்தியாவில் வந்த நாளிலிருந்து பதினொரு நாட்களும் ஊழியர்களிடம் தைரியத்துடன் இருக்கும்படி தன் சொந்த மகனிடம் பேசுவது போல் பேசி ஆறுதல் வார்த்தை கூறி அவர்களின் மனதை திடப்படுத்தியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இந்த தாடிக்காரர் இப்போது இந்திய மக்களின் பாசக்காரராக மாறியுள்ளார்.

Related posts