TamilSaaga

சிங்கப்பூரின் பிரபல MullenLowe நிறுவனம்.. வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் வேலைக்கு எடுக்கும் கம்பெனி – உங்கள் வீட்டில் இருந்தே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பல பிரபலமான நிறுவனங்களில் MullenLowe சிங்கப்பூர் நிறுவனமும் ஒன்று. MullenLowe குழுமம் லண்டனை அடிப்படியாக கொண்டு செயல்படுகின்றது.

எல்லாமே டிஜிட்டல் என்று மாறிவிட்ட இந்த காலக் கட்டத்தில் மார்க்கெட்டிங் துறையே உலக அளவில் மிகப்பெரிய துறை என்றால் அது நிச்சயம் மிகையல்ல. அந்த வகையில் MullenLowe நிறுவனமும் மார்க்கெட்டிங் தொடர்புடைய செயல்பாடுகளில் ஈடுபடும் மிகப்பெரிய நிறுவனமாகும்.

சிங்கப்பூரில் கால் பதித்துள்ள “112 வயது” அமெரிக்க நிறுவனம்.. மாதம் 5 லட்சம் வரை சம்பளம் – வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பிக்க குவியும் இளைஞர்கள்

விரிவாக சொன்னால் “உலகளாவிய ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பு நெட்வொர்க்” (Global integrated marketing communications network) பணிகளைத் தான் இந்த நிறுவனம் செய்து வருகின்றது. MullenLowe, MullenLowe Comms, MediaHub மற்றும் MullanLowe Profero என்று இந்த குழுமம் நான்கு பிரிவுகளையும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. Johnson&Johnson, Harley Davidson, Rexona, Pepsodent போன்ற பல முன்னணி நிறுவனங்களின் மார்க்கெட்டிங் பணிகளை MullenLowe செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தியர்கள் உள்பட பல நாடுகளை சேர்ந்த பணியாளர்கள் இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் வெளிநாட்டவரை அதிக அளவில் பணியமர்த்தும் சிங்கப்பூர் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

Marketing மட்டுமின்றி Designing உள்பட பல துறைகளில் பணியாளர்களை தேர்வு செய்து பணியமர்த்துகிறது இந்நிறுவனம். LinkedIn போன்ற பல பிரபலமான வேலைவாய்ப்பு தளங்களிலும் MullenLowe நிறுவனத்தின் வேலைவாய்ப்பு (Vacancies) குறித்து நம்மால் அறியமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் “Career” எனும் ஆப்ஷனை க்ளிக் செய்தால், LinkedIn தளத்துக்கு அது Redirect ஆகும். அங்கு, உங்களது Emailஅல்லது மொபைல் நம்பரை User Id-யாக குறிப்பிட்டு, Password கொடுத்து Log in செய்து அந்நிறுவனத்தின் வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

“ஒரேயொரு கேள்வி”.. முழு போதையில் விமானியை கடுப்பேற்றி தனக்குத்தானே “ஆப்பு” வைத்த பயணி – நூற்றுக்கணக்கான பயணிகள் மத்தியில் திருச்சி விமான நிலையத்தில் நடந்த “ஆக்ஷன்” சம்பவம்

ADDRESS

1 Harbourfront Place, #11-04 Harbourfront Tower One
Singapore
098633
Singapore

View on Google Maps

PHONE No +65 6849 4888

உரிய தகுதியும், முன் அனுபவமும் உள்ளவர்கள் MullenLowe நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்து அறிவிக்கும்போது Apply செய்து பயனடையலாம். மேலும் இந்த நிறுவனம் குறித்து கூடுதல் தகவல்களை அறியவும், வேலை தொடர்பாக அணுகவும் அந்நிறுவனத்தின் இந்த அதிகாரப்பூர்வ பக்கத்தை தொடர்புகொள்ளலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts