TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கேன்.. 4 வருஷமா குடும்பத்தை பார்க்கமுடியால : தள்ளிப்போன தமிழக தொழிலாளியின் கனவு – கொஞ்சம் கவனமா இருங்க!

“அப்பா உங்களை பார்க்க ஓடோடி வருகின்றேன் என் செல்லங்களே”, இந்த வார்த்தைகளை குறைந்தது ஒரு முறையாவது ஒரு வெளிநாட்டு வாழ் தொழிலாளர்கள் நிச்சயம் தன் குழந்தைகளிடம் சொல்லியிருப்பார். ஆனால் வெகு சிலரால் தங்கள் குழந்தைகளிடம் கொடுத்த வாக்கை சில சமயங்களில் காப்பாற்ற முடிவதில்லை. அந்த நிலை தான் தற்போது சிங்கப்பூரில் சுமார் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ராஜாவின் நிலை.

“சிங்கப்பூரின் F&B மற்றும் சில்லறை வணிகத்துக்கு உதவு புதிய முயற்சி” : 70 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு – சிறப்புகளை விவரித்த அமைச்சர் Low Yen Ling

சுமார் 4 ஆண்டுகளாக இங்கு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த ராஜா இம்மாத துவக்கத்தில் மீண்டும் திருச்சி வழியாக அவரது சொந்த ஊருக்கு பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இதனால் தனது இரண்டு சிறு குழந்தைகளுக்காக மிட்டாய்கள், புது துணிகள் மற்றும் பரிசுப்பொருட்களை வாங்கியுள்ளார். அதேபோல தனது உறவினர்களுக்காகவும் பல பொருட்களை வாங்கியுள்ளார். இறுதியில் தன்னிடம் இருந்து எஞ்சிய சில வெள்ளிகளையும் மனைவிக்கு அனுப்பிவைத்துள்ளார்.

எல்லாம் தயார் நிலையில் இருக்க, பிப்ரவரி 26ம் தேதி தனது பயணத்திற்கு தேவையான PCR சோதனை எடுத்தபோது தான் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது, ராஜா பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். சிங்கப்பூரில் தனது இரண்டாவது தவணை தடுப்பூசியை கடந்த ஆண்டு செப்டெம்பரில் எடுத்துக்கொண்ட ராஜா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி இறுதியில் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து சுமார் ஒரு மாதம் கழித்து மீண்டும் கடந்த பிப்ரவரி 26ம் தேதி அவருக்கு பரிசோதனை மேற்கொண்டபோது அப்போதும் தொற்று உறுதியானதால் அவர் மனமுடைந்துபோனார்.

சிங்கப்பூரின் காத்தோங்கில் கடந்த மார்ச் 2ம் தேதி தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் தற்போது தனது இடத்திற்கு திரும்பியுள்ளார். Dormitoryயில் தரப்படும் இலவச wifi மட்டுமே தற்போது அவருக்கு அவரது குடும்பத்துடன் தொடர்புகொள்ள உள்ள ஒரே வழி என்று வலியுடன் கூறினார் ராஜா. சரியாக 12 நாட்கள் கழித்து ராஜா திருச்சி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ராஜா, ST என்று அழைக்கப்படும் straitstimesக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செழிப்பான விண்வெளித் துறையை உருவாக்கும் பாதையில் சிங்கப்பூர் – புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா?

ஊருக்கு போகப்போகிறோம் என்று நினைத்து இருந்த பணத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு, இருந்த காசுக்கும் பிள்ளைகளுக்கு பொருட்கள் வாங்கிவிட்டு தனியொரு மனிதனாக அவர் தவித்து நின்றுள்ளார். ஆகவே தொழிலாளர்கள் எப்போதும் கவனத்துடன் முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்து, மாஸ்க் அணிந்து பாதுகாப்புடன் இருக்க ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News Source ST Singapore

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts