TamilSaaga

சிங்கப்பூரில் இப்போ 1000 ‘டூ’ 2000 டாலர் வரை சம்பளம் வாங்குறீங்களா? அப்போ 3000 ‘டூ’ 4000 டாலர் சம்பளத்துக்கு ஈஸியா மாறலாம்! இதை மட்டும் பண்ணுங்க போதும்!

ஆரம்பத்துல 2000 SGD க்கும் குறைவான சம்பளத்துல தான் வேலைக்கு வந்தீங்களா? இன்னமும் அதே சம்பளத்துல இருக்க நீங்க சம்பளத்தை அதிகப்படுத்த முடியும். வேலையில அடுத்த கட்டத்துக்கு போக முடியும்! எப்படினு தெரிஞ்சுக்க தொடர்ந்து படியுங்க!

முதல்ல எந்தெந்த வேலைகளுக்கு 2000 SGD-க்கு குறைவான சம்பளம் இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.

ஹோட்டல் அசிஸ்டன்ட், சமையல் வேலை, உற்பத்தி தொழிற்சாலை, கட்டிட வேலை போன்ற அடிப்படை வேலைகளுக்கு Work Permit விசா வழங்கப்படுகிறது. இதில் NTS Permit என்ற விசா பெற்று மேற்கண்ட எந்த வேலைகளுக்கும் நீங்க வரலாம். அப்படி வரவங்களுக்கு குறைவான சம்பளத்துல தான் வேலை கிடைக்கும்.

கொஞ்ச நாள் அந்த சம்பளத்துல வேலை பார்க்கலாம். பிறகு அடுத்தடுத்த லெவலுக்கு போகனும்னு எல்லாரும் ஆசைப்படுவாங்க. ஆனா எப்படினு தெரியாது. சம்பளம் அதிகமா வாங்கணும்னு ஆசைப்படுவாங்க ஆனா அதுக்கு என்ன வேலைக்கு போகணும்ன்ற தெளிவான ஐடியா இருக்காது.

சிங்கப்பூர் வரும் பல பேரு திறன் சார்ந்த ஊழியர்களா இருப்பாங்க கட்டிட வேலைகளுக்கு வரவங்க, சமையல் வேலைகளுக்கு வரவங்க, கப்பல் வேலை, இயந்திரங்களைக் கையாளும் பணி என பல திறன் சார்ந்த வேலைகள் உண்டு.

ஆரம்பத்துல NTS Permit மூலம் வந்த ஊழியர்கள் அடுத்த கட்டமான S pass-க்கு மாறும்பொழுது 3000 SGD முதல் 4000 SGD வரை ஊதியம் வாங்கலாம்.

S-பாஸ்க்கு மாற Skill Certificate அவசியம். குறிப்பிட்ட வேலையில் நீங்கள் தேர்ந்தவர் என்பதை நிரூபிக்க இந்த ஆவணம் உதவுகிறது. சிங்கப்பூர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல பயிற்சி மையங்களில் இதற்கான பயிற்சி மற்றும் சான்றிதழை நீங்கள் பெற முடியும்.

இதன் மூலம் உங்கள் வேலை மற்றும் ஊதியம் இரண்டுமே ஒரு படி உயரும்!

இதுல ஏராளமான பயிற்சிகள் இருக்கு. ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஏற்ற பல ஆயிரக்கணக்கான பயிற்சிகளுக்கு அதற்க்கான சான்றிதழ்களும் கொடுக்கப்படுது. இது குறித்த தகவல்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள கீழ்கண்ட இணையத்தை பார்வையிடவும். My SkillsFuture

குறிப்பா தமிழ் மொழியில 60க்கும் மேற்பட்ட பிரிவுகள்ல சான்றிதழ்கள் வழங்கப்படுது. இதுல நீங்க முழுநேரம் பகுதி நேரம் என எதையும் தேர்ந்தெடுக்கலாம்.

பகுதி நேர பயிற்சியில் 40 வகையான சான்றிதழ்கள் இருக்கு. குறைந்தபட்சம் 1 வார காலக்கெடு முதல் அதிகபட்சம் 6 மாத காலம் வரை பல்வேறு தேர்வுகள் உங்களுக்கு இருக்கு. Diploma, ITI, Secondary Education என ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்றவாறு உங்கள் Skill Certificate Course ஐ தேர்ந்தெடுக்கலாம்.

அதற்காக பல கல்வி நிறுவனங்கள் இருக்கு. அதுல முக்கியமான சில கல்வி நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

• National University of Singapore
• Nanyang Technological University
• The Singapore University of Technology and Design
• Singapore Management University
• Singapore University Of Social Science

இந்த கல்வி நிறுவங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான திறன் பயிற்சிகளை வழங்குகின்றன. நீங்கள் பயிலும் திறன், உங்கள் அனுபவம் மற்றும் திறமை அடிப்படையில் தான் உங்கள் ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

இதில் மிகமுக்கிய பயிற்சி பிரிவுகள் Workplace Safety And Health, Healthcare, General Skill, Educational Skills போன்றவை. ஒவ்வொரு பிரிவுகளிலும் ஏராளமான பயிற்சிகள் உள்ளன.

இந்த பயிற்சிகளுக்கான கட்டணம் 50 SGD முதல் 500 SGD வரை வேறுபடும்.

நீங்க உங்க ஊதியத்தை உயர்த்த நினைக்கிறீங்களா? மேலே கொடுக்கப்பட்ட மாதிரி உங்கள் வேலை சார்ந்த துறையில Skill Certificate வாங்கி S-Pass விசாவுக்கு மாறினா 3000 முதல் 4000 SGD வரை ஈஸியா சம்பாதிக்கலாம்.

• முதல்ல https://www.myskillsfuture.gov.sg/ என்ற இணையத்தை பார்வையிடுங்க.
• அதுல மேலே Courses என்ற தேர்வு கொடுக்கப்பட்டிருக்கும் அதில் சென்று Filter-களை தேர்வு செய்து உங்களுக்கான பயிற்சியைப் பற்றிய முழு விவரங்களையும் படித்து தெரிந்துகொள்ளுங்க.

• பின்னர் அதில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள “Visit Training Provider’s Site” என்ற தேர்வை கிளிக் செய்தால் அதற்குரிய கல்வி நிறுவன இணையத்திற்கு செல்லும்.
• அங்கே சென்று உங்கள் சான்றிதலுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

இன்னும் எதுக்கு waiting உடனே Apply பண்ணுங்க! உங்க வேலையையும் சம்பளத்தையும் உயர்த்திடுங்க!

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts