TamilSaaga

“கார் கண்ணாடி என் மார்பகத்தை நோக்கி இருக்கு” : சிங்கப்பூரில் Taxi ஓட்டுநரை கேள்விகளால் வறுத்தெடுத்த பெண் – Viral Video

சிங்கப்பூரில் ஒரு பெண் Taxiயில் பயணிக்கும்போது வீடியோ எடுத்து, அந்த வீடியோவில் அந்த டாக்ஸி ஓட்டுநர் சாலையில் செல்லும்போது தனது மார்பகங்களைப் பார்க்கும் வகையில் அந்த காரின் கண்ணாடியை சரிசெய்ததாக குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஜனவரி 9ம் தேதி Sg Road Vigilante என்ற சிங்கப்பூரை சார்ந்த முகநூல் பக்கத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு Comment செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : Henley Passport Index : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2022 – மீண்டும் முதலிடத்தில் நம்ம சிங்கப்பூர்

ஏறக்குறைய இரண்டு வாரங்களுக்கு முன்பு, Orchard பகுதியில் தனது இரவு நேர பணியை முடித்துக் கொண்டு திரும்பும்போது காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அந்த பெண் குறிப்பிட்டிருந்தார். அந்த பெண் வெளியிட்ட வீடியோவில், அவர் வேண்டுமென்றே அந்த கண்ணாடியை அவ்வாறு செய்ததாகக் கூறி, அவர் ஏன் கண்ணாடியை தனது மார்பினை நோக்கி திருப்பினார் என்று அந்த டிரைவரிடம் கேள்வி எழுப்புவதைக் கேட்க முடிகிறது. மேலும் அவ்வாறு கூறியவாறே காரின் கண்ணாடியை நோக்கி தனது போன் கேமராவை திருப்பிய அவர், அதில் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து தன் மார்பு மட்டுமே தெரிகிறது என்று என்று காட்டினார்.

“உங்கள் கண்ணாடியை நீங்கள் பின்னால் வருவதை கவனிக்கும் வகையில் வைக்க வேண்டும்,” “ஏன் என் மார்பகங்களை பார்த்து வைத்துள்ளீர்” என்றும் கேட்டார். இத்தனை கேள்விகள் கேட்டபிறகும் அவள், அந்த ஒட்டுநர் அதற்கு பதிலளிக்கவில்லை, மாறாக அந்த பெண் செல்லும் இடத்தைப் பற்றி மட்டும் கேட்டுள்ளார். மீண்டும் அவர் ஏன் என் மார்பகத்தை நோக்கி உங்கள் கண்ணாடியை வைத்துள்ளீர்கள் என்று கேட்டபோது எனக்கு நீங்கள் பேசும் ஆங்கிலம் புரியவில்லை என்று கூறியுள்ளார் அந்த ஓட்டுநர்.

இதையும் படியுங்கள் : “பெருந்தொற்று அறிகுறிகளை சரிபார்க்கவில்லை” : சிங்கப்பூரில் KFC மீது குற்றச்சாட்டு – நான்கு பேர் மீது வழக்கு பதிவு

தொடர்ச்சியாக அந்த ஓட்டுநரிடம் வாதிட்ட அந்த பெண் அந்த ஓட்டுநரின் கார் ப்ளேட் எண்ணை குறித்துக்கொண்டு இந்தச் சம்பவத்தை குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப் போவதாக டிரைவரிடம் கூறினார். 2 நிமிடங்கள் கழித்து கண்ணாடியை காரின் மேல்பக்கமாக திருப்பிய அந்த ஓட்டுநர் இப்பொது எந்த பக்கத்தில் கண்ணாடி உள்ளது என்று அந்த பெண்ணிடம் கேட்டாக நீங்கள் இப்பொது அதை மாற்றிவிட்டீர்கள் என்று கூறினார். அந்த பெண் இறங்கவேண்டிய இடம் வந்தும் அவரோடு தொடர்ந்து வாதிட்டுவந்தார்.

இந்த காணொளியை கண்ட பலர் ஏன் அந்த பெண் கேட்ட ஒரு கேள்விக்கு கூட அந்த ஓட்டுநர் சரியாக பதிலளிக்கவில்லை என்று கேட்க்கும் அதே நேரத்தில். அந்த பெண் வீண்வாதம் செய்துள்ளார். அந்த ஓட்டுநருடன் வாதிடுவதற்கு பதிலாக அவர் அருகில் உள்ள இடத்தில் மாறி அமர்ந்திருக்கலாம் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் இந்த காணொளியில் யார் மீது குற்றம் இருக்கிறது என்றும் என்பது ஊர்ஜிதப்படுத்தப்படவில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts