TamilSaaga

சிங்கப்பூரில் எந்த மாதிரியான Driver வேலைகளுக்கு அதிக Demand உள்ளது?

சிங்கப்பூரில் Driver வேலை தேடுபவர்களுக்கான பதிவு!

சிங்கப்பூர் : சிங்கப்பூரில் டிரைவர் வேலைக்கு டிமாண்ட் அதிகம். அதிக சம்பளமும் கூட. ஐடி, சாப்ட்வேர், இன்ஜினியர் உள்ளிட்ட அதிகம் படித்த படிப்புகளுக்கு அடுத்த படியாக சிங்கப்பூர் அதிகம் மவுசு உள்ள வேலை என்றால் அது டிரைவர் வேலை தான். அதுவும் கமர்ஷியல் டிரைவர்களுக்கு Demand அதிகம். அதாவது டிரக் போன்றவை ஓட்டும் டிரைவர்களுக்கு தான் டிமாண்ட் அதிகம். சிங்கப்பூரில் personal driver வேலைக்கு 3500 முதல் 4500 சிங்கப்பூர் டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது. இதோடு போனஸ் போன்றவைகளும் உண்டு.

அதிக சம்பளம் தரும் டிரைவர் வேலைகள் :

  • Ice road truck driver.
  • Hazardous materials hauler.
  • Heavy equipment transporter.
  • Mining truck driver.
  • Over the road (OTR) trucker.
  • Oversize load trucker.
  • Private fleet driver.
  • Team truck driver

இந்திய லைசன்ஸ் வைத்து சிங்கப்பூரில் வாகனம் ஓட்டலாமா ?

சிங்கப்பூரில் வாகனம் ஓட்டுவதற்கு சில குறிப்பிட்ட தகுதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகன ஓட்டுபவர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். சாலை விதிமுறைகள், போக்குவரத்து விதிமுறைகள் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இந்தியாவில் பெற்ற டிரைவிங் லைசன்ஸ் வைத்துக் கொண்டு சிங்கப்பூரில் 12 மாதங்கள் வரை வாகனம் ஓட்டலாம். ஆனால் அந்த கால இடைவெளிக்கும் கண்டிப்பாக சிங்கப்பூர் டிரைவிங் லைசென்ஸ் பெற வேண்டும். சிங்கப்பூரில் சாலைகள் நன்கு பராமரிக்கப்பட்டிருக்கும் என்பதால் அங்கு வாகனம் ஓட்டுவது மிக எளிது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றில் இருக்கும் அதே போக்குவரத்து விதிகள் தான் சிங்கப்பூரிலும் உள்ளது.

Demand ஆக டிரைவர் வேலைகள் :

கமர்ஷியல் டிரைவருக்கு அடுத்த படியாக அதிக சம்பளத்துடன், அதிகம் தேவைப்படும் டிரைவர் வேலை என்றால் அது 3 மற்றும் 4 ம் கிளாஸ் டெலிவரி டிரைவர் வேலைகள் தான். இங்கு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகள் அதிகம் என்பதால் சரக்குகளை ஏற்றிச் சென்று, உரிய இடத்தில் சேர்க்கும் டெலிவரி டிரைவர்களுக்கு தேவை அதிகம். இவர்களுக்கு சம்பளமும் அதிகம். முழு நேரம், பார்ட் டைம் என பல பிரிவுகளின் கீழ் டிரைவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts