TamilSaaga

“காபூல் நகரில் வெடிகுண்டு தாக்குதல்” : 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அச்சம் – காணொளி உள்ளே

சில தினங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை கைப்பற்றி அங்கு ஆட்சியை பிடித்தது தலிபான் அமைப்பு. இந்நிலையில் தற்போது காபூல் விமான நிலையத்தில் இரண்டு பயங்கரவாத தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 14 அமெரிக்க வீரர்களும் 65க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இருந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 4 இந்திய அதிகாரிகள் மரணித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தின் சுற்றுப்புறத்தில் உள்ள கால்வாயைச் சுற்றி மக்களின் உடல்கள் சிதறிக் கிடப்பதை ஆப்கான் பத்திரிகையாளர்கள் படம்பிடித்த வீடியோ நெஞ்சை உறையவைக்கும் நிகழ்வாக இருந்தது. அப்பகுதியில் குறைந்தது இரண்டு குண்டுவெடிப்புகள் நடந்ததாக சாட்சிகள் தெரிவித்தனர். தற்கொலைப் போராளிகளில் ஒருவர் “அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து செயல்படும் மொழிபெயர்ப்பாளர்களையும் ஒத்துழைப்பாளர்களையும்” குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2011ல் நடந்த ஒரு ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்ததிலிருந்து, ஆப்கானிஸ்தானில் நடந்த சம்பவங்களில் ஒரே சமயத்தில் அதிக அமெரிக்க துருப்புக்கள் உயிரிழந்தது இதுவே என்று அமெரிக்க அதிகாரிகளின் கூறியுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த நிகழ்வு குறித்து தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். மேலும் விமான நிலையத்தை இலக்கு வைக்கும் ராக்கெட்டுகள் அல்லது வாகன வெடிகுண்டுகள் உட்பட எந்தவிதமான தாக்குதல்களுக்கும் அமெரிக்க தளபதிகள் தயாராக இருப்பதாக மெக்கென்சி கூறினார்.

மேலும் அமெரிக்க மத்திய கட்டளையின் தலைவர் ஜெனரல் பிராங்க் மெக்கன்சி, ஆப்கானிஸ்தானில் இன்னும் 1,000 அமெரிக்க குடிமக்கள் இருப்பதாகக் குறிப்பிட்டு, அமெரிக்கா அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடரும் என்று கூறினார்.

Related posts