TamilSaaga

சிங்கப்பூரில் வொர்க் பெர்மிட்டில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்களும் NRI கணக்கு துவங்கலாம்… ஸ்டேட் பேங்க்கை விட IOBல் ரொம்ப ஈஸி… என்ன காரணம்?

சிங்கப்பூரில் இருக்கும் இளைஞர்களுக்கு பணத்தினை சேமிக்க மிகவும் உதவியாக இருப்பது வங்கி கணக்கு தான். அப்படி சிங்கப்பூரில் இருக்கும் இந்திய வங்கிகளில் எப்படி NRI அக்கவுண்ட் ஓபன் செய்யலாம். அதற்கு என்னென்ன டாக்குமெண்ட்ஸ் தேவைப்படும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முதலில் சிலருக்கு NRIல் ஒரு சந்தேகம் இருக்கும். வேறுநாட்டு குடியுரிமை இருப்பவர்கள் மட்டும் NRI இல்லை. 6 மாதத்துக்கும் அதிகமான காலம் வேறு நாட்டில் தங்கி இருப்பவர்களும் NRI என்றே அழைக்கப்படுவார்கள். உங்களுக்கு சிங்கப்பூரில் அக்கவுண்ட் ஓபன் செய்ய முடிவு செய்தால் இரண்டு வழிகள் இருக்கிறது.

-NRE(Non-Residential External)
-NRO(Non- Resident Ordinary)

முதலாக இருக்கும் NREல் நீங்கள் எவ்வளவு வேணும் என்றாலும் பணத்தினை போட்டுக் கொள்ளலாம். வரி பிடித்தம் செய்யப்படாது. ஆனால் சிங்கப்பூரில் இருந்து இந்த பணத்தினை எடுக்கவே முடியாது. தமிழ்நாட்டில் சென்று தான் எடுக்க முடியும்.

இரண்டாவதாக உள்ள NROல் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருந்து பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வரி பிடிக்கப்படும். இதனால் NROவை விட NRE தான் சிறந்தது.

சிங்கப்பூரில் IOB மற்றும் State Bank of India என இரண்டு இந்திய வங்கிகள் இருக்கிறது. இதில் ஸ்டேட் பேங்க் அதிக கெடுபிடிக்கள் இருக்கும். உங்க பாஸ்போர்ட் கூட கேட்கப்படுகிறதாம். அதுவும் IOBல் ஒரே நாளில் ஓபன் செய்து விடலாம். state bankஐ பொறுத்தவரை நேரில் செல்லவே 10 நாட்கள் கழித்து தான் அப்பாயின்மெண்ட் கிடைக்கும்.

இதில் IOB டாக்குமெண்ட்ஸ் என்னென்ன?

  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • ஒரிஜினல் வொர்க் பெர்மிட்
  • பாஸ்போர்ட் மற்றும் பெர்மிட் ஜெராக்ஸ்

மதியம் 2 முதல் 3 மணிக்குள் லிட்டில் இந்தியாவில் இருக்கும் IOBக்கு செல்லுங்கள். அங்கு உங்களுக்கு ஒரு ஃபார்ம் கொடுக்கப்படும். அதை தொடர்ந்து 4 மணிக்கு மீண்டும் வங்கி ஊழியர்கள் உங்களை அழைப்பார்கள். அவர்களிடம் நீங்கள் நிரப்பிய ஃபார்மை கொடுக்க வேண்டும். இதற்கு கட்டணமாக $160 சிங்கப்பூர் டாலர் வாங்கப்படும். இதில் $30 சிங்கப்பூர் டாலர் சர்வீஸ் கட்டணமாக சென்று விடும். மீதி உங்கள் கணக்கில் ஏறிவிடும். இதை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் உங்கள் ஏடிஎம் மற்றும் மற்ற ஆவணங்களை கொடுத்து விடுவார்கள். ஸ்டேட் பேங்கை விட IOBல் கணக்கு தொடங்குவது சுலபம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts