TamilSaaga

சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்களுக்கே தற்போது பல நிறுவனங்கள் முன்னுரிமை கொடுக்கிறது! வேலை மாற நினைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

ஒரு நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டில் வேலை செய்ய விரும்புபவர்கள் அந்நாட்டின் அங்கீகாரம் பெற்று தான் வேலை செய்ய முடியும். அதேபோல் சிங்கப்பூரிலும் வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வருபவர்கள் வொர்க் பர்மிட் அல்லது எம்பிளாய்மெண்ட் பாஸ் பெற்றால் மட்டுமே சிங்கப்பூரில் வேலை செய்ய முடியும். இந்த வொர்க் பர்மிட் மற்றும் எம்பிளாய்மெண்ட் பாஸ் போன்றவற்றை பற்றி உங்களுக்கும் உள்ள சந்தேகங்களுக்கு மற்றும் விரிவான விளக்கத்திற்கு mom இணையதளத்தை பார்க்கவும். இந்த பதிவில் ஏற்கனவே வொர்க் பர்மிட் பெற்று பணியாற்றிக் கொண்டிருக்கும் அதாவது உற்பத்தி துறையில் வேறொரு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களை எவ்வாறு உங்களுடைய நிறுவனத்தில் பணியமர்த்தலாம் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

முதலில், ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருப்பவர்களை வொர்க் பர்மிட் மூலம் பணியமர்த்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம். ஏற்கனவே உற்பத்தி துறையில் பணியாற்றிக் கொண்டிருப்பவர் என்பதால் அவர்கள் உங்களுடைய நிறுவனத்திற்கு தங்களுடைய முழு திறன்களை வெளிப்படுத்த முடியும். இதனால் உங்களுடைய நிறுவனத்தின் உற்பத்தி திறன் கணிசமாக அதிகரிக்கும். வெளிநாட்டிலிருந்து உற்பத்தி துறைக்கு புதிய தொழிலாளர்களை பணியமர்த்துவதால் அதிகப்படியான செலவுகள் ஆகும். ஆனால் ஏற்கனவே சிங்கப்பூரில் இருப்பவர் என்றால் அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வரும் செலவு குறையும். இது உங்களுடைய செலவுகளை குறைக்கும் வழியாகும்.

அடுத்தது, யார் யாரை இந்த திட்டத்தின் மூலம் பணியமர்த்த முடியும்? பொதுவாக வர்க் பர்மிட் என்பது வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து வேலை பார்ப்பவர்களுக்காக கொடுக்கப்படும் ஒரு அனுமதி சீட்டு. அந்த வகையில் non-traditional sources (NTS), People’s Republic of China (PRC) மற்றும் North Asian sources (NAS) ஆகியோர்கள் இந்த இந்த திட்டத்தின் மூலம் வொர்க் பர்மிட் முடியும் தருவாயில் அதை வேறொரு நிறுவனத்துடன் புதுப்பித்துக் கொள்ள முடியும். ஏற்கனவே, வேறொரு நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களுடைய பணி காலம் முடிவடையும் தருவாயில் வேறொரு நிறுவனத்தில் வேலையில் சேர முடியும். ஏற்கனவே வேலையில் இருக்கும் தொழிலாளியின் ஒர்க் பர்மிட் எப்பொழுது விண்ணப்பிப்பது? உங்கள் நிறுவனத்திற்கு நீங்கள் ஏற்கனவே சிங்கப்பூரில் வொர்க் பர்மிட் பெற்று வேலை செய்பவரை பணியமர்த்த வேண்டுமெனில், அவர்கள் பணி காலம் அதாவது வொர்க் பர்மிட் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு முன் WP online என்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒருவேளை அவர்களுடைய வொர்க் பர்மிட் முடிவடைவதற்கு 14 நாட்களுக்கு குறைவாக இருந்தால், MOM -டம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் அது மட்டும் இன்றி ஏற்கனவே வேலையில் இருக்கும் நிறுவனத்தின் முதலாளியிடம் ஒப்புதல் படிவம் பெற வேண்டும். இவை அனைத்தும் வொர்க் பர்மிட் காலாவதியாகும் முன் இருக்கும் 40 – 21 நாட்களுக்கு முன் பெற வேண்டும்.

முதலில், ஒரு நிறுவனம் தங்களிடம் இருக்கும் தொழிலாளர்களை திரும்பவும் தக்க வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம். உங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களை தக்க வைத்துக் கொள்ள அவர்களுடைய வொர்க் பர்மீட்டை ரினுவல் செய்ய வேண்டும். உங்களுக்கு நோட்டீஸ் வருவதற்கு முன் நீங்கள் ரினுவல் வேலைகளை தொடங்க வேண்டும். உங்களிடம் வேலை செய்யும் தொழிலாளியின் பர்மிட் முடிவடைவதற்கு 40-21 நாட்களுக்கு முன் வேறு ஒரு நிறுவனம் உங்களுடைய தொழிலாளிக்கு வொர்க் பர்மிட் விண்ணப்பிக்கலாம் உங்களுடைய அனுமதி அதற்கு தேவையில்லை. ஆனால் உங்களுக்கு WP Online administrator இடமிருந்து எஸ்எம்எஸ் அல்லது இமெயில் அனுப்பப்படும். நீங்கள் உங்களுடைய அக்கவுண்டில் லாகின் செய்து ஒப்புக்கொள்வது அல்லது நிராகரிப்பது என முடிவெடுக்கலாம்.

உங்களிடம் பணி புரியும் பணியாளரின் வொர்க் பர்மீட்டை வேறொரு நிறுவனம் விண்ணப்பித்து பெற்றுவிட்டது என்றால், அவர்களுடைய பழைய வொர்க் பர்மிட் முடிவடையும் வரை அவர்களை நீங்கள் வேலையில் வைத்துக் கொள்ளலாம், தொழிலாளர்களின் பராமரிப்புக்கு நீங்களே பொறுப்பாவீர்கள், அது மட்டும் இன்றி தொழிலாளர்களின் சம்பள பாக்கி போன்றவற்றை முழுமையாக செட்டில் பண்ண வேண்டும்.

இப்பொழுது தொழிலாளர்களை தற்போதைய முதலாளியின் ஒப்பந்தத்துடன் இடமாற்றம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம். தற்போது உள்ள முதலாளி ஒப்புக்கொண்டால் நீங்கள் அந்த தொழிலாளியின் வொர்க் பர்மிட் முடிவதற்கு 21 நாட்களுக்கு முன் வொர்க் பர்மிட் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் உங்கள் நிறுவனத்திற்காக, தொழிலாளிகளின் ஒர்க் பர்மீட்டை MYE மற்றும் IPS மூலமாக அப்ளை செய்திருந்தால் டிசம்பர் 31 2024 ஆம் ஆண்டு குறைந்தபட்ச வரி விகிதத்துடன் நீங்கள் தொழிலாளிகளின் வொர்க் பர்மீட்டை பெறலாம். அடுத்தது எப்படி ஏற்கனவே உள்ள முதலாளியின் ஒப்புதல் உடன் தொழிலாளிகளுக்கு வொர்க் பர்மிட் விண்ணப்பிப்பது? என்று பார்க்கலாம்.

ஒரு வெளிநாட்டு தொழிலாளிக்கு எவ்வாறு வொர்க் பர்மிட் இணையதளத்தில் விண்ணப்பிப்பதோ அதேபோல் இப்பொழுதும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். நீங்கள் ஒரு தொழிலாளிக்கு வொர்க் பர்மிட் விண்ணப்பித்தவுடன் அவருடைய பழைய முதலாளிக்கு எஸ் எம் எஸ் அல்லது ஈமெயில் அனுப்பப்படும். ஏழு நாட்களுக்குள் அந்த ஈமெயிலுக்கு ஏற்கனவே இருக்கும் முதலாளி தங்களுடைய சம்மதத்தை தெரிவிக்க வேண்டும் ஏழு நாட்கள் வரை எந்த பதிலும் அனுப்பாவிட்டால் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

புது வொர்க் பர்மிட் எப்பொழுது கிடைக்கும் எப்படி பெறுவது என்பது பற்றி பார்க்கலாம். பழைய ஒர்க் பர்மிட் முடிவடைந்த பின் 14 நாட்களுக்கு புது வொர்க் பர்மிட் வழங்கப்படும். இல்லையென்றால் அப்ரூவல் நிராகரிக்கப்பட்டு மேற்கொண்டு தங்குவதற்கு அபராதம் விதிக்கப்படும். இந்த புது ஒர்க் பர்மிட் பெறுவதற்கு, என்ன செய்ய வேண்டும்? WP online எனும் இணையதளத்தில் லாகின் செய்து விண்ணப்ப படிவம் நிரப்பப்பட வேண்டும், தொழிலாளிகளின் பாஸ்போர்ட், பூர்த்தி செய்யப்பட்ட பாதுகாப்பு பத்திர படிவம், மேலும் முழு மருத்துவ பரிசோதனை படிவம் இவற்றை ஆன்லைனில் அப்லோட் செய்ய வேண்டும். மேலே அனுப்பப்பட்ட படிவங்களை சரிபார்க்கப்பட்டு அடுத்த ஐந்து நாட்களுக்குள் புது ஒர்க் பர்மிட் வழங்கப்படும். புது வொர்க் பர்மிட் பெற்றவுடன் அந்த தொழிலாளி முற்றிலும் உங்களுடைய பொறுப்பு அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வது உங்கள் நிறுவனத்தின் கடமையாகும். மேலும் விரிவான தகவல்கள் MOM இணையதளத்தை முழுமையாக பார்க்கவும். உங்களுடைய அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் பதில் பெறலாம்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts