TamilSaaga

சிங்கப்பூர் கம்பெனிகளில் நடக்கும் ஆட்குறைப்பு முறை பற்றி தெரியுமா? அதில் தொழிலாளர்களுக்கு என்ன பயன்?

உலக அளவில் செயல்படும் பல தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு என்பது தவிர்க்கமுடியாத ஒன்று. நிறுவனங்கள் சில நெருக்கடியான நேரங்களில் செலவுகளைக் குறைக்க இந்த முறையை செயல்படுத்துவது உண்டு.

அப்படி செய்யப்படும் ஆட்குறைப்பு செயல்முறையின்பொழுது தங்கள் பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிறுவனங்கள் சில சிறப்பு சலுகைகளையும் வழங்குகின்றன. திடீரென பறிக்கப்படும் வேலை தங்கள் பணியாளர்களின் பொருளாதாரத்தை பாதிக்காமல் இருக்க அவரவர் அனுபவம் மற்றும் வேலையைப் பொருத்து சில மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படும். பிற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும் சில ஆலோசனைகள் வழங்கப்படும்.

இது போல் சிங்கப்பூர் Ministry Of Manpower வகுத்துள்ள விதிமுறைகளின்படி ஆட்குறைய்ப்பு செய்யும் நிறுவனங்கள் என்னென்ன மாதிரியான சலுகைகளை வழங்குகின்றன! ஆட்குறைப்பை எப்படி செயல்படுத்துகின்றன என்பதைப் பற்றிய விவரங்களே இந்தப் பதிவு.

சிங்கப்பூர் பொறுத்தவரை ஆட்குறைப்பு செய்யும்முன் நிறுவனங்கள் தங்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஆட்குறைப்பின் பொழுது அவர்களது எதிர்கால தேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். பணியாளர்களுக்கும் அதே விதிமுறை தான் தங்கள் நிறுவன பணியாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்தபின் அவர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். உரிய காலத்தில் மற்றொரு வேலையைத் தேடிக்கொள்ள இதுஉதவியாக இருக்கும்.

அதேபோல் Notice Period-ஐ இயன்றவரை அதிகப்படுத்த நிறுவனங்கள் முயற்சிக்க வேண்டும். நீண்ட Notice Period என்பது மற்றொரு வேலை தேட கூடுதல் காலத்தை அளிக்கும்.
நிறுவனங்கள் தங்களால் இயன்றவரை ஊழியர்களுக்கு வேறு வேலை தேட உதவ வேண்டும்.

  1. Singapore National Employers Federation – SNEF
  2. Workforce Singapore – WSG
  3. U PME Centre
  4. Employment And Employability Institute (e2i)

மேற்கண்ட அமைப்புகள் ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு வேறு வேலை தேட உதவிகளை வழங்குகி வருகிறது.

ஆட்குறைப்பை செயல்படுத்தப்போகும் நிறுவனங்கள் MOM மற்றும் உங்கள் கம்பெனி தொழிலார் சங்கத்தில் முன்கூட்டியே அது குறித்த தகவல்களை தெரிவித்திருக்க வேண்டும் இது தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும். அதே போல தொழிலார்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் முன்னேற்பாடுகளை செய்திட உதவும்.

ஆட்குறைப்பின் பொழுது அதற்காக தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளர்களை நிறுவனத்தின் செயல்முறை மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் பங்கு என்ன என்ற காரணியைப் பயன்படுத்தி மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். வேறு எந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அவர்களை ஆட்குறைப்பு பட்டியலில் சேர்க்கக்கூடாது.

அப்படி ஆட்குறைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட ஊழியர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். அவர்களது வாழ்வாதாரம் திடீரென பாதிக்கப்படாத வகையில் இயன்ற உதவிகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

சிங்கப்பூரில் ஆட்குறைப்பு செயல்முறையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்!

ஆட்குறைப்பு பட்டியலில் சேர்க்கப்படும் தொழிலாளர்கள் முழுமையான சலுகைகளைப் பெற கட்டாயம் இரண்டு வருடங்கள் வரை குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்திருக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கும் குறைவாக வேலை செய்திருந்தால் EX-Gratia Payment மட்டுமே வழங்கப்படும்.

தொழிற்சங்கம் வைத்திருக்கும் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் பாதிக்கப்பட்ட தொழிலளர்களுக்கு வழங்கப்படும் தொகையை முன்னதாகவே வேலை ஒப்பந்தத்தில் குகுறிப்பிட்டிருக்க வேண்டும். தொழிற்சங்கம் அல்லாத நிறுவனங்கள் தொழிலார்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பொதுவான நடைமுறையின்படி தொழிலாளர்களின் அனுபவம் மற்றும் வேலையைப் பொருத்து ஒரு வருடத்திற்கு 2 வார ஊதியம் முதல் 1 மாத ஊழியம் வரை வேறுபடும். உதாரணத்திற்கு 5000 SGD மாத ஊதியம் பெறும் தொழிலாளர் மொத்தம் 5 வருடங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலை செய்திருந்தால் ஒரு வருட அனுபவத்திற்கு 2 வார ஊதியம் என கணக்கிட்டு மொத்தம் 5 வருடத்திற்கு 10 வார ஊதியம் வழங்கப்படும். இந்த தொகையானது நிறுவனத்தின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும்.

தொழிற்சங்கப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் Collective Agreement-ன் படி ஒரு வருடம் வேலை செய்திருந்தால் ஒரு மாத ஊதியம் என மொத்த வேலைக் காலத்திற்கு ஏற்றாற்போல் கணக்கிடப்படும்.

முக்கியக் குறிப்பு: ஒருவேளை ஊதியத்தில் ஏதேனும் பிடித்தங்கள் இருந்தால் அதற்க்கு முன் இருந்த முழு ஊதியம் தான் ஆட்குறைப்பு சலுகைக்காக எடுத்துக்கொள்ளப்படும். இந்த சலுகைத் தொகைக்கு CPF செலுத்தத் தேவையில்லை.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்!

Related posts