TamilSaaga

உலகில் கோடீஸ்வரர்கள் மட்டுமே சாப்பிடும் பத்து உணவுப்பொருட்கள் – என்னென்ன தெரியுமா?

ஒன்று – மாட்சுடேக் காளான்: இது 1000-2000 பவுண்டுக்கு விற்பனைச் செய்யப்படுகின்றன. அதாவது கிலோக்கு 2000-4000 டாலருக்கு விற்பனைச் செய்யப்படுகின்றன.மேலும் அதன் தரம் மற்றும் அளவைப் பொருத்தே விலை அமையும். இந்தக் காளான் ஜப்பானில் உள்ள தேவதாரு வனத்தில் மட்டுமே கிடைக்கும்.இந்தக் காளான் குறிப்பிட்ட வகை புழுக்களால் தாக்கப்படுவதால் அதன் வளர்ச்சி குறைவாகவே காணப்படுகிறது. ஆதலால் இந்த காளான்களின் தேவையும் பற்றாக்குறையும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இது காரமாகவும் பட்டையுடைய சுவையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றன.சிங்கப்பூரில் மாட்சுடேக் காளான் S$1,000 விற்கப்படுகின்றது. மேலும் இந்த அற்புதமான பூஞ்சைகள் சிங்கப்பூர் உணவகங்களில் உள்ள நட்சத்திர உணவக சமையல்காரர்களின் கற்பனையையும் சுவை மொட்டுகளையும் கைப்பற்றியுள்ளன.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் Plastic Mold Designer பணி” – இந்தியர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு” – அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக Apply செய்யலாம்

இரண்டு – மூஸ் சீஸ் : இந்த சீஸ் கிலோ 1000 டாலருக்கு விற்பனைச் செய்யப் படுகின்றன.இந்திய ரூபாய் மதிப்பின் படி 75,000 என விற்பனைச் செய்யப்படுகின்றன. இது ஸ்வீடன் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்படும் சீஸ் ஆகும். இந்த மூஸ் சீஸ் மூஸ் விலங்கிலிருந்து எடுக்கக்கூடிய பாலில் இருந்து எடுக்கக்கூடிய சீஸ் ஆகும்.

மூன்று – குங்குமப்பூ – குங்குமப்பூ ரெட் கோல்டு என அழைப்படுகின்றது. இதில் நிகல், அசல், தரப்படுத்தல் எனப் பல வகை குங்குமப்பூ உண்டு. இது ஈரானில் அதிகமாக விளைகின்றன. கிலோ 10,000 டாலருக்கு விற்கப்படுகிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 7 லட்ச ரூபாயாக உள்ளது. எடுத்துக்காட்டாக 100 கிலோ பூக்கள் வேண்டுமென்றால் அதற்கு 1,70,000 பூக்கள் வரை பறிக்க வேண்டியிருக்கும். பின் அந்த 100 கிலோ பூக்களை காய வைத்தால் வெறும் 1 கிலொ குங்குமப்பூ மட்டுமே கிடைக்குமெனவும் அதுவே அதன் அதிக விலைக்கு காரணம் எனவும் கூறப்படுகின்றன.

நான்கு – 23 கேரட் தங்க சாக்கலேட் பார் – இந்த சாக்கலேட்டின் விலை 2000 டாலர் ஆகும். அதாவது இந்திய ரூபாய் மதிப்பின் படி 1,50,000 லட்சமாகும். இதன் சுவை சாதாரணமாக kit kat (கிட் கேட்), dairy milk (டெய்ரிமில்க்) போன்று இருக்கும் எனக் கூறப்படுகின்றது. இதில் வெறும் சாக்கலேட் மட்டும் இல்லாமல் கோல்டு மற்றும் கொக்னக்(cognac) சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.

ஐந்து – ஐபெரியன் ஹம் : இது ஐபெரிக்கோ நாட்டில் மட்டும் வளர்த்து விற்கப்படுகின்ற ஒரு கருப்பு பன்றி வகையில் வரும் அசைவ உணவு. இந்த வகை பன்றிகளுக்கு ஹேர்கான்ஸ் என்று சொல்லப்படும் குறிப்பிட்ட வகை தீனி மட்டுமே அளிக்கப்பட்டு வளர்ப்பதால் இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கின்றன. அதனால் இது அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. 2020ல் ஒருவர் இந்த கரியை 13,800 டாலருக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த உணவு பன்றியை வளர்த்து வெட்டி 36 மாதம் உலர வைத்து கருவாடு போல உருவாக்கப்படுகின்றன.

ஆறு – பறவை கூடு சூப் – இந்த சூப் 2000-4000 டாலர் வரை விற்பனை செய்யப்படுகின்றன. இது சராசரியாக 1,15,000 – 2,00,000 வரை விற்பனையாகின்றன. இந்த உணவு சின்ன உழவாரன் என்னும் பறவைக் கட்டும் கூட்டை மட்டும் எடுத்து அதை ஜெல்லி போல் மாற்றி சூப்பாக அருந்தப்படுகின்றனர். இது சீன நாட்டின் பாரம்பரிய உணவாக உள்ளது. சிங்கப்பூரில் 1 கிலோ பறவைக் கூடு சூப் அருந்த S$3,560 வரை செலவாகும்!

ஏழு – அசிட்டொ பல்சமிக்கா டி மடினா- பெயரைப் போலவே இந்த பானமும் வித்தியாசமானது. இது 100 மில்லி லிட்டருக்கு 150 டாலர் வரை விற்பனையாகின்றன. அதாவது 1 மில்லி லிட்டர் 1.45 டாலர், இந்திய மதிப்பிற்கு 150 ரூபாய்.ஒரு பானம் தயாரிக்கப்படுகின்றன 100 வருஷம் ஆகுமென்பதால் இது விலை உயர்ந்ததாக உள்ளது.

எட்டு – வெண்ணிலா ஐஸ்க்ரீம் – வெண்ணிலா ஐஸ்க்ரீம் இன்றைய விலைக்கு 500 டாலர் அதாவது 35,000 ரூபாய்.நாம் சாதரணமாக 5 ரூபாய்க்கு கூட வெண்ணிலா ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் ஆனால் அது ஏன் இவ்வளவு அதிக விலைக்கு விற்கப்படுகின்றது என யோசிக்கிறீர்களா?.அதற்கு காரணம் குங்குமப்பூவிற்கு அடுத்து கிடைப்பதற்கரிய ஒன்றாக வெண்ணிலா உள்ளது. மேலும் நாம் சராசரியாக சாப்பிடுவது அசல் வெண்ணிலா கிடையாது.

ஒன்பது – மன்னுக்கா  தேன் – இந்த தேன் மற்ற தேனை விட அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 100 கிராம் தேன் 100 டாலர் அதாவது இந்திய மதிப்பிற்கு 100 கிராம் தேன் 7,300 ரூபாய் குடுத்து தான் வாங்க முடுயும். இது நியூசிலாந்தில் மட்டுமே கிடைக்கும் அரியவகை தேன். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான தேன் என கூறப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : Henley Passport Index : உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் 2022 – மீண்டும் முதலிடத்தில் நம்ம சிங்கப்பூர்

பத்து – கொபி லுவாக் காபி : சேவாக் என்னும் விலங்கு சாப்பிட்டு போடும் கழிவில் தான் இந்த காபி கொட்டை காணப்படுகின்றன. இந்த கொட்டையை அரைத்து தயாரிக்கப்படும் காபி தான் கொபி லுவாக் காபி. சேவாக் என்னும் விலங்கின் வயிற்றில் காபி கொட்டைகள் புளித்து அதன் சுவை அதிகரிப்பதால் இந்த காபியின் விலை அதன் சுவைக்கேற்ப 100-700 டாலர் வரை மாறிக் கொண்டே இருக்குமெனக் கூறப்படுகின்றன. சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான கஃபேக்கள், கோபி லுவாக்கின் மிகப்பெரிய உற்பத்தியாளரான சுமத்ராவிலிருந்து கோபி லுவாக்கைப் பெற்று சுமார் S$25 அல்லது அதற்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts