TamilSaaga

சிங்கப்பூரில் 4D/TOTO வாங்க மிகவும் அதிர்ஷ்டம் நிறைந்த மற்றும் அதிக முறை பரிசு விழுந்த கடை  எங்கு உள்ளது?

லாட்டரி-னா என்ன என்பது இங்க பல பேருக்கு தெரியும். பெரும்பாலும் அதிர்ஷ்டத்தை மட்டுமே வைத்து கிடைக்கக்கூடிய பெரும் பரிசுத் தொகை. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம் பலருக்கு ஏமாற்றமாவும் இருக்கும். பல பேரு இத நம்பி அதிக பணம் கொடுத்தெல்லாம் வாங்குவாங்க. இன்னமும் பலர் இதுக்காக தனியா பணம் ஒதுக்கி வாங்குறவங்களும் இருகாங்க.

சில இடங்களில் இது தடை செய்யப்பட்டு இருந்தாலும் பல நாடுகளில் இன்றும் பழக்கத்தில் இருக்கு. இந்த லாட்டரி மூலமா பலருக்கும் வாழ்க்கையே மாறி இருக்கு. வாழ்வாதாரம் உயர்ந்து இருக்கு. பல நாடுகள் இன்றும் இதனை அதிகார்பூர்வமா அனுமதிச்சு அவங்களோட மேற்பார்வையின் கீழ நடத்திகிட்டு வராங்க. மற்ற சட்டத்திற்கு எதிரான பெட்டிங் முறைகளை இது குறைக்க உதவும்.

இது போல சிங்கப்பூரில் புழக்கத்தில் இருக்கும் லாட்டரி தான் 4D/ TOTO. அங்கீகரிக்கப்பட்ட பல ஏஜென்சீக்களில் இந்த டிக்கெட்டுகள் கிடைக்கிறது. இதனை சிங்கப்பூர் அரசாங்கமே தங்கள் நிதி அமைச்சகத்தின் கீழ நடத்திக்கிட்டு வருது. 1968 ல தொடங்கப்பட்ட இந்த லாட்டரி பரிசு இன்றும் நடைமுறையில் இருக்கு. இது தவிர சிங்கப்பூர் அரசின் கீழ் இதே போற்ற பெட்டிங் முறைகளான 4D, TOTO, சிங்கப்பூர் ஸ்வீப், விளையாட்டுக்களில் பெட்டிங் செய்வது, குதிரைப் பந்தயம் போன்று பல உள்ளன.

விளையாட்டு குதிரைப் பந்தயம் போன்றவை பல யுக்திகள் கொண்டு நுணுக்கமாக பெட் செய்யப்படும். இதுல சில சமயம் தான் அதிர்ஷ்டத்திற்கு வேலை. ஆனால் 4D, TOTO போன்ற லாட்டரிக்கள் முழுவதும் அதிர்ஷ்டத்தின் பக்கம் தான். எவ்வளவு எண்கள் உங்களுக்கு இருந்தாலும் அதிர்ஷடம் இருந்தா நீங்க ராஜாவாகலாம்.

முதல்ல இந்த லாட்டரி எப்படி வேலை செய்யுதுனு ஒரு சின்ன அறிமுகம். இதுல பல விதமான பெட்டிங் வகைகள் இருக்கு.

4D பெட் வகைகள் (இதில் 1 முதல் 9 வரை ஏதேனும் நான்கு எண்களை தேர்ந்தெடுக்க வேண்டும் (1111 or 9876 or 1223 or 1122). தேர்ந்தெடுக்கப்பட்ட எண்கள் மற்றும் அதன் வரிசையைப் பொறுத்து வெற்றி வாய்ப்பும் பரிசும் வழங்கப்படும்.)

இதில் 6 வகைகள் உள்ளன.

  • Big Bet
  • Small Bet
  • Ordinary Entry
  • 4D ROll
  • System Entry, i Bet
  • Quick Bet

TOTO பெட் வகைகள்: (இதில் 1 முதல் 49 வரையிலான ஏதேனும் 6 எங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தெரிந்தெடுத்த எண் மற்றும் பெட் வகையைப் பொருத்து பரிசுத் தொகை மாறுபடும்.)

1.Ordinary Entry 2.System Entry 3.System ROll 4.Quick Pick

மேலே குறிப்பிட்டது போல் இந்த பெட்டிங் அதிர்ஷ்டம் மற்றும் சில யூக்திகளைப் பயன்படுத்தி தான் இயங்குது. ஆகவே சிலர் அதை வாங்குற கடையும் ராசியா இருக்கனும்னு நினைப்பாங்க. நம்ம ஊரு கைராசியான நகைக் கடைகள் மாதிரி.

அப்படி பார்க்கும் பொழுது இது வரைக்கும் அதிக பரிசுகளை வென்றது எந்தெந்த ஏஜென்ஸிக்கள்? எங்க வாங்கினா அடுத்த அதிர்ஷ்டம் அதிகம்? இது வரை எத்தனை பரிசுகள் அந்த ஏஜென்சி வெற்றி பெற்றுச்சு? பாப்போம்!

பரிசுத்தொகையில் அது வழங்கப்படும் சதவிகிதம் மற்றும் தொகையைப் பொருத்து பல குழுக்கள் (Group) உள்ளன. அதில் முதல் இரண்டு குழுக்கள் தான் அதிகப்படியான பரிசுத் தொகைகளைக் கொண்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு அதிக அளவிலான பரிசுகளைப் பெற்றுத்தந்த முதல் 5 ஏஜென்ஸிக்களைப் பாப்போம்.

நீங்க நெனச்சு பார்க்க முடியாத அளவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆன்லைன் பெட்டிங்-ஆன Singapore Pools Account Betting Service தான் முதல் இடத்தைப் பிடிச்சு இருக்கு.

இது 2016-ஆம் வருடம் தான் தொடங்கப்பட்டுச்சு. ஆனாலும் மிக அதிக வெற்றி எண்களை விற்பனை செய்த முதல் நிறுவனமா இது இருக்கு. இது ஆன்லைன் மூலம் பெட் செய்யப்படுவதால் பல பேரு இதனை பயன்படுத்தறாங்க. எளிதா இருக்கறதால அனைவரும் விரும்பி பயன்படுத்தப்படும் பெட்டிங் தளமாகவும் இது இருக்கு. இதன் வெற்றி எண்ணிக்கை Group 1-ல் 103, Group 2-ல் 629. தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இங்க நீங்க பெட்டிங் செய்யலாம்.

அடுத்ததா Delisia Agency Pte Ltd. இது இரண்டாம் இடத்துல உள்ள பெட்டிங் ஏஜென்சி. Rochor Road, Fu Lu Shou காம்ப்ளெக்ஸில் உள்ள பேஸ்மெண்ட் தளத்தில் இந்த ஏஜென்சி அமைந்துள்ளது. 4 counter அமைச்சிருந்தாலும் அளவில் சிறியதா இருக்கறதால மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். ஆனாலும் சமாளிச்சுடலாம் அனைத்து counter-களும் நிக்காம இயங்கும். இந்த ஏஜென்சியின் வெற்றி எண்ணிக்கை Group 1-ல் 18, Group 2-ல் 81 என மொத்தம் 99. இதன் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை.

மூன்றாவது இடம் Tong Aik Huat. இது Hougang-ல அமைஞ்சு இருக்கு. அங்கு உள்ள மக்களிடையே மிகவும் பிரபலமான பெட்டிங் ஏஜென்சியாக இது இருக்கு. இதன் வெற்றி எண்ணிக்கை மொத்தம் 120 Group 1-ல் 14, Group 2-ல் 106. இதன் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை.

நான்காவது NTUC FP Seragoon Central Hypermart. வட கிழக்கு சிங்கப்பூரில் மிகப்பெரிய சூப்பர் மார்ட் தான் இந்த  NTUC FP Seragoon Central Hypermart. இது seragoon Central-ல அமைஞ்சிருக்கு. இதன் வெற்றி எண்ணிக்கை மொத்தம் 73 Group 1-ல் 14, Group 2-ல்59. இதன் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 9:30 மணி வரை.

ஐந்தாவது Fatt Chye Heng Trading. இது Hougang avenue-ல அமைஞ்சிருக்கு. Mr. Phua Chye Huat என்பவருக்கு சொந்தமான இந்த ஏஜென்சி கடந்த இருபது வருடங்களா மிகவும் பிரபலமான TOTO வெற்றி ஏஜென்சியா இருந்து வருது. இதன் வெற்றி எண்ணிக்கை மொத்தம் 56 Group 1-ல் 14, Group 2-ல் 42. இதன் வேலை நேரம் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை.

இது வரை இந்த வகை பெட்டிங் மூலம் வெற்றி பெற்ற மிகப்பெரும் பரிசுத்தொகை 2022 பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் 2.4 மில்லியன் டாலர்கள் என 8 வெற்றியாளர்களுக்கு மொத்தம் $19.4 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது.

இது போல் ஒருவருடைய வாழ்க்கையே மாற்றக்கூடிய இந்த பெட்டிங் குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நடைபெறும்.

4D – புதன், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் TOTO – திங்கள் மற்றும் வியாழன்

உங்க அதிர்ஷ்டம் எப்படி இருக்கு-னு பார்க்க நீங்க தயாரா?

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts