TamilSaaga

ஃபெப்ரவரியில் சிங்கப்பூர் பறக்க இருக்கீங்களா… பொட்டியில இந்த டாக்குமெண்ட்ஸ் இருக்கா? ஒன்னு விட்டாலும் பின்ன வருத்தப்படுவீங்க மக்களே!

சிங்கப்பூர் வரப்பா எல்லாருக்குமே ஏக குஷி இருக்கத்தான் செய்யும். பின்ன வெளிநாட்டில் வந்து வேலை பார்க்கும் ஆசை என்பது பலருக்கு இருந்தால் இது சிலருக்கு தான் நடக்கும். என்னத்தான் சொந்த நாடு, பிறந்த வீடு, குடும்பம் என அனைத்தையும் விட்டு தனியாக வெளிநாட்டுக்கு வந்தாலும் ஓரத்தில் ஒரு மகிழ்ச்சியும் இருக்கத்தானே செய்யும். அந்த நேரத்தில் முதல் இடமே சிங்கப்பூரின் immigration தான். அப்போது உங்களுக்கு எந்த பிரச்னையுமே இல்லை என்றால் தான் சிங்கப்பூரில் இன்னும் சந்தோஷமாக உங்க வாழ்க்கையை தொடங்குவீர்கள்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு வர ஆசையா? காசும் செலவு பண்ணக்கூடாது? ஆனால் பாதுகாப்பாகவும் இருக்கணுமா? ’இத’ பண்ணுங்க கியாரண்டியா வேலை கிடைக்கும்

Immigrationல் எந்த சிக்கலும் இல்லாமல் இருக்க முதலில் சிங்கப்பூர் எடுத்து வர வேண்டிய டாக்குமெண்ட்ஸ் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூர் வேலைக்கு வரும் ஊழியர்கள் மட்டுமல்லாமல் எந்தவித பாஸில் வந்தாலும் அதற்குரிய விசாவினை வைத்திருக்க வேண்டும். அதனுடன் உங்களின் தனிப்பட்ட விபரம் அடங்கிய பாஸ்போர்ட்டும் கையில் இருக்க வேண்டியது முக்கியமாகும். இது தான் உங்க டாக்குமெண்ட்களில் ரொம்பவே முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

அடுத்து உங்க கையில் இருக்க வேண்டியது, தடுப்பூசி சான்றிதழ். இந்த சான்றிதழும் சர்வதேச சான்றிதழாக இருக்க வேண்டும். உங்க தந்தை பெயர் உங்க பெயருடன் இணைந்து பதிவிடப்பட்டு இருக்க வேண்டும். மேலும் உங்க பிறந்த தேதி மற்றும் பாஸ்போர்ட் எண் அந்த சான்றிதழில் குறிப்பிட்டு இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்க கடைசி ஊசி போட்டு 1.5 வருடத்திற்கும் மேல் ஆகி இருந்தால் கண்டிப்பாக பூஸ்டர் டோஸ் போட்டு இருக்க வேண்டும்.

வொர்க் பெர்மிட் போன்ற வேலைக்கான பாஸ்களில் சிங்கப்பூர் வரும் ஊழியர்கள் கண்டிப்பாக கையில் பாண்ட் காப்பியை வைத்து இருக்க வேண்டும். இது பெரும்பாலும் நீங்க விமான ஏற இருக்கும் ஒருநாளைக்கு முன்னரோ அல்லது சிலருக்கு விமான நிலையத்திலோ தான் கிடைத்து வருகிறது. அதனால் பயம் கொள்ள வேண்டாம்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் செல்ல வொர்க் பெர்மிட் வந்துட்டா? sg arrival card எடுக்கணுமா? எப்படி எடுக்கலாம்.. தெரிஞ்சிக்கோங்க, அப்போது தான் பதட்டப்படாம ப்ளைட் ஏறலாம்

சிங்கப்பூர் டாக்குமெண்ட்களில் SG arrival cardஐ வைத்து இருக்க வேண்டும். பெரும்பாலும் தற்போதைய நேரத்தில் இது கட்டாயமாக கேட்கப்படவில்லை என்றாலும் கையில் வைத்திருப்பதே நல்லது என்கிறார்கள்.

மேலும், புதிதாக சிங்கப்பூர் வேலைக்கு செல்லும் ஊழியர்களுக்கு குவாரண்டைன் இருக்கும் என்பதால் On-Boarding Slot புக் செய்திருக்க வேண்டும். இதை புக் செய்யும் முன் டிக்கெட் குறித்து தெளிவாக பேசிக்கொள்ளுங்கள். பின்னர் குழப்பம் வராமல் தடுக்கும். இந்த ஸ்லாட் மூலம் உங்களை 3 நாட்கள் தனியாக தங்க வைப்பார்கள். இந்த விதி புதிதாக சிங்கப்பூர் வேலைக்கு வருபவர்களுக்கு மட்டுமே.

ஏற்கனவே சிங்கப்பூர் வேலையில் இருந்து விட்டு சொந்த ஊருக்கு லீவில் சென்று திரும்புவர்களுக்கு இது தேவைப்படாது. அப்படி வரும் ஊழியர்கள் நேரடியாக கம்பெனிக்கு சென்று விடலாம். மேற்கூறிய அனைத்து டாக்குமெண்ட்களும் S-Pass, E-Pass, Tourist visa, dependent pass, business visa, student visa, TWP, TEP போன்ற எல்லா பாஸ்களுக்குமே ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

இதில் Tourist visaல் சிங்கப்பூர் வருபவர்கள் 28 நாட்கள் விசா வைத்திருக்கும் போது immigration அதிகாரிகளால் அதிகம் சோதிக்கப்படுவார்கள். கல்வி சான்றிதழை கையில் பிரிண்ட்டாக வைத்திருக்க கூடாது. அப்படி வைத்திருக்கும் நபர் உடனே அடுத்த விமானத்தில் இந்தியா திருப்பி அனுப்பப்படுவார். மேலும், இந்த விசாவில் வருபவர்கள் ரிடர்ண் டிக்கெட்டையும் போட்டு வைத்திருக்க வேண்டும்.

மேலும், மேற்கூறிய அனைத்து டாக்குமெண்ட்டுகளுமே பிரிண்ட் செய்து கையில் வைத்திருக்க வேண்டும். மொபைலில் காட்டிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் விமான நிலையம் செல்லாதீர்கள்.

நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம், திருச்சி 620 007
97 91 477 360

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts