TamilSaaga

“சிங்கப்பூரில் நைசாக பணத்தை அபேஸ் செய்த ஆசாமி” : Regular Customer செய்த பலே வேலை – கடுப்பான மசாஜ் நிறுவனம்

சிங்கப்பூரில் தனது செயல்கள் கேமராவில் பதிவு செய்யப்படுவது தெரியாமல் ஒரு நபர் அவர் அடிக்கடி சென்று வரு மசாஜ் கடையிலிருந்து பணம் எடுக்க முயன்ற வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது. பாரம்பரிய மசாஜ் மற்றும் Reflexology சிகிச்சைகளை வழங்கும் அந்த Thai Massage நிறுவனம் சிங்கப்பூரின் பாசிர் பஞ்சாங் சாலையில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டில் டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த பரிசு.. இதுவரை யாரும் கொடுக்காத பணத்தொகை – வியக்கும் சக டிரைவர்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (பிப்ரவரி 6) மதியம் 1.40 மணியளவில் நடந்த இந்த திருட்டு குறித்து கடை உரிமையாளர் “கடந்த 10 ஆண்டுகளில் இது முதல் முறை” : சிங்கப்பூரில் விலையேற்றத்தை அறிவித்த ComfortDelGro டாக்ஸி – ஏன்?

அந்த நபர் தங்களது கடைக்கு அடிக்கடி வருபவர் என்றும், மேலும் தங்கள் கடையில் வேலை செய்யும் இருவரிடம் அந்த நபரின் தொலைபேசி எண் உள்ளது என்றும் அவர் கூறினார். “எனது ஊழியர்கள் அவரைத் தொடர்பு கொண்டனர், பல அழைப்புகளுக்குப் பிறகு, அவர் திரும்பி வந்து அந்த பணத்தை எங்களிடம் திருப்பித் தந்தார். எனவே, இந்த விஷயத்தை போலீசில் புகாரளிக்க வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.

“இருப்பினும், எனது கடையிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ இதுபோன்ற நடத்தையை இந்த நபர் மீண்டும் செய்வதைத் தடுக்க ஸ்டாம்பில் எங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மற்றவர்கள் இதுபோன்ற சம்பவங்களைப் பற்றி அறிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்” என்றார் அவர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts