TamilSaaga

சிங்கப்பூரில் “இந்திய பணிப்பெண்ணுக்கு” சூடு வைத்த முதலாளி – 1 வருட சிறை தண்டனை அறிவிப்பு

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தும் நபர்கள், மாதத்திற்கு குறைந்தது ஒரு நாலாவது ஈடுசெய்ய முடியாத ஓய்வு வழங்க வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வியாழக்கிழமை அன்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பணிப்பெண்கள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கான ஆதரவை வலுப்படுத்த உதவும் வகையில் அமைச்சகம் செயல்படுத்தும் பல நடவடிக்கைகளில் இந்த புதிய நடவடிக்கையும் ஒன்றாகும் என்று மனிதவள வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் கடந்த 2018ம் ஆண்டு இந்திய பணிப்பெண் ஒருவருக்கு கையில் சூடு வைத்த அவரது முதலாளி சுரேஷ் குமார் என்பவருக்கு தற்போது ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் வீட்டில் இந்தியாவை சேர்ந்த அந்த பணிப்பெண் கடந்த 2018ம் ஆண்டு முதல் பணி செய்து வருகின்றார். அவர் சிங்கப்பூர் வருவது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.

400 வெள்ளி சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ள அந்த பணிப்பெண்ணை அவர் சமயலறையில் வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது முதலாளி சுரேஷ் குமார் என்பவர் மதுபோதையில் வந்து கையில் சூடு வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவரை கையை பிடித்து ஓர் அறைக்குள் தள்ளியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அந்த முதலாளி சுரேஷ் குமார் என்பவருக்கு 1 வருட சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வரும் பணிப்பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts