TamilSaaga

“சிங்கப்பூரில் முதலாளி கொடுத்த Surprise” : தரையில் அமர்ந்து மனம்விட்டு அழுத பணிப்பெண் – முதலாளிக்கு சபாஷ், Video

சிங்கப்பூரில், இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த 39 வயது வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவர், பல மாதங்களாக தான் வேலை செய்துவந்த குடும்பத்திற்கு உதவி வந்த நிலையில், அவர் மகிழ்ச்சியில் கண்கலங்கும் விதத்தில் ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் அந்த பணிப்பெண் வேலை செய்து வந்த வீட்டின் முதலாளி. அந்த வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண்ணுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட காட்சிகள் கடந்த பிப்ரவரி 6 அன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

“கடந்த 10 ஆண்டுகளில் இது முதல் முறை” : சிங்கப்பூரில் விலையேற்றத்தை அறிவித்த ComfortDelGro டாக்ஸி – ஏன்?

அந்த வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ரூனா, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர் மற்றும் கடந்த மே 2021ல் இந்த குடும்பத்திற்காக வேலை செய்யத் தொடங்கினார். 34 வயதான அந்த பணிப்பெண்ணின் முதலாளியான அன்னா லேமன், ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் அதில், அவரும் அவரது கணவரும் இதற்கு முன்பு ருவேனா தனது பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை என்று கூறியதைக் கேள்விப்பட்டதாக கூறினார்கள். எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் பிறந்தநாளும் மற்ற நாட்களைப் போலத்தான் கடந்துசெல்லும் என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

A post shared by • a n n s i m m o n s • (@anna__leyman)

“>அந்த நெகிழ்ச்சியான காணொளியை பார்க்க

இந்நிலையில் ரூனாவின் பிறந்தநாள் அன்று, அந்த சிங்கப்பூர் குடும்பம் அன்றைய தினம் எந்த விசேஷமும் இல்லை என்பதுபோல பாசாங்கு செய்துள்ளனர். மேலும் தம்பதிகள் ரூனாவின் பிறந்தநாளை மறந்துவிட்டதாக ரூனாவை நினைக்க வைத்துள்ளனர். அன்றைய தினம் அண்ணா தனது கணவர் மற்றும் இரண்டு மகள்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார், ஆனால் உண்மையில், அவர்கள் ரூனாவிற்கு கேக் வாங்க சென்றனர். இறுதியில் அந்த மகள்களும் பிறந்தநாள் பாடலை பாடிக்கொண்டு உள்ளே நுழைய, கண்ணீர் கசிந்த கண்களுடன் தரையில் அமர்ந்து தேம்பி தேம்பி அழுதார் ரூனா.

“சிங்கப்பூர் Star Vista Mall” : தடதடவென வந்திறங்கிய SAF ஹெலிகாப்டர்கள் – தூள் கிளப்பிய Counter-Terrorism அட்டாக்

வேலைக்கு செல்லும் ஒரு தாயாக அடிக்கடி என்னால் வீட்டில் நேரத்தை செலவு செய்யமுடியாததால், குழந்தைகளை கவனித்துக்கொள்வதற்கும், வீட்டு வேலைகளை மேற்பார்வையிட்டதற்கும் ரூனாவுக்கு நன்றி கூறுவதாக அண்ணா கூறினார். உண்மையில் தங்கள் குடும்பத்தை விட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வாழவும் ரூனா போன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் அன்பு கட்டுவது அவர்களுக்கு நிச்சயம் மனமகிழ்ச்சியை அளிக்கும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts