TamilSaaga

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டில் டாக்சி ஓட்டுனருக்கு கிடைத்த பரிசு.. இதுவரை யாரும் கொடுக்காத பணத்தொகை – வியக்கும் சக டிரைவர்கள்

சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஏறக்குறைய பாதி நாட்கள் கடந்துவிட்டன. ஆனாலும், சிங்கப்பூரில் பலர் தங்கள் குடும்பங்களுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். தவிர, கொண்டாட்டங்களின் போது அளிக்கப்படும் Red Packets-ஐ இன்னமும் பலரும் வழங்கி வருகின்றனர்.

Red Packets என்பது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களின் படி, விடுமுறை நாட்களில் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளின் போது வழங்கப்படும் பணப் பரிசாகும்.

அந்த வகையில் சிங்கப்பூரில் கார் ஓட்டுநர் ஒருவருக்கு மறக்க முடியாத நாள் அமைந்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப். 6), சிங்கப்பூரில் Grab நிறுவனத்தின் கார் ஓட்டுநர், சீனப் புத்தாண்டு கொண்டாடிய பயணியை தனது காரில் ஏற்றிச் சென்றார். அப்போது, அந்த டிரைவருக்கு காரில் வந்த பயணி, பல Red Packets-களை புத்தாண்டு பரிசாக கொடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க – “கடந்த 10 ஆண்டுகளில் இது முதல் முறை” : சிங்கப்பூரில் விலையேற்றத்தை அறிவித்த ComfortDelGro டாக்ஸி – ஏன்?

இதுகுறித்து தனியார் வாடகை வாகனம் (PHV) ஓட்டுநர்களுக்கான பேஸ்புக் குழுவில் அந்த Grab டிரைவர் டேவிட் யாவ் வெளியிட்டுள்ள பதிவில், “இவ்வளவு சிவப்பு பாக்கெட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு பெண் பயணி என்னை மகிழ்ச்சி அடையச் செய்து ஆச்சரியப்படுத்திவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, அந்த சிவப்பு பாக்கெட்டுகளில் இருந்த பணத்தையும் அந்த டிரைவர் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பயணி “இவ்வளவு தாராளமாக” இருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றும் கூறியுள்ளார்.

Photo via Facebook / David Yao

குறிப்பாக, அந்த சிவப்பு பாக்கெட்டுகளில் இருந்து மூன்று $10 நோட்டுகளை வெளியே எடுத்த பிறகு, கடைசியாக நீல நிறத்தில் இருந்த S$50 நோட்டைப் பார்த்து “அதிர்ச்சியடைந்தேன்” என்று அந்த டிரைவர் கூறியுள்ளார். மொத்தமாக அந்த டிரைவருக்கு 80 சிங்கப்பூர் டாலர்கள் அன்று கிடைத்துள்ளது.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் Star Vista Mall” : தடதடவென வந்திறங்கிய SAF ஹெலிகாப்டர்கள் – தூள் கிளப்பிய Counter-Terrorism அட்டாக்

குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் சிவப்பு பாக்கெட்டுகளில் பொதுவாக S$4 முதல் S$8 வரை இருக்கும். அதனால்தான் அந்த டிரைவர் பெற்ற தொகையாக கருதப்படுகிறது. இதுவரை இவ்வளவு பெரிய தொகையாக பரிசாக யாரும் கொடுத்ததில்லை.

இந்த பதிவுக்கு மற்ற டிரைவர்கள் வாழ்த்துக்களும், சிலர் ‘உனக்கு மாற்றி கவரை கொடுத்துட்டாங்க போல” என்ற ரீதியில் கிண்டலாகவும் பதில் அளித்துள்ளனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts