TamilSaaga

விஜய்சேதுபதி நடிப்பில் “அனபெல் சேதுபதி” : வெளியான First Look – எப்போது ரிலீஸ்? – முழு விவரம்

தமிழ் சினிமா உலகில் நட்சத்திர நாயகனாக விஜய்சேதுபதி திகழ்ந்து வருகின்றார் என்றால் அது சற்றும் மிகையல்ல. இவர் தற்போது எத்தனை படங்களில் நடித்து வருகின்றார் என்று கணக்கு சொல்ல முடியாத அளவிற்கு பல மொழிகளில் பல திரைப்படங்களை நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் பல படங்களை சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க ஆரம்பித்த விஜய்சேதுபதி இன்று சூப்பர் ஸ்டார், உலக நாயகன் மற்றும் தளபதி விஜய் போன்ற பல முன்னனி நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தராஜன் அவர்களின் மகன் தீபக் சுந்தராஜன் அவர்களின் இயக்கத்தில் உருவாகி உள்ள அன்பெல் சேதுபதி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 17ம் தேதி டிஸ்னி ஹாட் ஸ்டார் VIP தளத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாரர் காமெடி படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், தேவதர்ஷினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் தற்போது கமல் அவர்கள் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தவிர விஜய்சேதுபதி பல சிறந்த படங்களில் நடித்து வருகின்றார்.

Related posts