TamilSaaga

சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல ஏஜென்ட்டுகள் உங்களிடம் கொடுக்கும் விசா ஒரிஜினலா? போலியா? – ஒரே நிமிடத்தில் கண்டறிவது எப்படி?

சிங்கப்பூரில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலும் ஏஜெண்டுகள் மூலமாகவே வருகின்றனர். ஜாப் போர்ட்டல்களில் வேலை பற்றி தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பவர்கள் அல்லது சிங்கப்பூரில் ஏற்கனவே பணியாற்றிக் கொண்டிருக்கும் உறவினர்கள் மூலமாக அங்கு செல்வோர் அல்லது இந்தியாவில் இருக்கும் நிறுவனங்கள், தங்களது சிங்கப்பூர் கிளைகளுக்குப் பணியாளர்களை அனுப்புவது என இப்படியாக சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம். இது கிட்டத்தட்ட 5%தான். அதேநேரம், ஏஜெண்டுகள் மூலமாக சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை மீதமிருக்கும் 95% தான்.

இதுபோன்ற ஏஜெண்டுகளிடம் சிங்கப்பூர் வேலைக்காக நீங்கள் அணுகும்போது, உங்களிடம் பாஸ்போர்ட், உங்கள் கல்வித் தகுதிக்கான சான்றிதழ்கள் போன்றவற்றோடு, முன்பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுக்க வேண்டும். பின்னர், சிறிது நாட்களோ அல்லது சில மாதங்களோ கழித்து உங்களுக்கு வேலைக்கான விசா வந்திருப்பதாக அவர்களிடம் இருந்து தகவல் வரும். அந்த விசா இருந்தால் மட்டுமே சிங்கப்பூரில் சென்று பணியாற்ற முடியும். உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைத்திருப்பதாக விசா அல்லது வொர்க் பெர்மிட்டை உங்களுக்குத் தருவார்கள்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்? உடல் முழுதும் ரத்தம்.. இரவெல்லாம் நீடித்த ரணம் – இறுதியில் கைக்கொடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

உங்களின் விசா உண்மையானதா அல்லது போலியானதா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது… அதற்கான நடைமுறைகள் என்ன என்பதைத்தான் நாம இந்தக் கட்டுரைல தெரிஞ்சுக்கப் போறோம்.

  • உங்கள் பாஸ்போர்டில் விசா ஸ்டிக்கர் ஒட்டும் நடைமுறையை சிங்கப்பூர் அரசு கடந்த டிசம்பர் 1, 2009-லேயே கைவிட்டு விட்டது. இப்போது விசாக்கள் அனைத்தும் `PDF’ வடிவிலேயே வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு விசாவிலும், அதற்கென பிரத்யேக எண்ணும், ஒரு பார்கோடும் இடம்பெற்றிருக்கும். இந்த பார்கோடை ஸ்கேன் செய்து, அதன் உண்மைத் தன்மையைத் தெரிந்துகொள்ள முடியும்.
  • உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விசாவில் நீங்கள் பணியாற்றப் போகும் நிறுவனத்தின் முழு முகவரி, அதன் தொடர்பு எண்ணோடு கொடுக்கப்பட்டிருக்கும். அத்தோடு அந்த நிறுவனம் இயங்கிவரும் முகவரியின் பின்கோடு நம்பரும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த நிறுவனம் பற்றி ஆன்லைனில் தேடி, உண்மையிலேயே அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல், கூகுள் மேப் உதவியோடு குறிப்பிட்ட பின்கோடு உள்ள முகவரியில் அந்த நிறுவனம் இயங்கி வருகிறதா என்பதைக் கண்டுபிடிக்கலாம். இல்லையென்றால், தொடர்பு எண்ணை வைத்து நேரடியாக அந்த நிறுவனத்துக்கே நீங்கள் தொடர்புகொண்டு விசாரிக்கலாம். குறிப்பிட்ட நிறுவனம் போலி என்றால், நிச்சயம் உங்கள் விசாவும் போலிதான் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
  • அதேபோல், உங்கள் விசா உண்மையானதா என்பதை சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் SG work pass என்ற செயலி மூலம் எளிதாக அறிந்துகொள்ள முடியும். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விசாவில் கொடுக்கப்பட்டிருக்கும் FIN நம்பரை வைத்து இதை நீங்கள் செக் பண்ண முடியும். FIN நம்பரை வைத்து லாக்-இன் செய்ய முடியும்.
  • FIN’ நம்பர் மூலமே உங்கள் விசாவின் ஸ்டேட்டஸை அறிந்துகொள்ள முடியும். உங்கள் விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசா வழங்கப்பட்டிருந்தால், அதுகுறித்த விவரங்களைக் காட்டும். ஒருவேளை உங்களது விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தாலோ அல்லது ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலோ அதுபற்றிய தகவல்களையும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் படிக்க – இது என்ன உன் வீடா? சிங்கப்பூர் தெருக்களில் “ஆடையின்றி ஒய்யாரமாக திரிந்த வாலிபர்” – MTOக்கு உத்தரவிட்ட நீதிபதி

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் இந்த செயலியை – https://play.google.com/store/apps/details?id=sg.gov.mom.sgworkpass என்கிற முகவரியில் சென்று, கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.

இதேபோல், சிங்கப்பூர் மனிதவள அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mom.gov.sg என்ற இணையதள முகவரியில் உங்களின் விசா நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளலாம். அந்த இணையதளத்தின் e-services’ பகுதிக்குச் சென்று இதை அறிந்துகொள்ள முடியும். அதில் இருக்கும் Employment Pass Online’ வசதியின் கீழ் இருக்கும் Enquire’ ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அதன் கீழ் தோன்றும் Application/Pass Status’ என்பதை தேர்வு செய்யவும். அதன்பிறகு ஓபன் ஆகும் டயலாக் பாக்ஸில் உங்கள் விசாவில் இருக்கும் FIN’ நம்பரை எண்டர் செய்யுங்கள். அதன்பிறகு வரும் மூன்று ஆப்ஷன்களில், ஏதேனும் ஒன்றில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை நிரப்புங்கள். இந்தத் தகவல்களைக் கொடுக்கும்பட்சத்தில், உங்களுக்கு விசா வழங்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவல்கள் காட்டப்படும். ஒருவேளை உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசா போலியானது என்றால் Error’ மெசேஜ் காட்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts