TamilSaaga

சிங்கப்பூரில் இரட்டிப்பான PayNow பரிவர்த்தனை.. கடந்த ஆண்டை மிஞ்சிய செயல்பாடு – அமைச்சர் தகவல்

சிங்கப்பூரில் கோவிட் -19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, 2019 முதல் 2020 வரை, “பே நவ்” (Paynow) பரிவர்த்தனைகள் தொகுதி மற்றும் பண மதிப்பு இரண்டிலும் இரட்டிப்பாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் நடந்த பரிவர்த்தனைகளும், கடந்த வருடத்தை மிஞ்சும் வகையில் இ-பேமெண்ட் சேவையின் முழு ஆண்டு புள்ளிவிவரங்களையும் PayNow வைத்துள்ளது.

ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும், PayNow வழியாக ரொக்கமில்லா கொடுப்பனவுகள் $ 20 மில்லியன் மதிப்பை தாண்டியது. கடந்த ஆண்டு முழுவதும் பரிவர்த்தனைகள் மொத்தம் $ 22 மில்லியன் என ஒப்பீட்டில் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும் 2020 ன் மதிப்பான 125 மில்லியனைத் தாண்ட வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், 90 மில்லியன் நிதி பரிமாற்றங்கள் செய்யப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புள்ளிவிவரங்கள் மூத்த அமைச்சரும் சமூக கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு தர்மன் சண்முகரத்தினம் நேற்று திங்கள்கிழமை (அக்டோபர் 4) திரு ஆங் வீ நெங்கிற்கு (மேற்கு கடற்கரை ஜிஆர்சி) எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வெளிப்படுத்தினார்.

“இந்த காலத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனை மதிப்புகள் மற்றும் அளவுகள் மிகவும் நிலையானவை, அதே நேரத்தில் டிஜிட்டல் வாலட் பயன்பாடு அதிகரித்து வருகிறது” என்று திரு தர்மன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts