SBS ட்ரான்ஸிட் பேருந்தின் கேப்டன் ஒருவர், தனது பேருந்தில் இருந்த இறங்கிய பயணி மழையில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக தான் பயன்படுத்தும் குடையைக் கொடுத்து பலரது பாராட்டுகளை பெற்றிருக்கிறார்.
கடந்த பிப்.25ம் தேதி Jarren Low எனும் பயணி, 168ம் எண் கொண்ட SBS ட்ரான்ஸிட் பேருந்தில், Woodlands Interchange பகுதியில் இருந்து காலை 7:45 மணிக்கு ஏறியிருக்கிறார்.
பிறகு, பேருந்து கேப்டனிடம் Tampines West MRT station-க்கு அந்த பேருந்து செல்லுமா என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஆம்! என்று பதிலளித்த பேருந்து கேப்டன், Tampines West MRT station வந்தவுடன் நினைவூட்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.
ஆனால், இறங்கும் இடம் வந்த பிறகும் பயணி Jarren Low-வால் இறங்க முடியவில்லை. காரணம் மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. இதையடுத்து, மழைக்காக தான் வைத்திருந்த குடையை பயணி Jarren Low-விடம் பேருந்து கேப்டன் கொடுத்தார்.
இதுகுறித்து Mothership-க்கு பயணி லோ அளித்த பேட்டியில், “Tampines West MRT station செல்லும் போதும் நனையாமல் இருக்க குடையை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று டிரைவர் கூறினார். அதுமட்டுமின்றி, அந்த குடையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் அவர் என்னிடம் கூறினார்” என்றார்.
மேலும்,. பஸ் கேப்டனின் கருணையும் சிந்தனையும் தான் மழையில் நனையாமல் காப்பாற்றியதாக லோ கூறினார்.
மேலும், பேருந்து கேப்டனின் “சிறப்பான சேவைக்காக” லோ அவரைப் பாராட்டினார். அவர் பயணிகளிடம் “மிகவும் நட்புடன்” இருந்தார் என்றும் கூறினார்.
பிறகு, பஸ் கேப்டனின் குடையைத் திருப்பித் தரவும், தனிப்பட்ட முறையில் அவருக்கு நன்றி தெரிவிக்கவும் உட்லண்ட்ஸ் இன்டர்சேஞ்சில் காத்திருந்ததாக லோ தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அந்த பஸ் கேப்டனின் சேவைகளைப் பாராட்டுவதற்காக அவர் SBS டிரான்சிட்டிற்கு கடிதமும் எழுதியுள்ளார்.