TamilSaaga

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்? உடல் முழுதும் ரத்தம்.. இரவெல்லாம் நீடித்த ரணம் – இறுதியில் கைக்கொடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

சிங்கப்பூர் Pioneer சாலையில் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 32 வயதுப் பெண், சுமார் ஐந்து மணிநேரங்களுக்குப் பிறகு ஒரு வழிப்போக்கரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 8ம் தேதி நள்ளிரவு 12.30 மணி முதல் 2.20 மணிக்குள் துவாஸ் வெஸ்ட் ரோடு MRT-க்கு அருகில் உள்ள Tuas Viaductக்கு கீழே, பாதிக்கப்பட்ட அந்த பெண் பங்களாதேஷை சேர்ந்த அகமது ரெய்ஹான் (வயது 30), மற்றும் ஆலம் ஃபோய்சல் (வயது 36), ஆகிய இருவரால் தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மற்றொரு “Happy News” – மார்ச் 15 முதல் “புதிய விதி” அமல்

காவல்துறையின் அறிக்கையின்படி, மேற்குறிப்பிட்ட அதே நாளில் காலை 7.25 மணியளவில் அந்த வழியாக சென்ற ஒரு வழிப்போக்கர் அளித்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றதாக கூறப்பட்டுள்ளது. சீன நாளிதழான ஷின் மின் டெய்லி நியூஸ் அளித்த தகவலின்படி, சதாம் என்ற 31 வயதான புலம்பெயர்ந்த தொழிலாளி வேலைக்கு Tuas Viaduct வழியாக சென்றுகொண்டிருந்தபோது பாதிக்கப்பட்ட பெண் அங்கு நிலைகுலைந்து கிடப்பதை பார்த்துள்ளார்.

அவர் அளித்த தகவலின்படி பாதிக்கப்பட்டவரின் தலை மற்றும் கால்களில் ரத்தம் படிந்திருந்தாகவும், அவர் கிடந்த இடம் முழுக்க ரத்தம் படிந்திருந்தாகவும் கூகூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் என்ன நடந்தது என்று சதாம் கேட்க, “எனக்குத் தெரியாது” என்று பதிலளித்து குடிக்க கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். அவரும் தண்ணீர் கொடுக்க அந்த வழியாக வந்த மற்றொரு சீன புலம்பெயர் தொழிலாளரும் உதவிக்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து அவரை எழுந்து நிற்க உதவியும் அவரால் எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பரிதாப நிலையில் இருந்த அந்த பெண் இறுதியில் அந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உதவியால் எழுந்து அமர்ந்துள்ளார்.

சதாம் தனக்கு பணிக்கு நேரமானதால் அருகில் உள்ளவர்களை அழைத்து அவரை கவனிக்க சொல்லி அங்கிருந்து கிளம்பியுள்ளார். அங்கு மக்கள் அதில அளவில் கூட தகவல் அறிந்த போலீசாரும், ஆம்புலன்ஸ் குழுவும் அங்கு வந்து சேர்ந்தனர். உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார், சிகிச்ச பெரும் அந்த பெண் அளித்த தகவல், போலீசார் நடத்திய விசாரணை மற்றும் அப்பகுதியில் கிடைத்த CCTV காட்சிகளை கொண்டு அந்த இரண்டு குற்றவாளிகளும் வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 மணிநேரத்திற்குள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சிங்கப்பூர்.. வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டு பயணிகளுக்கு “Surprise” தளர்வு கொடுத்த அரசு – நம்பிக்கையோடு மகிழ்ச்சியை பரிமாறும் ஊழியர்கள்

கடந்த மார்ச் 10ம் தேதி அந்த இரு கொடூரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கு குறித்த விசாரணை தற்போது நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts