TamilSaaga

Food Pandaவில் சாப்பாடு Order செய்த சிங்கப்பூரர் : ஆனா வந்தது “கரப்பான் பூச்சி இருந்த குப்பை பைகள்” – என்னடா இது பித்தலாட்டம்!

சிங்கப்பூரில் உள்ள ஒருவர், தான் டெலிவரி மூலம் ஆர்டர் செய்த உணவுக்குப் பதிலாக ஒரு பையில் குப்பைகள் நிரப்பப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். Mala (ஒரு வகை சீன உணவு) என்ற உணவை Choa Chu Kang பகுதியில் உள்ள Chuan Mei Mala Hot Potல் இருந்து Zephyr Jun Xiang Ng ஆர்டர் செய்ததாக அவரது முகநூலில் தெரிவித்துள்ளார். மதர்ஷிப்பிடம் பேசுகையில், அவர் மார்ச் 11 அன்று இரவு 7:53 மணியளவில் ஆர்டர் செய்ததாகவும், அது இரவு 8:19 மணிக்கு ஆர்டர் தனக்கு வந்ததாகவும் தெரிவித்தார்.

“என் காலத்துக்கு பிறகு அவன் எப்படி வாழப்போரானோ தெரியல” – 29 ஆண்டுகளாக மகனை தோளில் சுமக்கும் அற்புதத் தாய்!

வழக்கத்தை விட அந்த பொட்டலம் பெரிதாக இருந்ததாகவும், அவரது சாப்பாட்டின் விலை S$19.48 என்றும் அவர் கூறினார். மேலும் டெலிவரி டிரைவர் கட்டியிருந்த பிளாஸ்டிக் பையை அவருக்குக் கொடுத்துவிட்டு உடனடியாக அங்கிருந்து வெளியேறினார் என்றும் அவர் கூறினார். அந்த பை “சந்தேகத்திற்குரிய வகையில் இலகுவாக” இருப்பதாக உணர்ந்ததாகவும், அதில் Takeawayக்கு கொடுக்கப்படும் Plastic Container எதுவுமே இல்லை என்றும் மதர்ஷிப்பிடம் அவர் கூறினார்.

அவர் அந்த பார்சல் பையை திறந்து பார்த்தபோது, வெள்ளைப் பையில் பயன்படுத்தப்பட்ட tissue தாள்கள், சுருட்டப்பட்ட ரசீதுகள் மற்றும் உணவுப் பாக்கெட்கள் ஆகியவை நிரப்பப்பட்டிருந்தன. பைக்குள் கரப்பான் பூச்சிகளும் இருந்ததாகவும் Ng கூறினார். உடனடியாக அந்த பையை Ng தூக்கி எறிந்துள்ளார், அவர் ஆர்டர் செய்த Chuan Mei Mala Hot Pot கடையின் பில் அந்த குப்பைக்கு நிறைந்த பையில் இருந்ததாகவும் அவர் கூறினார். அவர் அந்த உணவை ஆர்டர் செய்த Food Panda தலத்தில் புகார் எழுப்ப, உடனடியாக அவருக்கு முழு Refund அளிக்கப்பட்டு, கூடுதலாக 2 வெள்ளி மதிப்புள்ள வவுச்சரும் அனுப்பப்பட்டது.

சிங்கப்பூரில் வெளிநாட்டவர்களால் கற்பழிக்கப்பட்ட பெண்? உடல் முழுதும் ரத்தம்.. இரவெல்லாம் நீடித்த ரணம் – இறுதியில் கைக்கொடுத்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

மேலும் Food Panda அனுப்பிய மின்னஞ்சலில், இதுபோன்ற நிகழ்வு இனி நடக்காது என்றும், உரிய விசாரணை அந்த கடையின் மீது நடத்தப்படும் என்று கூறியது. இதன் பிறகு இன்று மார்ச் 12 அந்த Chuan Mei Mala Hot Pot கடையில் இருந்து அவருக்கு அனுப்பப்பட்ட குறுந்செய்தியில், “நடந்த தவறுக்கு மன்னிக்குமாறும், இதுவரை இதுபோன்ற தவறு நடந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.” எங்கள் பேக்கிங் இந்த வகையில் இருக்காது என்றும், தவறு வேறு எங்கோ நடந்துள்ளது என்று கூறியுள்ளது. அதே போல Ng-யும் “இது உங்கள் பேக்கிங் இல்லை என்பதை நானும் அறிவேன், நான் அடிக்கடி உங்கள் கடையில் உணவுகளை வாங்குகிறேன் என்றும் கூறியுள்ளார்.

Food Panda தற்போது இந்த நிகழ்வு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts