TamilSaaga

இது என்ன உன் வீடா? சிங்கப்பூர் தெருக்களில் “ஆடையின்றி ஒய்யாரமாக திரிந்த வாலிபர்” – MTOக்கு உத்தரவிட்ட நீதிபதி

சிங்கப்பூரில் உள்ள இயோ குய் வெய் என்ற நபர், கடந்த 2021ம் ஆண்டு உடலில் துளியும் ஆடையின்றி நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்க்கு கிடைத்த தகவலின்படி, 25 வயதான அந்த நிர்வாண மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், பொது இடங்களில் நிர்வாணமாகச் சென்றதற்காக அவர் மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு குற்றவியல் அத்துமீறல் குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

“மா.. நீ எல்லா குழந்தைகளுக்கும் Help பண்ணனும்” : சொந்த மகனை இழந்து இன்று பல குழந்தைகளை காக்கும் சிங்கப்பூர் விக்னேஸ்வரி

கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 10ம் தேதியன்று காலை சுமார் 5.30 மணியளவில் அந்த வாலிபர் வெறும் ஜட்டி மட்டும் போட்டுகொண்டு சாலையில் திரிந்துள்ளார். அப்போது ஒரு டாக்ஸியின் மீது ஏறி அட்டகாசம் செய்ய துவங்கியுள்ளார் அந்த வாலிபர். சரியாக பிளாக் 212 லோரோங் 8 டோ பயோவில் உள்ள திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் தான் இந்த நிகழ்வு நடந்தது என்று காவல்துறையின் முந்தைய அறிக்கையின்படி தெரியவந்துள்ளது. இறுதியில் வாகனத்தின் மீது ஏறி போட்டிருந்த ஒரே ஜட்டியையும் கழட்டி அந்த வாகனத்தின் மீதே போட்டுள்ளார் அவர்.

காரில் இறங்குமாறு பலமுறை அந்த ஓட்டுநர் கெஞ்சியபோது கேட்காமல் ஜட்டியை கழட்டி வண்டி மீது போட்டு, முழுமையாக நிர்வாணமான பிறகு ஓட்டுநருக்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி அந்த இடத்தைவிட்டு பிறந்த மேனியாகவே சென்றுள்ளார். அதன்பிறகு அதே ஜூன் 10, 2021 அன்று காலையில், அந்த வாலிபர் ஒரு படிக்கட்டு அருகே நிர்வாணமாக இருப்பதை வேறொருவர் பார்த்து அதிர்ந்துள்ளார். அப்போது தனது பிறப்புறுப்பை தொட்டுக்கொண்டு நின்ற “கன்றாவி” கோலத்தை பார்த்ததாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இறுதியில் காவல்துறைக்கு அந்த நபர் புகார் அளித்தபோது அங்கிருந்தும் எஸ்கேப் ஆகியுள்ளார் அந்த பிறந்தமேனி இளைஞர்.

நிர்வாணமான அந்த இளைஞரை, சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வேறு சில பொதுமக்களும் பார்த்து முகம் சுளித்துள்ளனர். ஜூன் 10 அன்று காலை 5:43 மணி முதல் மாலை 3:36 மணி வரை பொது இடங்களில் யோ என்ற அந்த இளைஞர் நிர்வாணமாக தென்பட்டதாக காவல்துறைக்கு மொத்தம் எட்டு புகார்கள் கிடைத்ததாக ST தெரிவித்துள்ளது. நிர்வாணமாக சிங்கப்பூரைச் சுற்றி வரும் இயோவின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் பரவி வந்தன.

இதுஒருபுரம் என்றால் இந்த நிர்வாண மேனி ஆசாமி அதற்கு முதல் நாள், அதாவது ஜூன் 9ம் தேதி ஒரு பொது இடத்திற்கு சென்று அங்குள்ள ஒரு கடையின் கதவை சேதப்படுத்தியுள்ளார். அந்த சேதமதிப்பீடு சுமார் 1500 வெள்ளி இருக்கும் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சேட்டைகள் செய்த பிறகு ஜூன் 11ம் தேதி பிறந்தமேனி ஆசாமி கைதானார். இந்நிலையில் இந்த வழக்கில் தற்போது மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோஹ் ஒரு கட்டாய சிகிச்சை ஆணைக்கு (MTO) அவரை உட்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூர்.. வெளிநாட்டு தொழிலாளர்கள், வெளிநாட்டு பயணிகளுக்கு “Surprise” தளர்வு கொடுத்த அரசு – நம்பிக்கையோடு மகிழ்ச்சியை பரிமாறும் ஊழியர்கள்

MTO என்பது மனநல நிலைமைகளைக் கொண்ட குற்றவாளிகளுக்கான சிறைத் தண்டனைக்குப் பதிலாக சமூக அடிப்படையிலான தண்டனையாகும். குற்றவாளிகள் தங்கள் மனநிலை குறித்த சிகிச்சையை பெற IMHல் உட்படுத்தப்பட வேண்டும். இது முடிந்து யோ என்ற அந்த வாலிபர் வரும் மே 5ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts