TamilSaaga

வாட்ச்மேன் மகள் ‘டூ’ சிங்கப்பூர் அதிபர் – ஒற்றை ஆளாய் குடும்ப பாரத்தை சுமந்து இன்று சிங்கப்பூருக்கே தலைவியான ஹலிமா யாகோப்

ஒரு காலத்தில் வீட்டு சமையலறை மட்டும் தான் பெண்ணுக்கு உகந்த இடமென்று கூறினார்கள். சிங்கப்பூர், இந்திய என்று ஆசிய நாடுகள் மட்டுமின்றி உலக அளவில் பரவலாக பெண் அடிமைத்தனம் இருந்து வந்துள்ளது.

ஆனால் இன்று காலம் மாறிப்போச்சு.. ஒரு உடலை கருவில் தாங்கி உயிர் கொடுக்கும் உன்னத பெண்கள் இன்று உலகை ஆள்கின்றனர். அந்த வகையில் துயரங்கள் பல கடந்து இன்று மாபெரும் பெண்ணாக நமது சிங்கப்பூர் மக்களை காத்துவரும் நமது அதிபர் ஹலீமா யாக்கோப் அவர்களை பற்றித்தான் காணவுள்ளோம்.

ஹலீமா யாக்கோப், ஒரு இந்திய இஸ்லாமிய குடும்பத்தை சேர்த்தவர், ஆம் அவருடைய தந்தை இந்திய வம்சாவளியில் இருந்து வந்தவர் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. சிங்கையின் மகத்தான அதிபரான ஹலீமா சிங்கப்பூர் Queen’s சாலையில் உள்ள தனது இல்லத்தில் 23 ஆகஸ்ட் 1953ம் ஆண்டு பிறந்தார்.

இளமைக்காலம்

ஹலிமா 8ம் வகுப்பு படித்து வந்த நிலையில் அவரது தந்தை காலமானார், இறுதி வரை அவர் ஒரு Watchman பணியில் இருந்து தான் குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் இறப்புக்கு பிறகு ஹலிமாவின் தாய் தான் அவரையும் அவரது 4 உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற போராடியுள்ளார்.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்

பள்ளிக்கு சென்று வந்தபிறகு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் அன்றைய சிங்கப்பூரின் Singapore Polytechnic (தற்போதைய Bestway Building) வாசலில் தாய் செய்துகொடுக்கும் “Nasi Padanga”களை விற்று குடும்பத்தை காப்பாற்றியுள்ளார்.

கல்வித்தகுதி

படிப்பு மட்டுமே தங்கள் வறுமையை போக்கும் என்று மனதில் ஒரு உறுதி பிறக்க, ஏழ்மையான குடும்ப சூழலிலும் தனது படிப்பை தொடர்ந்தார் ஹலீமா. சிங்கப்பூர் சீனா பெண்கள் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்து பின் 1978ம் ஆண்டு சட்டபடிப்பில் தனது இளங்கலைப் பட்டத்தை பெற்றார். அதன் பிறகு முதுகலை படத்தையும் முடித்து இறுதியில் கடந்த 2016ம் ஆண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

அரசியல் மீது ஆர்வம் கொண்ட ஹலிமா தேசிய தொழிற்சங்க காங்கிரஸில் சட்ட அதிகாரியாகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 1992ல் அதன் சட்ட சேவைகள் துறையின் இயக்குநரானார். அதன் பிறகு 1999ம் ஆண்டு அவர் சிங்கப்பூர் தொழிலாளர் ஆய்வுக் கழகத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

ஹலிமா 2001ல் ஜூரோங் குழு பிரதிநிதித்துவத் தொகுதிக்கு (GRC) நாடாளுமன்ற உறுப்பினராக (MP) தேர்ந்தெடுக்கப்பட்டபோது தான் முதன்முதலில் அரசியலில் கால்பதித்தார். மேலும் 2011ம் ஆண்டு பொதுத் தேர்தலைத் தொடர்ந்து, சமூக மேம்பாடு, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் மாநில அமைச்சராக ஹலிமா நியமிக்கப்பட்டார்.

மேலும் நவம்பர் 2012ல் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, அவர் சமூக மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சகத்தில் மாநில அமைச்சரானார். அவர் ஜூரோங் டவுன் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சிங்கப்பூரின் முதல் பெண் அதிபர்

இதுவரை சிங்கப்பூரை 7 அதிபர்கள் ஆட்சி செய்துள்ள நிலையில் ஹலீமா தான் சிங்கப்பூரின் 8வது மற்றும் சிங்கப்பூர் வரலாற்றின் முதல் பெண் அதிபர் ஆவார்.

Exclusive : தமிழகம் சிங்கப்பூர் விமானப் பயணம்.. குழந்தைகளுக்கு போடப்படும் “தடுப்பூசியில் வரும் சிக்கல்” – சிங்கப்பூர் வரும் குழந்தைகளுக்கு 7 நாள் Quarantine கட்டாயமா?

விருதுகள்

ஹலீமா யாக்கோப் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு Berita Harian Achiever of the Year Award வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் “Her World Woman of the Year Award” என்ற விருது 2003ம் ஆண்டும் AWARE Heroine Award என்ற விருது 2011ம் ஆண்டும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் Singapore Council of Women’s Organisation’s வழங்கும் Singapore Women’s Hall of Fameல் கடந்த 2014ம் ஆண்டு ஹலீமா இணைக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

1980ம் ஆண்டு Mohammed Abdullah Alhabshee என்பவரை திருமணம் செய்துகொண்டார், தற்போது அவருக்கு 5 குழந்தைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த தாயக, நல்ல மனைவியாக மிகசிறந்த அரசியல் தலைவராக வலம்வருகின்றார் நமது அதிபர் ஹலீமா யாக்கோப்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts