TamilSaaga

சிங்கப்பூரின் விடுதலைக்காக உயிரையும் கொடுத்த தமிழர்களை சிம்மாசனத்தில் ஏற்றி அழகு பார்த்த சிங்கப்பூர் சிங்கம்!

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து பகுதி மக்களும் லீ குவான் யூவை பற்றி அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால் மன்னார்குடி மக்களுக்கு அவர் மிகவும் பரிச்சயமானவர். இன்னும் சொல்லப்போனால் பலரும் நெஞ்சில் வைத்து பெரும் தலைவராக வணங்கக் கூடிய அளவிற்கு மன்னார்குடி மக்களின் அன்பை பெற்றவர் அவர்.

அப்படி என்ன செய்துவிட்டார்? ஏன் அவர் மேல் இவ்வளவு அன்பு வைக்க காரணம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு. இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூரில் தமிழர்களுக்கு ஏன் இவ்வளவு செல்வாக்கு என்ற கேள்விக்கான விடயம் இதுதான்.

1965 ஆம் ஆண்டு சிங்கப்பூரும் மலேசியாவும் இரண்டாவது பிரிந்த பொழுது முழுக்க முழுக்க சிங்கப்பூரின் பக்கம் நின்று, சிங்கப்பூரில் சுதந்திரத்திற்கு காரணமாக திகழ்ந்தவர்கள் தமிழர்கள். இன்னும் சொல்லப்போனால் சிங்கப்பூர் விடுதலைக்காக பல தமிழர்கள் தங்கள் உயிரையும் கொடுத்தனர்.

எனவே தமிழர்கள் அப்பொழுது முதல் அதிபராக பதவியேற்ற லீ-யின் மனதில் ஆழமாக பதிந்தார்கள். எனவேதான் சீனாவிற்கு இணையாக தமிழையும் ஆட்சி மொழியாக கொண்டு வந்தார் அவர்.

இப்பொழுதும் சிங்கப்பூரில் உள்ளவர்கள், குறிப்பாக சொல்லப் போனால் வயது முதிர்ந்தவர்கள் தமிழர்களைக் கண்டால் கையெடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்ல காரணம் லீ குவான் யூ தான். சிங்கப்பூர் வளர்ச்சியடைந்த உடன் பல தமிழர்களுக்கும் அங்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரங்களும் உயர ஆரம்பித்தன.

குறிப்பாக மன்னார்குடி பகுதியில் இருந்த மக்கள் அப்பொழுது சிங்கப்பூர் சுதந்திரத்திற்கு பங்களித்தார்கள். எனவே அங்கு சம்பாதித்த பணமே அவர்கள் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதிகளில் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி மாடி வீடுகள் கட்ட காரணமாக அமைந்தன.

தற்பொழுது சிங்கப்பூருக்கு பணி நிமித்தமாக சுற்றுப்பயணம் சென்ற மு க ஸ்டாலின் அவர்கள் அங்கு தமிழர்களிடையே உரையாற்றும் பொழுது “லீ குவான் யூ விற்கு மன்னார்குடியில் சிலை அமைக்கப்படும்” என்று கூறினார்.

அவருக்கு என் சிலையை அமைக்க வேண்டும்? அவர் நம் நாட்டிற்காக என்ன செய்தார் என்று கேட்டவர்களுக்காக நெத்தியடியாக இருக்கும் இந்த பதிவு. இன்று தமிழர்கள் சிங்கப்பூரில் உயர் பதவிகளான நீதிபதி, மருத்துவர், தொழிலதிபர் போன்றவற்றில் வகிக்க காரணம் இந்த மாமனிதர் தான்.

இவருக்கு நம் நாட்டில் சிலை அமைப்பது நம் நாட்டில் உள்ளவர்களுக்கும், வருங்காலத்தில் வரும் சந்ததியினருக்கும் அவரைப் பற்றிய அறிவு உருவாக நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Related posts