TamilSaaga

இயக்குநர் சீனு ராமசாமியே ஒருவரை பாராட்டுகிறார் என்றால்.. நடிகர் ஆர்.கே. சுரேஷ் நிச்சயம் “அதிர்ஷ்டசாலி” தான்

சீனு ராமசாமி தமிழ் சினிமாவின் மிகப்பெரிய சொத்து என்றே கூறலாம், 2007ம் ஆண்டு வெளியான கூடல் நகர் என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கினர். அதனை தொடர்ந்து அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் தென்மேற்கு பருவக்காற்று.

இந்த திரைப்படம் சிறந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றது நாம் அறிந்ததே, தனது இரண்டாவது படைப்பிலேயே தேசிய விருது வாங்கிய வெகு சில இயக்குநர்களில் சீனு ராமசாமி அவர்களும் ஒருவர். இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒப்பற்ற நடிகரான விஜய்சேதுபதியை செதுக்கிய பல சிற்பிகளில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே. சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மே 2, 2022, இயக்குனர் பாலா அவர்களின் தயாரிப்பில், இயக்குனர் பத்மகுமார் இயக்க நடிகர் ஆர். கே. சுரேஷ் கதாநாயகனாகவும், பூர்ணா, மது ஷாலினி, இளவரசு, மாரிமுத்து, பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்து GV பிரகாஷ் இசையமைத்த “விசித்திரன்” திரைப்படத்தை படக்குழு சிறப்பு காட்சியாக படம் வெளியிடுவதற்கு முன்பே திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு திரையிட்டது.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்

படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை, தொழிநுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, குறிப்பாக நடிகர் ஆர். கே சுரேஷின் “மாயன்” என்ற கதாபாத்திரத்தை, கதையின் நாயகனாக ஏற்று மிக சிறப்பாக நடித்ததை வியந்து இயக்குனர் சங்கம் வெகுவாக பாராட்டியது. ஒரு படம் திரைக்கு வருவதற்கு முன்பே இயக்குனர் சங்கத்திற்கு திரையிடப்பட்ட முதல் படம் விசித்திரன் ஆகும்.

திரைப்பட இயக்குனர் சங்க தலைவர் ஆர். கே செல்வமணி பேசுகையில், தன்னையே விதையாக்கி ஒரு மரமாக முழைக்க செய்வதன் முதல் முயற்சி தான் இந்த சினிமா, அதில் தன்னை முழுமையாக ஒப்படைத்து இவ்வளவு சிறப்பாக அனைவரும் வியக்கும்படி நடித்த ஆர். கே சுரேஷ் ஒரு சிறந்த நடிகராக தன்னை பதிவு செய்து இருக்கிறார்.

இந்த படத்துக்கு மரணம் இல்லை, காலத்துக்கும் பெயர் சொல்லும் ஒரு படைப்பு, இந்த படத்தை பார்க்காதவர்கள் துரதிருஷ்டசாலி. ஆகவே அனைவரும் இந்த படத்தை பார்க்கவேண்டும். ஆர் கே சுரேஷ்க்கு என் தனிப்பட்ட பாராட்டுகள்.

இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் ஆர். வி உதயகும்மார் பேசுகையில் “விசித்திரன்” என்ற இந்த படத்தை பார்த்து இரண்டு நாளாக நான் தூங்கவில்லை. தலைவரிடம் சொன்னேன், இன்று நாம் அனைவரும் பார்த்துவிட்டோம், என்னைபோலவே உங்களுக்கம் பாதிப்பை உண்டாக்கியதில் மகிழ்ச்சி.

அதன் பிறகு சிறப்பு கண்ணோட்டத்தில் கலந்துகொண்ட இயக்குனர் சீனு ராமசாமி பேசுகையில் விசித்திரன் படத்தின் மூலமாக ஒரு நேர்த்தியான நடிகன் தமிழ் சினிமாவிற்கு கிடைத்துவிட்டதாக நான் நினைக்கிறான். தொடர்ந்து இதுபோல நடிப்புக்கு சவால் விடும் படங்களை ஆர். கே சுரேஷ் நடிக்க வேண்டும். படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பாலா மற்றும் சீனு ராமசாமி போன்ற இயக்குநர்களிடம் இதுபோன்ற பாராட்டுகளை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆகவே நிச்சயம் நடிகர் சுரேஷ் அவர்கள் மிகசிறந்த நடிகராக வலம்வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

அதன்பிறகு, ஒவ்வொரு துணை, இணை, உதவி இயக்குனர்கள் தங்கள் கருத்துகளை முறையே பதிவு செய்தனர். அதை படக்குழு விளம்பரத்துக்காக எந்தவித தொகுப்பும் செய்யாமல், அதை அப்படியே இணையதளத்தில் பதிவு செய்துள்ளது.

சிங்கப்பூரில் களைகட்டிய Hari Raya Puasa கொண்டாட்டங்கள் – கண்கவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்

ஒரூ வளர்ந்தவரும் நடிகனின் படத்தை பார்த்து இயக்குனர் சங்கம் வெகுவாக சிலாய்த்து பாராட்டியது இதுவே முதல் முறை. அதன்பிறகு படத்தின் கதாநாயகனும் தனது Studio 9 நிறுவனம் மூலம் உலகெங்கும் “விசித்திரன்” படத்தை வெளியிடும் ஆர் கே சுரேஷ் நெகிழ்ந்து அனைவருக்கும் நன்றி கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts