TamilSaaga

Exclusive : தமிழகம் சிங்கப்பூர் விமானப் பயணம்.. குழந்தைகளுக்கு போடப்படும் “தடுப்பூசியில் வரும் சிக்கல்” – சிங்கப்பூர் வரும் குழந்தைகளுக்கு 7 நாள் Quarantine கட்டாயமா?

சிங்கப்பூர் அரசு தற்போது பல கட்டுப்பாடுகளை தொடர்ந்து தளர்த்தி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சிங்கப்பூரில் அமலாகியுள்ள தளர்வுகள், பெருந்தொற்றுக்கு முன்பு சிங்கப்பூர் இருந்த நிலையை மீண்டும் கொண்டுவந்துள்ளதாக அண்மையில் தெரிவித்தார் நமது சிங்கை பிரதமர் லீ.

இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் உள்ள மதுரையிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒரு குடும்பம் அவர்களுடைய குழந்தை Corbevax என்ற தடுப்பூசி போட்டுள்ளதால் அந்த குழந்தை சிங்கப்பூர் செல்ல முடியாது என்றும். அப்படி அவர் சிங்கப்பூர் வரவேண்டும் என்றால் சிங்கப்பூரில் அவர் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளது பெரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விமான டிக்கெட் சேவையில் பல வருட அனுபவம் உள்ள திருச்சி விமான நிலையத்தில் செயல்பட்டு வரும் நந்தனா ஏர் Travels உரிமையாளரிடம் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் செய்திக்குழு தொடர்புகொண்டு கேட்டபோது அவர் சில Exclusive தகவல்களை அளித்துள்ளார்.

சிங்கப்பூரில் களைகட்டிய Hari Raya Puasa கொண்டாட்டங்கள் – கண்கவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புலம்பெயர் தொழிலாளர்கள்

அவர் அளித்த தகவல்படி, மதுரை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட தயாராக ஒரு குடும்பம் அனைத்து ஆவணங்களுடன் காத்திருந்துள்ளனர். அந்த குடும்பத்தோடு சிங்கப்பூர் பயணிக்கவிருந்த ஒரு (5 முதல் 12 வயதுக்கு உட்பட) குழந்தைக்கு இந்தியாவில் Corbevax தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Corbevax என்பது இந்தியாவில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போடப்படும் பெருந்தொற்று தடுப்பூசி. ஆனால் அந்த வகை தடுப்பூசி சிங்கப்பூர் அரசால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த குழந்தை சிங்கப்பூர் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்

அதன் பிறகு விமான நிலைய அதிகாரிகளிடம் பேசி குழந்தை சிங்கப்பூர் வந்திறங்கியதும் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டு பின் வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்தப்படும் என்று கூறிய பிறகு immigration அதிகாரிகள் அந்த குழந்தையையும், குடும்பத்தையும் சிங்கப்பூர் வர அனுமதித்துள்ளனர்.

ஆகவே Corbevax தடுப்பூசி போட்ட 5 முதல் 12 வயதுள்ள குழந்தைகள் சிங்கப்பூர் வரும்போது கட்டாய 7 நாள் வீட்டு தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட பயணிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

News Source : நந்தனா ஏர் டிராவல்ஸ்

விமான டிக்கெட் சேவைகளுக்கு தொடர்பு கொள்ளுங்கள்
நந்தனா ஏர் டிராவல்ஸ்
திருச்சி விமான நிலையம் திருச்சி 620 007
9600 223 091

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts