TamilSaaga

சிங்கப்பூரை எண்ணி பெருமைகொள்ளும் குடிமக்கள் எத்தனை பேர்? – ஆய்வில் தகவல்

சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகம் சார்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2020 மார்ச் மாதம் வரை ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சிங்கப்பூரில் வாழும் குடிமக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த ஆய்வின் தகவல்கள் அடிப்படையில் ஆசிய சமூகத்தினருக்கு இடையே தேசிய பற்று வாய்ந்த தேசமாக இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது என தெரியவந்துள்ளது. சிங்கப்பூரை விட தேசப்பற்று நிறைந்த நாடாக முதல் இடத்தில் உள்ள ஒரே தேசிய சமுதாயமாக தாய்லாந்து இடம்பெற்றுள்ளது.

சிங்கப்பூரை பொறுத்தவரை இங்குள்ள குடிமக்களில் 10 பேருக்கு 9 பேர் தேசப்பற்று காரணமாக பெருமிதம் கொள்கின்றனர். அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுத் தகவல்கள் பண்புகள் ஆய்வுக்கான அறிக்கையில் வெளியிடப்பட்டது.

Related posts