TamilSaaga

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு.. சிங்கையில் புதிய வேலை தேடும்போது கவனம் தேவை – அதிகரிக்கும் வேலைவாய்ப்பு மோசடிகள்

சிங்கப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளியான பீட்டர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) தனது குடும்பத்துக்காக இங்கு வந்து உழைக்கும் பல தொழிலாளர்களில் ஒருவர். 2019ம் ஆண்டு தனது குடும்பத்தை பிரிந்து வேலைக்கு வந்த அவர் தனது குடும்பத்திற்காக ஒரு வீடு கட்டவேண்டும் என்ற வைராக்கியத்துடன் வந்துள்ளார்.

சிங்கப்பூரில் உள்ள கிடங்கு ஒன்றில் உற்பத்தி ஒருங்கிணைப்பாளராகப் பணிபுரியும் பீட்டர், வேலைவாய்ப்பு மோசடியால் சிக்கிய கிட்டத்தட்ட 11,000 வெள்ளியை இழந்துள்ளார். இது அவருடைய ஒரு வருட சம்பளத்திற்கு சமமானது என்பதும் தான் வேதனை அளிக்கும் விஷயம்.

ஒரு ஆன்லைன் போர்ட்டலில் 60 ஆர்டர்களைப் பூர்த்தி செய்வதன் மூலம் கமிஷனைப் பெறலாம் என்று ஒரு வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த WhatsApp செய்திக்கு பதிலளித்ததாக அவர் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

ஆனால் அவ்வாறு கமிசன் பெறுவதற்கு முன்பு, அவர் முதலில் வங்கிக் கணக்கில் சிறிது பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியிருந்தது. உடனே பீட்டர் ஜூன் 21 அன்று $135 செலுத்தி அதே நாளில் $404 பெற்றார், ஆசை பிறந்தது அடுத்த நாள், அவர் $11,730 மதிப்புள்ள எட்டு பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார். ஆனால் அவர் ஆர்டர்களை முடிக்க முடியாததால், பின்னர் அவரது பணத்தை மீட்டெடுக்க முடியவில்லை.

சிங்கப்பூர் தமிழர்களின் “சூப்பர்” முயற்சி! – தமிழ்நாட்டு பத்திரிகையாளர்கள் தான் கைக்கொடுக்கணும் – மேடையிலேயே அசந்து பேசிய பிரபலம்

அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டுள்ளது அவருக்கு தெரியவந்தது, உடல் போலீசாரிடம் புகார் அளிக்க தற்போது விசாரணை நடந்து வருகின்றது. கடந்த ஆண்டு மட்டும் சிங்கப்பூரில் 3,181 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மோசடிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர், இது 2020ல் 1,965 ஆக இருந்தது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே போல கடந்த ஆண்டு சுமார் 357 வீட்டுப் பணியாளர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளனர், இது 2020ல் 216 ஆக இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, சிங்கப்பூரில் 2,46,300 புலம்பெயர்ந்த வீட்டுப் பணியாளர்கள் இருந்தனர் மற்றும் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் 318,400 வேலை அனுமதி வைத்திருப்பவர்கள் உள்ளனர் என்று மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் MasterChef நிகழ்ச்சியின் சீசன் 3.. நேற்று முதல் கோலாகல ஆரம்பம்.. போட்டியில் கெத்தாக களமிறங்கும் “தமிழர்கள்”

இவர்களில் அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் பொதுவாக வேலைவாய்ப்பு மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதாக டிரான்சியன்ட் ஒர்க்கர்ஸ் கவுண்ட் டூவின் பொது மேலாளர் திரு. ஈதன் குவோ கூறினார். ஆகவே சிங்கப்பூர் வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் இங்கு வந்து புதிய வேலைகளை தேடும் முன் சற்று கவனமாக செயல்படுவது நல்லது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts