TamilSaaga

விசா இல்லாமல் மலேசியாவிற்கு செல்ல வேண்டுமா? அப்படினா அதுக்கு முன்னாடி இதை கட்டாயமாக செய்யணும்..!!

இந்திய நாட்டவர்கள் இனி விசா இல்லாமல் மலேசியாவிற்கு செல்லலாம் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பானது சிங்கப்பூரில் வாழும் பல வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது. டிசம்பர் 1 முதல் இந்த அறிவிப்பு வந்ததை ஒட்டி பல இந்தியர்களும் மலேசியாவிற்கு சென்று வார இறுதி நாட்களில் விடுமுறையை கழித்தனர்.

இந்நிலையில் மலேசிய அரசு தற்போது முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது மலேசியா நாட்டினை சென்று அடைவதற்கு முன்னர் மின்இலக்க அட்டை எனப்படும் டிஜிட்டல் அட்டையை நிரப்ப வேண்டும் என மலேசியா குடிநுழைவுத்துறை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

மலேசியா நிரந்தர வாசிகள் வசிப்பிட உரிமை பெற்றவர்கள் உள்ளிட்ட மலேசியா குடி நுழைவு அட்டை பெற்றிருப்பவர்கள் இந்த விதியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் என அறிவித்துள்ளது. மேலும் மலேசியா செல்வதற்கு மூன்று நாட்களுக்குள் இந்த அட்டை நிரப்பப்பட வேண்டும் என அறிவிப்புவெளியாகியுள்ளது. இந்த அட்டையில் பயணிகள் தங்களது பெயர், நேசோனாலிட்டி, பாஸ்போர்ட், மலேசியா வந்தடையும் மற்றும் திரும்பச் செல்லும் தேதி ஆகியவற்றை நிரப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது. எனவே சிங்கப்பூரில் வாழும் வெளிநாட்டவர்கள் மலேசியா செல்ல வேண்டும் என்று நினைத்தால் முன்கூட்டியே விவரங்களை பதிவு செய்து பின்னர் உங்களது பயணங்களை திட்டமிடுவது சிறந்தது.

Related posts