TamilSaaga

செழிப்பான விண்வெளித் துறையை உருவாக்கும் பாதையில் சிங்கப்பூர் – புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுமா?

நமது சிங்கப்பூர் 2000மாவது ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து, விண்வெளியில் தனது முத்திரையைப் பதிக்க அமைதியாகவும் சீராகவும் முன்னேறி வருகிறது என்றே கூறலாம். பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கலின்போது, விமானப் போக்குவரத்து, கடல்சார் மற்றும் நிலைத்தன்மை போன்ற முக்கியமான களங்களை ஆதரிப்பதற்கும், மற்றும் விண்வெளித் திறன்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் உதவ $150 மில்லியன் முதலீட்டை அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

300 ஆண்டுகளாக கோவிலில் வணங்கப்பட்டு வந்த “கடற்கன்னியின் மம்மி” : ஆய்வு செய்ய களமிறங்கும் ஜப்பான் வல்லுநர்கள் – பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு

இங்குள்ள விண்வெளித் துறையில் தற்போது 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் 1,800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்ட விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் தொடர்பான Start-Up நிறுவனங்கள் இங்கு வேரூன்றியுள்ளது என்று சிங்கப்பூரின் தேசிய விண்வெளி அலுவலகமான – விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை அலுவலகத்தின் (OSTIn) நிர்வாக இயக்குனர் திரு டேவிட் டான் கூறினார்.

ஆனால் வேறொரு எல்லைக்குள் நுழைவதைக் கற்பனை செய்து பார்க்கும் மக்கள் குழுக்கள் இல்லாமல் ஒரு வளரும் விண்வெளி சுற்றுச்சூழல் என்பது சாத்தியமில்லை. அகா அப்படி சிந்திக்கக்கூடிய இருவர் தான் ஆசிய-பசிபிக்கின் முன்னணி விண்வெளி அமைப்பான சிங்கப்பூர் Space and Technology Limited (SSTL) நிறுவனத்தை சேர்ந்த திருமதி லினெட் டான் மற்றும் திரு ஜொனாதன் ஹங், இவர்கள் முறையே தலைமை நிர்வாகி மற்றும் செயல் தலைவர் ஆவர்.

2000களின் முற்பகுதியில், பொறியியல் மற்றும் விண்வெளியில் பயிற்சி பெற்ற திருமதி டான் மற்றும் திரு ஹங் – சிங்கப்பூரில் விண்வெளிக் காட்சியை முன்னோடியாகக் கொண்டுவரும் யோசனையை முன்வைத்தபோது பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தனர். ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் சேர்ந்து, திருமதி டான் மற்றும் திரு ஹங் சிங்கப்பூர் விண்வெளி மற்றும் தொழில்நுட்ப சங்கத்தை 2007ல் நிறுவினர், இப்போது அதுதான் SSTL என அழைக்கப்படுகிறது.

இன்றைய தேதியில் இதுவரை, சிங்கப்பூர் 16 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (NTU) மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முக்கியமாக புதிய தொழில்நுட்பத்தை ஆராய்ச்சி மற்றும் செயல்விளக்கத்திற்காக உருவாக்கியுள்ளன. நாட்டின் முதல் வணிக செயற்கைக்கோள், TeLEOS-1, 2015ல் ஏவப்பட்டது. 400 கிலோ எடையுள்ள பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் ST இன்ஜினியரிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

சிறிய செயற்கைக்கோள்கள் சில கிலோகிராம் முதல் 200 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களின் குழுவைக் குறிக்கும். NTU செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் லிம் வீ செங், பாரம்பரிய, பெரிய செயற்கைக்கோள்களுடன் ஒப்பிடுகையில், சிறிய செயற்கைக்கோள்களுக்கு குறைந்த செலவில் மற்றும் வேகமாக உருவாக்கி உற்பத்தி செய்வதால் அதிக விருப்பம் உள்ளது என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் தொடர்கதையான “பசை பொறிகள்” : Tampines பகுதியில் மீட்கப்பட்ட பூனை – இந்த வீடியோவை பார்த்தாவது மனம் மாறுவார்களா?

சரி விண்வெளி வளர்ச்சியில் சீராக முன்னேறும் சிங்கப்பூரில் அதுகுறித்து வேலைவாய்ப்புகள் அதிகரிக்குமா என்று கேட்டல் நிச்சயம் அதிகரிக்கும் என்று தான் கூறவேண்டும். விண்வெளி ஆராய்ச்சி ஒருபுறம் வளர aerospace துறையும் சிங்கப்பூரில் அதீத வளர்ச்சியை கண்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்த தொற்று காலத்திற்கு பிறகு அதன் வளர்ச்சி அதிக அளவில் உள்ளது. ஆகையால் விண்வெளி மற்றும் aerospace துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts