TamilSaaga

“சிங்கப்பூர் சைனா டவுனில் 600 இலவச உணவுப் பொட்டலங்கள்” – Five Dragons நிறுவனம் அறிவிப்பு

சிங்கப்பூரில் செப்டம்பர் 14 மற்றும் 18ம் தேதிகளில் சீனா டவுன் பகுதியில் இலவச உணவு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கத்திய உணவு விடுதியான Five Dragons, வெஸ்டர்ன் & கிரில் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டு தேதிகளிலும் மதியம் 12:30 மணிக்கு 300 உணவுப் பொட்டலங்களை இலவசமாக வழங்குகிறது.

Budha tooth கோவிலின் பின்புறம் சைனாடவுன் பார்வையாளர் மையத்திற்கு அருகில் உணவு விநியோகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வருகை தரும் ஒவ்வொருவருக்கும் ஒரு உணவு பொட்டலம் வழங்கப்படும். மேலும் கோழி, முட்டை மற்றும் fired rice ஒரு வகையாகவும் சைவ பாஸ்தா.ஒரு வகையும் வழங்கப்படும்.

மேலும் இந்த இலவச உணவுகளோடு, வருகை தரும் மக்களுக்கு இலவச முகக்கவசமும் வழங்கப்படும் என்று ஸ்டாலின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். மே 21 முதல், அவர்கள் வாராந்திர அடிப்படையில் உணவு கொடுக்கத் தொடங்கினர். இந்த உணவுகள் அனைத்தும் உணவு தேவைப்படும் செங்காங் குடியிருப்பாளர்களுக்கும் (செங்காங் குடியிருப்போர் குழுவுடன் இணைந்து) மற்றும் சைனாடவுன் பகுதியிலும் வழங்கப்படுகிறது.

Related posts