TamilSaaga

300 ஆண்டுகளாக கோவிலில் வணங்கப்பட்டு வந்த “கடற்கன்னியின் மம்மி” : ஆய்வு செய்ய களமிறங்கும் ஜப்பான் வல்லுநர்கள் – பல உண்மைகள் வெளிவர வாய்ப்பு

பல ஆண்டுகளாக மர்மமாக இருந்து வரும் சுமார் 300 ஆண்டுகள் பழமையான “கடற்கன்னி மம்மியை” ஆய்வு செய்யும் திட்டத்தில் ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தற்போது இறங்கவுள்ளனர். மனிதன் மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல கோடி உயிரினங்களும் தங்களுக்கான பரிணாம வளர்ச்சியை இன்றளவும் அடைந்து கொண்டு தான் இருக்கின்றது என்கிறார்கள் அறிவியலாளர்கள். அப்படி பரிணாம வளர்ச்சியை கண்ட பல இனங்கள் அழிந்தும் உள்ளது, அதற்கு உதாரணமாக கூறப்படுவது தான் இந்த கடற்கன்னிகள். ஆனால் உண்மையில் இந்த கடற்கன்னிகள் நாம் வாழும் இந்த உலகில் வாழ்ந்தனவா? என்பது கேள்விக்குறியே.

“சிங்கப்பூரின் F&B மற்றும் சில்லறை வணிகத்துக்கு உதவு புதிய முயற்சி” : 70 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு – சிறப்புகளை விவரித்த அமைச்சர் Low Yen Ling

ஜப்பானிய செய்தி நிறுவனமான Asahi Shimbun வெளியிட்ட செய்தியின்படி, கிட்டத்தட்ட 30-சென்டிமீட்டர் நீளமுள்ள உயிரினம் ஒன்று மனிதனை போன்ற மேல் உடலையும் ஒரு மீனை போன்ற கீழ் பகுதி உடலையும் கொண்டுள்ளது. இந்த உயிரினம் கடந்த 1700களின் தொடக்கத்தில், இன்னும் துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் 1736 மற்றும் 1741-க்கு இடையில் ஜப்பானிய தீவான ஷிகோகுவில் பசிபிக் பெருங்கடலில் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கு முன்பு வரை இது ஒரு கோவிலில் வைக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஒரு வழிபாட்டுப் பொருளாக இருந்து வந்தது என்றும் Asahi Shimbun தெரிவித்துள்ளது. Asahi Shimbunன் கூற்றுப்படி, ஜப்பானில் உள்ள குராஷிகி அறிவியல் மற்றும் கலை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிற அமைப்புகளின் ஆராய்ச்சியாளர்கள் இந்த 2022ம் ஆண்டின் இறுதியில் இந்த கடற்கன்னி குறித்த தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கன்னி மம்மி ஆய்வு செய்யப்படும் காணொளி

பழங்காலவியல் என்று அழைக்கப்படும் Paleontology துறையில் நிபுணத்துவம் பெற்ற Kurashiki பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், அந்த உயிரினத்தின் மேல் உடலை ஆய்வு செய்வார். அதேபோல Ichthyology துறையில் நிபுணத்துவம் பெற்ற மற்றொரு இணை பேராசிரியர் அந்த உயிரினத்தின் கீழ் உடலை ஆய்வு செய்வார். இறுதியாக Molecular Biology என்று அழைக்கப்படும் மூலக்கூறு உயிரியலில் நிபுணத்துவம் பெற்ற மற்றொரு இணைப் பேராசிரியர், அந்த உயிரினத்தின் DNA பகுப்பாய்வை மேற்கொள்வார்.

சிங்கப்பூரில் தொடர்கதையான “பசை பொறிகள்” : Tampines பகுதியில் மீட்கப்பட்ட பூனை – இந்த வீடியோவை பார்த்தாவது மனம் மாறுவார்களா?

நிச்சயம் இந்த ஆய்வின் முடிவுகள் கடற்கன்னிகள் பற்றிய பல நூறு ஆண்டுகால சந்தேகத்தை தீர்த்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts