SINGAPORE: Covid 19-க்கு முன்பாக, சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தினம் இரண்டு Scoot விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. சிங்கப்பூரில் இருந்து இரவு 9.10 மணிக்கு எடுக்கப்படும் விமானம், திருச்சியில் இரவு 10.50 மணிக்கு வந்து சேரும். அதுபோல், இரவு 11 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து எடுக்கப்படும் இரண்டாவது விமானம், நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்சி வந்து சேரும்.
அதுபோல், திருச்சியில் இருந்து முதல் Return விமானம், இரவு 11.50 மணிக்கு முதல் விமானமும், நள்ளிரவு 1.30 மணிக்கு இரண்டாவது விமானமும் கிளம்பும். இதுதான் கொரோனாவுக்கு முந்தைய நடைமுறையாக இருந்தது.
இந்நிலையில், கொரோனாவுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஒரேயொரு விமானம் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில், வரும் அக்.30ம் தேதி முதல் மீண்டும் அந்த இரண்டாவது விமானத்தின் போக்குவரத்தை ஸ்கூட் நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது. நவம்பர்.1 தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள இந்த விமானத்திற்கான புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது.
ஸோ, இனிமேல் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, மீண்டும் பழைய நடைமுறைப்படி இரண்டு விமானங்கள் இயக்கப்பட உள்ளது.