TamilSaaga

சிங்கப்பூரில் தொடர்கதையான “பசை பொறிகள்” : Tampines பகுதியில் மீட்கப்பட்ட பூனை – இந்த வீடியோவை பார்த்தாவது மனம் மாறுவார்களா?

சிங்கப்பூரில் பசை பொறி என்று அழைக்கப்படும் அந்த Glue Trap ஏற்கனவே பல உயிரினங்களின் உயிர்களை பலிவாங்கியுள்ள நிலையில் அது தற்போது ஒரு தொடர்கதையாகவே மாறியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள Tampines பகுதியில் சாம்பல் நிற பூனைக்குட்டி ஒன்று பசை பொறியில் சிக்கி பரிதாபமாக இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. உயிரைக்காக்க கூச்சலிட்ட அந்த பூனைக்குட்டியின் வீடியோவை Facebook பயனர் கிரேஸ் சாய் என்பவர் கடந்த பிப்ரவரி 27 அன்று காலை வெளியிட்டார்.

“சிங்கப்பூர் வந்திறங்கும் இந்திய பயணிகளுக்கு மேலும் ஒரு தளர்வு” : இனி நீங்க தாராளமா பொது போக்குவரத்தை பயன்படுத்தலாம் – முழு விவரம்

பூனை சிக்கியிருந்த காணொளி

நான்கு வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில், பூனைக்குட்டி ஒன்று அதன் உடலைக்கூட சற்றும் அசைக்க முடியாமல் கருப்பு பசையால் மூடப்பட்டிருந்த நிலையில் கத்துவதை காணமுடிந்தது. அதே நாளில் வெளியான ஒரு அப்டேட்டில், மூன்று மாதங்களே ஆன அந்த பூனைக்குட்டியை விலங்குகள் வதை தடுப்புச் சங்கம் (SPCA) மீட்டது என்று அந்த Facebook பயனர் கிரேஸ் சாய் ஒரு தனி பதிவில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூனை மீட்கப்பட்டதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் ஒருவர் அதை பரிசோதித்துள்ளார். சாயின் கூற்றுப்படி, பூனைக்குட்டி மூன்று முறை சுத்தம் செய்யப்பட்டது என்றும், ஆனால் அதன் ரோமங்கள் இன்னும் ஒட்டும் தன்மையுடன் இருந்ததால் “இன்னும் அதிக முறை அது சுத்தம் செய்யப்பட வேண்டும்” என்றும் கூறினார். சிங்கப்பூரின் டாம்பைன்ஸ் தெரு 81ல் உள்ள ஈரச்சந்தையில் பூனைக்குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சாய் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

பூனைக்குட்டி மருத்துவர்கள் அளித்த Antibiotic மருந்துகளை உட்கொண்டது என்றும், விரைவில் அது தத்தெடுக்கப்படுவதற்கு முன் தடுப்பூசி போடப்படும் என்றும் கூறப்படுகிறது. “அவள் சற்று ஒல்லியாக இருக்கிறாள், அதனால் இப்போது SPCA அவள் எடையை அதிகரிக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது” என்று சாய் கூறினார். Coconuts Singapore அளித்த கூற்றுப்படி, பூனைக்குட்டி மீட்கப்படுவதற்கு முன்பு ஏழு மணி நேரம் அந்த பொறியில் சிக்கியிருந்தது என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் S Pass, Work Permitல் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு இனி இது கட்டாயம் – சிங்கை அரசு கொடுத்த “புதிய Update”

சந்தையில் சுற்றித் திரியும் எலிகளைப் பிடிப்பதற்காக இந்த ஒட்டுப் பொறி வைக்கப்பட்டிருந்தாக தெரிகிறது என்றும். “இந்த சந்தையில் எலிகள் தொல்லை பிரச்சனை அதிகமாக உள்ளது, நாங்கள் அந்த பூனையை மீட்டுக்கொண்டிருந்த நேரத்தில் கூட ஒரு எலி அந்த வழியாக கடந்து சென்றதை பார்த்ததாக” சாய் கூறினார்.

Related posts