TamilSaaga

போராடணும், ஜெயிக்கிற வரைக்கும் போராடணும்… ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் மல்லுக்கு நின்ற தமிழக பயணி… சிங்கப்பூரில் இருந்து வந்த பூஸ்டா இருக்குமோ!

ஏர்போர்ட்டில் அவ்வபோது நடக்கும் சில சம்பவங்கள் பல வருடம் கழித்து கேட்டால் கூட அது பலருக்கும் விழிப்புணர்வு தரும் விஷயமாக தான் இருக்கும். நான் இப்போ சொல்ல போற சம்பவமும் அப்படி தான். இந்த சம்பவம் நாளை உங்களுக்கு நடக்கலாம் அதனால் கவனமாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வரும் பயணி அவரின் லக்கேஜ்களை கன்வேயர் பெல்ட்டில் காணாமல் தவிக்கிறார். உடனே அங்கிருந்த விமான ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் அளிக்கிறார்.

ஆனால் அவர்களோ சிங்கப்பூரில் இருந்து உங்க லக்கேஜ் திருச்சிக்கு வந்துவிட்டது. இனி எங்களுக்கு அதில் பொறுப்பு இல்லை. நீங்க Airport Authority-ஐ தான் பார்க்க வேண்டும் எனக் கூறினார். அந்த பயணியோ இப்போ நீங்க சொன்னத எழுத்து பூர்வமா எழுதிக் கொடுக்க முடியுமா எனக் கேட்க அந்த ஊழியர் பயந்து விடுகிறார்.

உடனே ஏர்போர்ட்டில் இருக்கும் காவலர், பயணியை Authorityகளிடம் கூட்டி சென்று விஷயத்தை சொல்கிறார். அங்கிருந்த அதிகாரி, இதுபோல நடப்பது சாதாரணமான ஒன்று தான் சார். 48 மணி நேரத்தில் கிடைத்து விடும் வீட்டுக்கு தைரியமாக போங்கள் என்றார்.

ஆனால் அந்த பயணியோ என் லக்கேஜ்கள் விமான நிலையத்தில் உங்க கட்டுபாட்டில் இருந்தால் நீங்க சொல்வதை சரியென ஏற்றுக்கொண்டு நான் கிளம்புவேன். ஆனால் இப்போது விமான நிலையத்தினை தாண்டி என் லக்கேஜ் சென்று விட்டது. அதை எடுத்து சென்றவர் நல்லவரா என தெரியாதபட்சத்தில் என்னால் எப்படி வீட்டிற்கு செல்ல முடியும் எனக் கேட்டு இருக்கிறார்.

சற்று நேரம் யோசித்த அதிகாரி, செக்கிங்கில் இருந்த அதிகாரிகளை அழைத்து கன்னாபின்னாவென டோஸ் விட்டார். பயணியிடம் இப்போ என்ன சார் முடிவெடுத்து இருக்கீங்க? உங்க லக்கேஜிற்கான மதிப்பை தந்து விடுகிறோம் எனக் கூட கேட்டு பார்த்தார். இல்ல 24 மணி நேரம் காத்திருங்கள் கிடைத்து விடும் எனக் கேட்க பயணியோ விடாப்பிடியாக என் லக்கேஜ் வேணும். இல்லையென்றால் நான் நுகர்வோர் கோர்ட்டுக்கு தான் செல்வேன் எனக் கூறிவிட்டார்.

அங்கிருந்த அதிகாரிகளோ, உங்க குடும்பம் வெளியில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். நீங்க போய் கையில் இருக்கும் லக்கேஜையாவது கொடுத்து விட்டு வாருங்கள் என்றார்கள். ஆனால் ஏர்போர்ட்டை விட்டு வெளியேறினால் என்னால் உள்ளே வரமுடியாது என பிடிவாதமாக கூறிவிட்டு அமர்ந்து விட்டார். அப்போது செக்கிங்கில் இருந்த அதிகாரி ஒருவர் வந்து, சாரி சார். உங்க லக்கேஜை தெரியாமல் எடுத்து சென்றவரை கண்டுபிடித்து விட்டோம். இன்னும் சற்று நேரத்தில் உங்க லக்கேஜ் அங்கிருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று விடும்.

விமான நிலையத்தில் இருந்து அந்த ஊர் 100 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. நீங்க போயிட்டு நாளைக்கு வாங்க எனக் கூறியிருக்கிறார். பயணி மீண்டும் சொன்னதையே முடியாது என்றேன். அவரோ கொஞ்சம் காண்டாகி பயணியை அழைத்து வந்து அவர் குடும்பத்தினரிடம் விஷயத்தை சொல்லி என் கையில் இருந்த லக்கேஜை கொடுத்து விட்டு அவர்களை ஊருக்கு கிளம்ப சொன்னார். அந்த பயணியை அங்கையே காத்திருக்க கூறுகிறார். இவரோ போன் நம்பரை வாங்கிக் கொண்டு தான் சரியென கூறினாராம்.

அடுத்த சில மணி நேரம் கழித்து 3 காவலர்கள் வந்து இவரை உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து செல்கிறார்கள். ஆனால் காவல்நிலையத்திற்கு லக்கேஜ் வராமல் போனதால், எடுத்தவரின் வீட்டுக்கே கூட்டி சென்று லக்கேஜை வாங்கி கொடுத்து விடுகிறார்கள். மீண்டும் விமான நிலையத்திற்கு வந்தவரை இந்த நேரம் ஊருக்கு போக வேணாம். காலை விமான நிலையத்தில் ஒரு சில நடமுறைகள் இருக்கு அதை நீங்க தான் செய்யணும். காலை வாருங்கள் எனக் கூறி 3 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்தனராம்.

காலை வந்த பயணியிடம் சில இடங்களில் கையெழுத்து வாங்கி கொண்டு அவர் ஊர் போய் சேருவதற்கும், சாப்பாட்டிற்கும் காசை கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அந்த பயணி பல மணி நேர போராட்டத்தை தொடர்ந்து தன் சொந்த ஊர் நோக்கி சென்றாராம்.

இந்த சம்பவத்தில நடந்த லக்கேஜ் மிஸ்ஸிங் என்பது எல்லாருக்குமே நடக்கும் விஷயம் தான். சிலர் போனா போகுதுனு போயிடுவாங்க. ஒரு சிலரோ அதிகாரிகளிடம் நடையா நடப்பாங்க. ஆனால் நம்ம பொருளுக்கு நம்ம தான் போராடணும். அப்போ தான் சரியான நேரத்தில அது நமக்கு கிடைக்கும்கிறதான் உண்மை.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts