TamilSaaga

“சிங்கப்பூரில் இனி Taxi வானிலிருந்து வரும்” : Volocopter, Skyports நிறுவனங்கள் அறிவிப்பு – வேலைவாய்ப்பும் அதிகரிக்க அதிக வாய்ப்பு

அனுதினமும் நமது சிங்கப்பூர் பல அசத்தல் அறிவிப்புகளை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல அந்த அறிவிப்புகள் அனைத்துமே இயற்கையை பாதுகாக்கும் விஞ்ஞானத்தை சார்ந்தே இருக்கின்றது என்பது நாம் அனைவரும் பெருமைப்படவேண்டிய விஷயம். இந்நிலையில் சிங்கப்பூர் – ஏர் டாக்ஸி முன்னோடிகளான வோலோகாப்டர் மற்றும் ஸ்கைபோர்ட்ஸ் எதிர்வரும் இரண்டு வருடங்களில் சிங்கப்பூரில் வணிக விமான டாக்ஸி சேவைகளை இணைந்து தொடங்க உள்ளன என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது மெரினா பே மற்றும் சென்டோசாவில் அடிக்கடி விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்க கேட்டது Normal மசாஜ்” : ஆனா நிர்வாணமா நிற்க சொன்னாங்க – அதிர்ச்சியில் உறைந்த சிங்கப்பூர் இளைஞர்கள்

இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு எல்லை தாண்டிய விமான டாக்சி பயணங்கள், செலிடார் மற்றும் சாங்கி போன்ற பகுதிகளில் உள்ள டெர்மினல்களில் இருந்து நேரடியாக மேலாக்கா, பாதம் மற்றும் பிந்தன் உள்ளிட்ட நகரங்களுக்கு பறக்கும் வகையில் இந்த சேவைகள் விரிவடைய செய்ய்யப்படும். சாங்கி விமான நிலையத்திலிருந்து பாத்தாமுக்கு ஒரு ஏர் டாக்ஸி விமானம் பயணிக்க 20 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்று ஜெர்மன் விமான நிறுவனமான வோலோகாப்டர் தெரிவித்துள்ளது.

ஜொகூர் பாருவில் உள்ள இப்ராஹிம் இன்டர்நேஷனல் பிசினஸ் சென்டருக்கு செல்லும் ஒரு வணிகப் பயணி, காரில் அந்த இடத்திற்கு செல்ல மூன்று மணிநேரம் ஆகும் என்ற நிலையில், இந்த விமான டாக்ஸி மூலம் வெறும் 30 நிமிடங்களில் தனது இலக்கை அடைய முடியும். நேற்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 15) சிங்கப்பூர் ஏர்ஷோவில், ஏர் டாக்ஸி நிறுவனங்கள் பேசியபோது, இந்த தொழில்நுட்பம் இப்போது வணிக ரீதியாக வெளிவருவதற்கு நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் கடந்த செவ்வாயன்று, பொருளாதார மேம்பாட்டு வாரியம் (EDB) மற்றும் டெவலப்பர் JTC கார்ப்பரேஷன் ஆகியவை Seletar Aerospace Park ஐ ஒரு சாத்தியமான “மேம்பட்ட காற்று இயக்கம்” மையமாக அடையாளம் கண்டு, ஒவ்வொரு நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வோலோகாப்டரின் தலைமை வணிக அதிகாரி திரு கிறிஸ்டியன் பாயர், இங்குள்ள முதல் விமான டாக்சிகள் 10 முதல் 20 ஏர் டாக்சிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், மேலும் இந்த சேவை பொது மக்கள் பயன்படுத்தும் விதத்தில் மலிவு விலையில் இருக்கும் என்றார்.

சிங்கப்பூர்.. “அப்பா இறந்துட்டார், ஆனா தாயகம் போக முடியல” : வாடிய சக ஊழியருக்கு கைக்கொடுத்த நல்ல உள்ளம்

சிங்கப்பூர் மற்றும் பாரிஸ் தான் தனது வணிக விமான டாக்சிகள் பறக்கும் முதல் நகரங்களாக இருக்க வேண்டும் என்று நிறுவனம் விரும்புகிறது, மேலும் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளிடமிருந்து தேவையான ஒழுங்குமுறை அனுமதிகளைப் பெறுவதற்கான செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Volocopter 2030ம் ஆண்டுக்குள் 500 நேரடி ஊழியர்களை இங்கு பணியமர்த்த திட்டமிட்டுள்ளது, மேலும் 800 வேலைகளை உருவாக்கத் முயன்று வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts