TamilSaaga

அன்று தாய் சந்தித்த ஏளனம்.. கனலாய் எரிந்த மனம்.. இன்று மக்களை கியூவில் நிற்க வைத்து சாதித்த மகன் – சிங்கப்பூரின் அடையாளமாக உருவெடுத்த ‘தி ஒரிஜினல் வடை’ உணவகம்

சிங்கப்பூர் கெயிலாங் செராய்யில் (Geylang Serai) உள்ள ரமலான் கடைவீதியில், நோன்பு மாதத்தின் முதல் நாளான நேற்று (ஏப்ரல் 3) கூட்டம் மிக அதிகமாக இருந்தது. இதனால் அங்கு உணவு விற்பனை செய்யப்படும் ஒரு zone-ல் நுழைய, மக்கள் வரிசையில் நிற்பதை அமைப்பாளர்கள் தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது.

இந்நிலையில், அங்கு சூர்யா செல்வராஜா என்பவர் நடத்திவரும் ‘தி ஒரிஜினல் வடை’ எனும் கடை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

33 வயதான சூர்யாவின் குடும்பத்தினர், கடந்த 30 வருடங்களாக ‘தி ஒரிஜினல் வடை’ எனும் உணவகத்தை சிங்கப்பூரில் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, ரமலான் மாதத்தின் போது, தவறாமல் கெயிலாங் செராய்யில் ஸ்டால் அமைத்து வருகின்றனர். அந்த வகையில் இம்முறையும் அங்கு அவரது கடையில் கூட்டம் அள்ளுகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Changi விமானநிலையத்தில் வேலை : ADP License உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் – தினமும் 8 மணி நேர வேலை.. 2910 வெள்ளி சம்பளம்

இத்தனை வருடங்களாக அவரது தாய் யமுனா ராணி அந்த கடையை வெற்றிகரமாக நடத்தி வந்த நிலையில், பெருந்தொற்று காலத்திற்கு முன்பு தான், சூர்யா அதற்கு பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினார். ஆனால், அதற்குள் தொற்று உலகம் முழுவதையும் முடக்க, சூர்யாவும் செய்வதறியாது நின்றார்.

இப்போது ரமலான் நோன்பு மாதம் தொடங்கியிருக்கும் நிலையில், மீண்டும் கெயிலாங் செராய்யில், தனது தலைமையில் முதன் முதலாக கடையை சூர்யா திறந்துள்ளார் . மசால் வடை, உளுந்து வடை என்ற பாரம்பரியமான இந்திய வடையை கொஞ்சம் மாற்றி, இறால் வடைகளை விற்கத் தொடங்கிய முன்னோடிகளில் இவரது தாயாரும் ஒருவர்.

இடையில் பல வேலைகளில் ஈடுபட்ட சூர்யா, 11 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தொழிலில் முழுமையாக இறங்க முடிவு செய்தார். அப்போதிலிருந்தே வியாபாரத்தை மேம்படுத்த பல வழிகளை ஆராய்ந்து வருகிறார். சீஸ் வடை உள்ளிட்ட பல்வேறு வகையான வடைகளை சூர்யா அறிமுகம் செய்துள்ளார். ஆனால், எல்லாவற்றையும் விட இறால் வடைக்கு தான் கூட்டம் அலை மோதுகிறது.

இடையில், புரோட்டா, சாதம் உள்ளிட்டவற்றை விற்க முயன்ற சூர்யாவுக்கு தோல்வியே மிஞ்சியது. இதனால் கிட்டத்தட்ட ரூ.300,000 டாலர் வரை இவருக்கு இழப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க – “Red Light” ஏரியாவில் வலம்வந்த இளைஞர்.. கட்டிப்பிடித்து சில்மிஷம் செய்து தங்க செயினை “ஆட்டயப்போட்ட Ladyboy” – வைரலாகும் சம்பவத்தின் Video!

இளம் வயதில் தாயாருடன் சேர்ந்து வடை விற்றதால் சூர்யாவும், அவரது தாயும் கேலி, கிண்டலுக்கு ஆளானார்கள். சிறு வயது முதலே தன் அம்மாவுக்கு உதவியாய் இருந்து வரும் சூர்யா, தன் கண் முன்னாலேயே மற்றவர்கள் கிண்டல் செய்வதை பார்க்க நேரிட்டது. அப்போதில் இருந்தே, தன் தாய் தொடங்கிய இந்த வியாபாரத்தை பெரியளவில் விஸ்தரிக்க வேண்டும் என்பதே, சூர்யாவின் நோக்கமாக இருந்தது. இன்று அதை சாதித்தும் காட்டியுள்ளார்.

சிறு வயதில் எண் 32, ஜு சியாட் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளில் தாயாருடன் இறால் வடைகளை விற்ற சூர்யா, தற்போது அதே இடத்தில் பெரிய வடைக் கடையை திறந்துள்ளார்.

சிங்கப்பூரில் இந்த நோன்பு காலம் செம ஸ்பெஷலாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts