TamilSaaga

சிங்கப்பூரில் எலக்ட்ரீசியன் வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்… வொர்க் பெர்மிட்டில் போனால் கூட ப்ரோமோஷன் கிடைக்கும்? ஒருநாள் சம்பளத்தை கேட்ட ஷாக் ஆகிடுவீங்க…

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலையில் என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்கும். இந்த துறைகளில் புதிதாக படித்து முடித்திருப்பவர்களுக்கும், அனுபவம் வாய்ந்த எலக்ட்ரிஷயன்களும் எப்படி சிங்கப்பூரில் வேலை வாங்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலைக்கு வரும்போது இரண்டு வழிகளில் வரலாம். B.E முடிச்ச இன்ஜினியர்கள் S-Pass மூலம் வரலாம். ஆனால் இதில் சமீபகாலமாக ஏஜென்ட்கள் ஏமாற்றும் பிரச்னைகளும் அதிகரித்து இருக்கிறது. கட்டணமும் பல லட்சமாக இருக்கும்.

இரண்டாவது எலக்ட்ரிக்கலுக்கான skilled test அடித்து வருவது. இதில் பெரிய ஏமாற்றம் இருக்காது. டெஸ்ட் அடிப்பதால் work permitல் வரலாம். ஆனால் சம்பளம் சற்று குறைவாக இருக்கும். சிங்கப்பூரில் அதே கம்பெனியில் சில வருடம் அனுபவம் பெற்றால் உங்க டிகிரியை வைத்து ப்ரோமோஷன் வாங்கி கொள்ளலாம்.

சிங்கப்பூரில் எலக்ட்ரிக்கல் வேலையில் 3 Phase வரை ஒயரிங் வேலைகள் அதிக அளவில் இருக்கும். பைப் வேலை, மெட்டல் வேலைகள், Single line drawing, பராமரிப்பு பணி அதில் ஏற்படும் கோளாறுகளை சரி பார்ப்பது என ஏகப்பட்ட வேலைகள் இருக்கிறது.

எலக்ட்ரிஷியனுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்படும் தெரியுமா? சுமார் ஒரு நாளைக்கு $18 டாலர் வரை சம்பளம் கொடுக்கப்படும். அதாவது இந்திய மதிப்பில் மாதம் 30000 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் இருக்கும். இதுவே மேலே சொன்ன எல்லா வேலைகளும் தெரிந்த ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கே $40 வரை கொடுக்கப்பட்டும் வருகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 2000 ரூ கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆராய்ந்ததில் கிடைத்த தகவலில் தான் இந்த சம்பளம் குறித்து தோராயமாக கூறியிருக்கிறோம். சிலருக்கு இதில் சற்று மாறுபாடு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Single line drawing தெரிந்தவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை சீக்கிரமாகவே கிடைத்து விடுமாம். S-Pass மூலமாகவே சிங்கப்பூர் வரலாம். எலக்ட்ரிக்கலில் கட்டட பராமரிப்பில் உயர் பதவிக்கு செல்ல அங்கு நடத்தப்படும் F&M என்ற கோர்ஸை செய்யலாம். இது முடிக்கும் பட்சத்தில் வொர்க் பெர்மிட்டில் வந்தவர்கள் S-Pass மாறி விடலாம்.

கன்ஸ்ட்ரக்‌ஷன் பணிகளில் இருப்பவர்கள் டிப்ளமோ கோர்ஸ் ஒன்றை முடித்தால் UA certificate கிடைக்கும். இந்த கோர்ஸ் 6 மாதம் முதல் 1 வருட காலம் படிக்க வேண்டும். வார இறுதி நாட்களை கூட நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். கோர்ஸின் கட்டணமாக $3000 முதல் $4000 வரை செலவாகும். அந்த சான்றிதழ் வைத்திருப்பவர்களும் S-Pass மாறி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts