TamilSaaga

“நாங்க கேட்டது Normal மசாஜ்” : ஆனா நிர்வாணமா நிற்க சொன்னாங்க – அதிர்ச்சியில் உறைந்த சிங்கப்பூர் இளைஞர்கள்

சிங்கப்பூரில் உள்ள ஒரு மசாஜ் பார்லர் நடத்துனருக்கு S$5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, காரணம் என்னவென்றால் இரண்டு ஆண்கள் அவர்களது கடையில் வழங்கப்படும் பாலியல் சேவைகளை ஏற்றுக்கொண்டு பணம் செலுத்துமாறு அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக உணர்ந்ததால், அவர்கள் உடனைடியாக காவல்துறைக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அந்த நடத்துநர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் சிங்கப்பூரின் ரங்கூன் சாலையில் உள்ள சிட்டிகேட் குடியிருப்பில் உள்ள வெஸ்ட் வெல்னஸில் நடந்ததாக ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்.. “அப்பா இறந்துட்டார், ஆனா தாயகம் போக முடியல” : வாடிய சக ஊழியருக்கு கைக்கொடுத்த நல்ல உள்ளம்

19 மற்றும் 21 வயதுடைய அந்த இருவரும், பிப்ரவரி 10, 2021 அன்று இரவு சுமார் 10:50 மணியளவில் குறிப்பிட்ட அந்த நிறுவனத்திற்குள் நுழைந்துள்ளார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் S$50, S$10 நிர்வாகக் கட்டணத்துடன், ஒரு மணி நேர உடல் மசாஜுக்குச் செலுத்தியதாக Yahoo செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டணம் செலுத்திய பிறகு அந்த இரு ஆண்களும் தனித்தனி அறைகளுக்குள் கொண்டு செல்லப்பட்டு, முழுமையாக ஆடைகளை அவிழ்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தங்கள் உள்ளாடைகளையும் ஷார்ட்ஸையும் அவிழ்க்க மறுத்துள்ளனர்.

அப்போது மிகா லின் யி ஹுய் (49) என்ற மசாஜ் செய்பவர், 19 வயது இளைஞரின் அறைக்குள் நுழைந்து, அவரது பின் பகுதியை மசாஜ் செய்யத் தொடங்கியுள்ளார். அதனையடுத்து அந்த மசாஜ் செய்பவர் அந்த இளைஞனை திரும்பி படுக்க சொல்லி, அவரது கால்களை மற்றும் இறுதியாக பிறப்புறுப்பிணை பிடித்து மசாஜ் செய்துள்ளார். ஷின் மினின் கூற்றுப்படி, அந்த நபர் பலமுறை தலையை அசைத்து அந்த பெண்ணிடம் “வேண்டாம்” என்று கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் லின் எந்த வார்த்தையும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினார், மேலும் 44 வயதான மற்றொரு மசாஜ் செய்பவருடன் அந்த 19 வயது வாலிபர் அறைக்கு திரும்பியுள்ளார்.

லின் அந்த இளைஞனின் கைகளைப் பிடித்து அவற்றால் அவள் மார்பைத் தடவியுள்ளார், அவரோடு வந்த மற்ற பெண் அந்த இளைஞனின் பிறப்புறுப்பைத் தொட்டுள்ளார், இதைச் செய்யும்போது ​​அவர்கள் “பணம், பணம்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. அந்த நபர் முதலில் மறுத்துவிட, இறுதியில் அதை ஒப்புக்கொண்டுள்ளார். எல்லாம் முடிந்த பிறகு லின் தனது ஷார்ட்ஸிலிருந்து தனது பணப்பையை எடுத்து தன்னிடம் கொடுத்து, தனக்கு S$100 கொடுக்கச் சொன்னதாக அந்த இளைஞன் கூறியுள்ளார்.

இதுஒருபுரம் இருக்க அந்த 19 வயது நபருடன் அங்கு வந்திருந்த அந்த 21 வயது ஆடவர் அறைக்கு லின் மற்றும் அந்த 44 வயதான மசாஜ் செய்பவரும் மேலாடையின்றி நுழைந்தனர். அவர்கள் அவருக்கு மசாஜ் செய்ய முயன்றபோது அந்த நபர் மறுத்துள்ளார். அவருக்கு சாதாரண மசாஜ் மட்டுமே வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஆனால் சீன புத்தாண்டின்போது யாருக்கும் சாதாரண சர்வீஸ் செய்வதில்லை என்று கூற, அந்த 21 வயது நபர் பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

நீ பணத்தை செலுத்து நாங்கள் தேவையான மசாஜ் செய்கின்றோம் என்று மீண்டும் மீண்டும் கூற இறுதியில் அவர் ஒப்புக்கொண்டு பணம் செலுத்தியுள்ளார். அவர் S$100 செலுத்திய பிறகு, இரண்டு பெண்களும் அவரது ஷார்ட்ஸை கீழே இழுக்க முயல அந்த 21 வயது நபர் எதிர்த்துள்ளார். ஆனால் வேறு வழியின்றி 21 வயது இளைஞன் இறுதியில் அவர்கள் அளித்த சேவையை ஏற்றுக்கொண்டார். இறுதியில் வெளியில் வந்து ஒருவரை ஒருவர் சந்தித்த அந்த 19 மற்றும் 21 வயது நபர்கள் தங்களுக்கு தேவையின்றி சேவை வழங்கி பணம் வாங்கியதை உணர்ந்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

“சிங்கப்பூர் OCBC வங்கி மோசடி” : 89 வெளிநாட்டு வாங்கிக் கணக்குகளில் கட்டுக்கட்டாக சிங்கப்பூர் டாலர்கள் – SPFன் அதிரடி வேட்டை

போலீஸ் வருவதை கேள்விப்பட்ட லிம், அந்த இளைஞர்களிடம் பணத்தை திரும்ப தரை முடிவு செய்துள்ளார், ஆனால் அவர்கள் வாங்கவில்லை. இறுதியில் போலீசார் வந்து அவர்களை விசாரித்து நடந்ததை அறிந்தனர், தற்போது சரியான உரிமம் இல்லாமல் பார்லர் நடத்திய குற்றத்திற்காக லிம் என்ற அந்த பெண்மணிக்கு 5000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts