பிரபல வால்மார்ட் குழுமத்தின் டிஜிட்டல் பணம் செலுத்தும் நிறுவனமான PhonePe அதன் தலைமையகத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது என்று நெருங்கிய வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் PhonePe நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான Flipkart, சிங்கப்பூரை தலைமையிடமாகக் கொண்டு தொடர்ந்து செயல்படும் என்றும், மேலும் அதன் தளத்தை மாற்ற தற்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து PhonePe நிறுவனத்திடம் ஊடங்கங்கள் தொடர்புகொன்டு பேசியபோது, ”எங்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தை சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்று PhonePe செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
மாதத்திற்கு 100 மில்லியன் active users (MAU) என்ற அளவுடன் சுமார் 250 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது PhonePe என்பது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 2020ல் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இதில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு ஏன் PhonePe தலைமையகம் மாற்றப்படுகிறது என்பதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகியுள்ளது.