TamilSaaga

சிங்கப்பூர்.. “அப்பா இறந்துட்டார், ஆனா தாயகம் போக முடியல” : வாடிய சக ஊழியருக்கு கைக்கொடுத்த நல்ல உள்ளம்

வெளிநாட்டு வாழ்க்கை என்பது நமது வாழ்க்கையை சீர்செய்யும் ஒரு வாய்ப்பாக இருந்தாலும் இந்த தொற்று சமயத்தில் அதுவே சில நேரங்களில் கவலைமிகு விஷயமாக மாறிவிட்டது. ஆனால் ஹசன் என்ற ஒரு சக ஊழியர்களின் செயல் பல சிங்கப்பூர் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தையும் மனதையும் மேம்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், திரு ஹசன் சமீம், தனது சக ஊழியர் ஒருவர் தனது வழக்கமான பாதையில் செல்லவில்லை என்பதை போல உணர்ந்து மிகுந்த கவலையுடன் காணப்பட்டுள்ளார்.

“சிங்கப்பூர் OCBC வங்கி மோசடி” : 89 வெளிநாட்டு வாங்கிக் கணக்குகளில் கட்டுக்கட்டாக சிங்கப்பூர் டாலர்கள் – SPFன் அதிரடி வேட்டை

ஹசன் சந்தித்த அந்த சக ஊழியர் “கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக, வீட்டிற்குத் திரும்பவில்லை. இந்த நிலையில் அவரது தந்தையும் சமீபத்தில் இறந்துள்ளார். ஆனால் அதற்கும் அவரால் தாய்நாட்டிற்கு திரும்பிச் செல்ல முடியவில்லை, அதனால் அவர் மனதளவில் முழுமையாக மனச்சோர்வடைந்தார்,” என்று வங்காளதேச மின் மற்றும் கருவியாளர் திரு ஹசன் கூறினார். ஹசன் ரோட்டரி இன்ஜினியரிங் தொழில்நுட்ப வல்லுநர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் அந்த சக ஊழியர் வீட்டுக்குப் போனால் சிங்கப்பூர் சென்று வேலை செய்ய முடியாமல் போய்விடுமோ என்றும் கவலைப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு ஆங்கிலத்தில் புலமை இல்லாததால் தனது நிறுவனத்திற்கு இதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை. இந்த நேரத்தில் தான் திரு. ஹசன் தனது நண்பரின் மேற்பார்வையாளரிடம் பேசத் தொடங்கினார், மேலும் முதலாளி தனது நண்பருக்கு இரண்டு மாத விடுப்பு எடுத்து பங்களாதேஷில் உள்ள அவரது குடும்பத்தைப் பார்க்க ஏற்பாடு செய்தார்.

திரு ஹசன் 31 வயதாகும் அவர் ஒரு பியர் சப்போர்ட் லீடர் ஆவார், அவர் டிசம்பரில் ஹெல்த் சர்வ் மூலம் பயிற்சி பெற்றவர் என்பது நினைவுகூரத்தக்கது. அவர் தனது சக பணியாளர்கள் அல்லது தங்குமிட தோழர்களிடையே இத்தகைய துயரத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து அவரால் முடிந்த அளவிற்கு அவர்களுக்கு உதவினார். தனது சகாக்கள் “ஒரே மட்டத்தில்” இருப்பதாலும், எந்த மொழித் தடையும் இல்லாததாலும், அவருடன் தங்கள் பிரச்சனைகளை மிக எளிதாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவர் உணர்கிறார்.

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் கட்டுமானத் துறை.. பணியை நிறுத்திய 2,200 கட்டுமான நிறுவனங்கள் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை?

இந்த முயற்சியானது மனிதவள அமைச்சகத்தின் திட்ட விடியல் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ தொடர்ச்சியான மனநல ஆதரவு நடவடிக்கைகள் அடங்கும். ACE குழு, மனநல நிறுவனம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களான புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம் மற்றும் ஹெல்த் சர்வ் ஆகியவற்றுடன் இணைந்து இந்த அமைப்பு செயல்படுகிறது. பியர் சப்போர்ட் லீடர் பயிற்சியின் ஒரு பகுதியாக, திரு ஹசனுக்கு மன அழுத்தம், சுவாச நுட்பங்கள் மற்றும் துன்பத்தில் இருக்கும் நண்பரை அணுகி ஆறுதல் தருவது போன்ற அறிகுறிகளைக் கண்டறிய கற்றுக்கொடுக்கப்பட்டது.

சுமார் 9 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஹசன் தன்னால் இயன்ற உதவியை சக தொழிலாளர்களுக்கு செய்து வருகின்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts