TamilSaaga

சிங்கப்பூரில் விதியை மீறி உணவு தயாரித்தல் மற்றும் விற்றல் – 2 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

சிங்கப்பூரில் விதிமுறைகளை மீறி உணவு தயாரித்து விற்ற ஸ்கார்லட்டில் உள்ள உணவு கடைகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆட்மிரல்ட்டி தெருவில் ஒரு நிறுவனம் விதிமுறைகளை மீறி உணவினை தயாரித்து பார்சல் தயாரித்து விற்பனை செய்தாதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சுமார் 56 கிலோவுக்கு அதிகமான உணவுபொருட்கள் கையகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மற்ற உணவு கடைகளுக்கு உணவு தயாரித்து விநியோகம் செய்யும் உரிமை இந்த கடைக்கு இல்லை எனவும் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே போல Beach Road-ல் இன்னொரு கடையில் விதிகளை மீறி ஏற்கனவே பார்சல் செய்த மாமிசங்களை விற்பதாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர் பாதுகாப்பிற்காக ஒரு சில உணவுப்பொருள் விற்பனையை நிறுத்தச்சொல்லி உணவு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Related posts